(Reading time: 7 - 14 minutes)

“நீங்க எல்லாரும் கிளம்புங்க சனிகிழம பாக்கலாம்” என காஞ்சனா கிளம்பினார். அனைவரும் உடை மாற்றி கிளம்பினர்.

சூர்யா ஜீன்ஸ் டீஷர்ட் அதன் மேல் ஜேக்கட் அணிந்திருந்தான். சினிமா கதாநாயகனை மிஞ்சும் அழகு. வெளியே கிளம்பி வந்தவர்களில் சூர்யாவை பார்த்த சில பெண்கள் “சூர்யா என்னோடு டேடிங் வரியா . .லவ் யூ” என இளம் பெண்கள் ஆங்கலத்தில் சத்தமாக கேட்டனர். அவனும் பெண்களை பார்த்து “லவ் யூ கேல்ஸ்” எனச் சொல்லி முத்தத்தை பறக்க விட்டான்.

கராஜில் சாரு தன் கார் ஸ்டார்ட் ஆகாமல் போராடிக் கொண்டருந்தாள். “வா உன்ன ட்ராப் பண்றேன்” என்றான் சூர்யா

“இல்ல நான் பஸ்ல ..” என சொல்ல வந்தவளை முறைத்தான். அவள் மௌனமாக அவன் காரில் ஏறினாள்.

நியூ யார்க் நகரில் கார் பறந்தது. இருவரும் அமைதியாக பயணித்தனர். அவன் ஆங்கில பாட்டை போட இளையராஜா பாட்டிற்கு அவள் மாற்றினாள். அவன் எதுவும் சொல்லவில்லை.

“அந்த கரகாட்டகாரன் வண்டிய முதல்ல மாத்து” என்றான்.

“அது இன்னும் ஒரு வருஷம் தாங்கும்” என்றாள்.

“சாரு ஏண்டி இப்டி இருக்க?”

மௌனமாய் இருந்தாள்.

சாரு எப்போதும் நண்பர்களுடன் தமிழில் உரையாடுவாள். “அமெரிக்காகாரனுக்கு தமிழ் தெரியாது அதனால அவனோடு இங்லிஷ்ல பேசணும். எனக்கும் உனக்கும் தமிழ் தெரியும்ல அப்புறம் எதுக்கு இங்கிலிஷ்” என கடிந்துக் கொள்வாள். அவள் நண்பர்களுடன் தமிழில்தான் பேசுவாள். இது அவளின் எழுதபடாத சட்டங்களில் ஒன்று.

இரவாகி விட்டது. அவள் வீடு வர இருவரும் உள்ளே வந்தனர். ஒரு படுக்கை அறைக் கொண்ட சிறிய வீடு. வரவேற்பு அறையில் அவள் பரதத்தில் வாங்கிய கோப்பைகள் மெடல்கள் புகைப்படங்கள் என வரிசையாக அழகாக அடுக்க பட்டிருந்தது.

இவள் ராதை என்றால் சூர்யா கிருஷ்ணன். இப்படி சிவன் சகி, ராமர் சீதை, பெருமாள் லட்சுமி என இருவரும் ஜோடியாக பல புகைப்படங்களில் புன்னகைத்தனர். இவளுக்கு எப்போதும் அவன்தான் ஜோடி.

“தேங்க்ஸ்”  அவள் கூறி முடிக்கும் முன்

“இப்ப மட்டும் ஏன் இங்கிலிஷ் . . உன் தேங்க்ஸ் நிராகரிக்கப்பட்டது . . சாப்பிட எதாவது கொடும்மா பசிக்குது” என்றவன்.

தானே அவசரமாக சமையலறைக்குள் சென்று சான்விட்ச கொண்டு வந்து சாப்பிட்டான்.

“ஏன் டல்லா இருக்க?”  சான்விட்சை கடித்தபடி கேட்டான்

“ச்சே இல்லயே” என்றாள்

“இன்னிக்கு முழுக்க நீ சரியில்ல . . என்கிட்ட பொய் சொல்லாத” என்றான்

“ஒண்ணுமில்ல . . நீயா கற்பனை பண்ணிக்காத” அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.

“யோசிக்காம எந்த முடிவும் எடுக்காத” அவன் குரலில் ஆதங்கமும் அக்கரையும் இருந்தது.

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நான் கிளம்புறேன் . .குட் நைட்” சென்றுவிட்டான்.

அவன் கிளம்பியதும் ஹாலில் வைத்திருந்த போட்டோக்கள் மேல் அவள் பார்வை சென்றது. அத்தனை படங்களையும் பார்த்தவள் இறுதியாக இவள் சீதையாகவும் சூர்யா ராமனாகவும் பரத முத்திரையில் நின்றிருந்த படத்தில் கண்கள் நிலைத்தது. சூர்யா கண்களில் இழையோடிய காதலை அவள் உணராமல் இல்லை.

அந்த ராமனுக்கு நல்லதொரு சீதையை தானே தேட வேண்டும் என்ற எண்ணம் மனதில் மின்னலாய் தோன்றியது.

அவளுக்கு மிகவும் பிடித்த பெண் சீதை . . சீதை செய்த புரட்சியை யாராலும் செய்ய முடியாது.

சீதை கோபம், ஆத்திரம், ஆவேசம், துவேஷம், சாபம், சபதம் என எதையும் காட்டாதவள்.

தன்னவன் குழந்தையை பெற்று தந்துவிட்டு கடமை முடிந்ததென சென்றுவிட்டாள். அவள் நினைத்திருந்தாள் மீண்டும் ராமனோடு சேர்ந்து ராணியாக பட்டமகிஷியாக குழந்தைளோடு இன்பமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் எதையும் ஏற்கவில்லை. அத்தனை ஏன் போகும்முன் ராமனிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் கடமை முடிந்த அடுத்த நொடி மண்ணுக்குள் தன் தாயோடு மறைந்துவிட்டாள்.

ராமனிடம் “ஏன் என்னை கர்ப்பிணியாக இருக்கும்போது கைவிட்டாய்?”

‘உலகம் ஆயிரம் சொல்லலாம் உனக்கு என்னிடம் நம்பிக்கை இல்லயா?”

‘நான் அக்னிபிரவேசம் செய்தும் என்னை நீ நம்ப மறுத்துவிட்டாயே?”

இப்படி எந்த கேள்வியும் இல்லை . . மௌனம் எத்தனை பலமான ஆயுதம் அதைத் தானே கையில் ஏந்தினாள்.

உலகிலேயே முதன் முதலில் விவாகரத்து செய்தது சீதையாகதான் இருக்கும். இதை வெளியே சொன்னாள் பைத்தியம் என சொல்வார்கள். இப்படியெல்லாம் தான் ஏன் சிந்திக்கிறேன் என தெரியாமல் சிந்தித்தாள் சாரு. சிந்தனை ஆழ் மனதின் ஒருவகையான வெளிபாடு அதை அவள் அறியாள்.

பல எண்ணங்கள் சாரு மனதில் ஓட படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. மாற்றமில்லாத மாற்றத்தை அவள் எதிர்க் கொள்ளபோவதை அறிந்தால் சூர்யா என்ன செய்வானே என்ற பயம் அவளை உறங்கவிடவில்லை.

தொடரும் . .

Episode # 02

{kunena_discuss:1199}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.