Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்

kadhal ilavarasi

திகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா பாத்திரங்களைக் கழுவி நீர் பிடித்துக் கொண்டு இருந்தாள். நீர் நிறைந்து கொண்டிருந்த குடத்தில் தளும்பும் நீரின் வேகம் குறைந்து கொண்டே வந்தது, அச்சச்சோ இன்னும் எவ்வளவு நேரம் தண்ணீர் வருமோ என்று எல்லார் மனதிலும் இலேசான கலக்கம். மாலையில் அண்ணன் தம்பியாய் உறவாடுபவர்கள் கூட காலையில் இந்நேரம் எதிரியினைப் போலத்தான் நடந்து கொள்வார்கள். வீட்டுக்குள்ளேயே இப்படி நாட்டுநிலைமையைக் கேட்கவா வேண்டும் ? அதுதான் தினமும் செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே ?!

நகரும்மா நாங்கயெல்லாம் தண்ணீ பிடிக்கவேண்டாமா ? குழாயடிக்கிட்டே நின்னு என்ன கனவு காண்றே ? கட்டைக் குரலில் பக்கத்துவீட்டு பரதேவதை அரட்டிட நகர்ந்தாள் இந்திரா இப்போது ஆரம்பித்தால்தானே தம்பி, தங்கையை பள்ளிக்கு அனுப்ப முடியும். விருந்து சமையல் இல்லையென்றாலும், மாதம் முதல் பத்து நாட்களுக்கு சாதத்தோடு குழம்பும் ஒற்றைக் காய்கறியும் சமைத்துவிடலாமே ?! மாதக் கடைசியில் ரசமும், மோரும் அத்தோடு துவையலும் காலைச் சமையலுக்கு மாதத்தின் வாரக் கடைசியாகையில் இட்லிக்கு ரேஷன் அரிசி ஒரு குண்டுமணி கூட இல்லாத நிலையில் வரகு அரிசிக் கஞ்சியும், வெள்ளை வெங்காயமும்தான் ! சிலசமயம் சின்னது இரண்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாலும், தங்கை உத்ரா எப்போதுமே எதையும் கேட்பதில்லை குடும்ப நிலைமையினை அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள். 

அத்தனை கஷ்டப்பட்ட குடும்பம் இல்லையென்றாலும் அப்பாவின் மறைவிற்கு பிறகு சராசரிக்கும் சற்று கீழிறங்கிதான் போனது அவர்களின் நிலை ! அதிலும் அம்மாவிற்கு எதிர்பாராவிதமாய் வந்துவிட்ட முடக்குவாதம் அப்போது கைகொடுத்தது இந்திராவின் தையல்கலைதான் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு மிஷினில் உட்கார்ந்தால் நேரம் காலம் பார்ப்பது இல்லை. ஏதோ மனதின் விரக்தியில் இன்றே எல்லாம் முடிந்துவிட்டதைப் போன்று ஆவேசமாய் அவள் தைப்பதைப் பார்க்கும் போது உத்ராவிற்கு மனதிற்கு சற்றே வலிக்கும் எந்தப் பாவத்தை தீர்க்க இவள் தன்னையே செருப்பாய் தைத்து உழைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று தோன்றும். காலம்தான் சிலரை எப்படி மாற்றிவிடுகிறது இன்று பொறுப்பான அக்காவாய் தாய்க்கு பணி செய்யும் மகளாய், இருக்கும் இந்திரா ஆறுவருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாள். அந்த மதர்ப்பும் திமிரும் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதே ?! அந்த ரணங்களோடு வந்தவளை அரவணைத்து கொண்டாலும் இந்நாள் வரையில் தங்கையோ தாயோ ஏன் பொடிசுகள் கூட கீறிக் காட்டவில்லையே ?! இதற்கெல்லாம் காரணம் இளையவள் உத்ராதான். 

தாயும் பிள்ளையுமாய் இருந்தாலும் எல்லாருக்குள்ளேயும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்க வேண்டும் அதை கீறிப் பார்ப்பது இங்கிதம் இல்லை என்ற எண்ணம் உடையவள். அந்த வரையில் சிவகாமி அம்மாள் பெற்ற மூன்று பெண்களுமே அன்பில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை. தம்பி மணி இரண்டும் கெட்டான். 15வயது அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிப்பதைக் குறைத்துக் கொண்டாலும், தனக்கு மட்டும் எதுவும் கிடைப்பதில்லை என்று கழுத்து மட்டும் குறை பேசுபவன் இப்படிப்பட்ட குடும்பத்தின் இரண்டாவது மகள் தான் உத்ரா. ராஜயோகம் கொண்ட பெயர்தான் ஆனால் பெயரில் இருந்தது வாழ்வில் இல்லையே ? குடும்ப நிலையை யாரும் உரைக்காமலே அறிந்துகொண்டவள். 12வுடன் படிப்பை நிறுத்தி ஒரு துணிக்கடையில் வேலை செய்து கொண்டே படித்து பட்டம் பெற்றவள். இப்போதும் ஒரு வேலைக்கான அனுமதிகேட்டுதான் அவள் தாயிடம் வந்திருப்பதே. மற்றநேரங்களை விடவும், காலைவேளைகளில் அன்னை சிவகாமியின் கால்களுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் பண்ணும்போது தான் வேண்டிய விஷயங்களை விவாதிப்பது பிள்ளைகளின் வழக்கம். 

வீட்டின் நிர்வாகம் பிள்ளைகளின் கைகளில் விழுந்துவிட்டாலும், அன்னையுடன் சேர்ந்துதான் அவர்கள் எல்லாவற்றையும் விவாதிப்பது. சிறுவயதிலேயே வீட்டில் என்ன பேசினாலும் எதைப்பற்றி விவாதித்தாலும் பிள்ளைகளையும் சேர்த்துகொள்ளவேண்டும் குடும்ப நிலைமை அதன் நேர்த்தி பிள்ளைகளுக்கு தெரிந்தால் தான் தானும் இந்தக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினன் என்ற ஒட்டுதல் இருக்கும் என்றெல்லாம் சிவகாமி பேசும்போது அதையே ரசித்துக்கொண்டு இருப்பாள் உத்ரா. எத்தனையோ நாள் தந்தையின் அரைவேக்காட்டுக் கத்தல்களையும், போதையின் கோபத்தையும்,காமத்தையும் தாங்கிக்கொள்வதை தன் பிள்ளைகளிடம் இருந்து மறைத்து விட்டாலும் அம்மாவின் வலி மிகுந்த வார்த்தைகளும், கண்களில் அதிகம் காய்ந்து போயிருக்காத கண்ணீர் கோடுகளும் அதை உரைத்துவிடும். 

உத்ரா நம்ம கோவிந்தன் மாமா ஒரு வரன் சொல்லிட்டு போயிருக்கார் ஒரே பையனாம் மளிகைகடை வைத்திருக்காராம். அவ்வளவா படிப்பில்லைன்னாலும் எந்த கெட்டபழக்கமும் இல்லைன்னார் வர்ற ஞாயிற்குகிழமை பெண் பார்க்க வர்றதாய் சொல்லியிருக்காங்க நீ என்ன சொல்றே ? 

நம்ம குடும்பம் இப்போ இருக்கிற நிலைமைக்கு எனக்கு கல்யாணம் அவசியமாம்மா ? நீங்க புரிஞ்சிதான் பேசுறீங்களா ? ஏற்கனவே கல்யாணம் செய்திட்ட அக்காவோட நிலைமையை பார்த்தேயில்லை, இன்னும் எனக்கும் கல்யாணம் பண்ணி நானும் ஒரு பிள்ளையைச் சுமந்திட்டு வந்து நிக்கணுமா என்ன?

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்Thenmozhi 2018-05-31 02:20
Interesting start ma'am.

oru yatharthamana kudumbathai parka mudiyuthu.

Uthra select seithirukum velai enna??

waiting to read abt it ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்saaru 2018-05-25 14:32
Nalla thodakam lathu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்sasi 2018-05-20 18:08
சூப்பராயிருக்கு இந்த அத்தியாயம். :dance:
Reply | Reply with quote | Quote
# காதல்இளவரசிலதாசரவணன் 2018-05-20 18:18
:thnkx: Quoting sasi:
சூப்பராயிருக்கு இந்த அத்தியாயம். :dance:

நன்றி சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்AdharvJo 2018-05-20 14:05
Paraparapana start lata ma'am :clap: :clap: uthra oda will power superb :hatsoff: look forward for next update. Thank you and keep rocking (y)
Reply | Reply with quote | Quote
# காதல்இளவரசிலதாசரவணன் 2018-05-20 18:19
Quoting AdharvJo:
Paraparapana start lata ma'am :clap: :clap: uthra oda will power superb :hatsoff: look forward for next update. Thank you and keep rocking (y)

நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்mahinagaraj 2018-05-20 13:39
:clap: romba nalla irukku...... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# காதல்இளவரசிலதாசரவணன் 2018-05-20 18:20
Quoting mahinagaraj:
:clap: romba nalla irukku...... :clap: :clap:
:thnkx:

நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்madhumathi9 2018-05-20 04:07
:clap: nalla thodakkam. (y) waiting toread more. :thnkx: 4 this epi & story. :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்லதாசரவணன் 2018-05-20 18:15
​யQuoting madhumathi9:
:clap: nalla thodakkam. (y) waiting toread more. :thnkx: 4 this epi & story. :clap: :thnkx:

நன்றி :thnkx: Quoting madhumathi9:
:clap: nalla thodakkam. (y) waiting toread more. :thnkx: 4 this epi & story. :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # காதல்இளவரசிலதாசரவணன் 2018-05-20 18:17
மிகவும்எதிர்பார்ப்புக​ளை​கொண்டநாவல்இது
காதல்,கடல்,பவளப்பா​றைகள்,சஸ்​பென்ஸ் என்றுகுடும்பக்க​தை​யோடுபயணிக்கப்​போகும்உத்ரா​வைஉங்களுக்குநிச்சயம்பிடிக்கும்உங்கள்கருத்துக்களுக்காககாத்திருக்கி​றேன்
Reply | Reply with quote | Quote
# RE: காதல்இளவரசிThenmozhi 2018-05-31 02:21
Looking fwd to read it ma'am (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top