(Reading time: 8 - 15 minutes)

இப்போதான் கமலி கல்யாணம் முடிவாயிருக்கு நம்ம கஷ்டம் உணர்ந்து என்னதான் நித்திலன் வீட்டில் ஏதும் வேண்டான்னு பெருந்தன்மையா சொன்னாலும் நாமும் கொஞ்சமாவது செய்ய வேண்டாமா எல்லாத்தையும் யோசிச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். முதல்ல தம்பி படிப்பு முடியட்டும், அவன் குடும்பத்தை தாங்குற சூழ்நிலை வந்தபிறகு நான் என் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறேன். 

அம்மா உன் கல்யாணப்பேச்சை இப்ப ஆரம்பிக்கறதுக்கு காரணமே நீ தேர்ந்தெடுக்கிற வேலைதான். அது வேணாம் உத்ரா இத்தனை ஆபத்தான வேலையை நீ கையிலெடுக்கணுமா உத்ரா., இன்னும் கொஞ்சநாள் இப்போ பார்க்கிற வேலையைப் பாரு, என்னோட தையல் தொழிலும் இப்போதான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு அதனால........அம்மா சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது, கொஞ்சம் யோசிச்சு செய்யுடி ? எத்தனையோ கஷ்டத்திலும் உடன்பிறந்தவ நீ ஒருத்தி கூட இருக்கிறங்க நிம்மதியும் எனக்கு கிடைக்காதா ? 

அக்கா அம்மா பயப்படறதுல ஒரு நியாயம் இருக்கு, உனக்கு என்னைப் பற்றி நல்லாத்தெரியும். நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்னா அதுக்கு முன்னாடி எத்தனைதரம் யோசிச்சு இருந்திருப்பேன், நம்மோட தேவைக்கு இதுதான் சரியா இருக்கும். யார் எப்படி வேணுன்னா போங்கன்னு கல்யாணம் பண்ணிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாதுக்கா, எனக்கு நீயும் அம்மாவும் தம்பி எல்லாரும் முக்கியம், பக்கவாதத்தில் இருக்கிற அம்மா, இரண்டு கெட்டான் தம்பி, முதுகொடிய வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நீ இதையெல்லாம் பார்த்திட்டு நான் மட்டும் சந்தோஷமா வாழ முடியமா ? உறுத்தல் இல்லாத வாழ்க்கை எனக்கு வேணும் அக்கா. தயவுசெய்து என்னையாரும் கட்டுப்படுத்தாதீங்க என் மேல நம்பிக்கை வைச்சு அனுப்பிவையுங்க ஆபத்து எங்கேதாம்மா இல்லை. சாப்பிடும் விக்கி செத்தவங்க எத்தனை பேர். எனக்கு ஆயுள் கெட்டி, கவலைப்படாம அனுப்பி வைம்மா. மேலும் நான் போறதுன்னு முடிவு எடுத்தாச்சு இனிமேல இதைப் பத்தின விவாதம் வேண்டாம் அக்கா சாப்பாடு எடுத்து வை எனக்கு மெடிக்கல் செக்கப் இருக்கு சட்டென்று பேச்சைக் கத்தரித்துவிட்டு செல்லும் தங்கையை கலக்கத்துடன் பார்த்தவாறு அன்னையின் அருகில் சென்றாள் இந்திரா.

இத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என்று மனம் பதைத்தது. எனக்கு குடும்பம் முக்கியம் என் சுகம் முக்கியமில்லை என்று சொல்லும் அந்த இருபத்தியொரு வயது பெண்ணிடம் இருக்கும் நேர்த்தி மன உறுதி அன்று தனக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது. சம்பாதித்து போடாவிட்டாலும் வீட்டுக்கு ஒரு ஆண்மகன் தாயின் பொட்டிற்கு காவலாய் இருந்த தந்தையின் உயிருக்கு அல்லவா எமனாகிப்போனாள் அவள். கடந்த காலத்தை எண்ணியெண்ணி வேதனைப் படும் நிலைதானே அவளுக்கு, அதை மறக்கத்தானே அவள் தையல்வேலையில் மூழ்கியிருக்கிறாள். ஆனாலும் நடந்துவிட்ட தவற்றை இனி சரிசெய்ய இயலாது, அதற்கு பதில் தங்கையிடம் சற்று மனமாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதுதான் என்று அமைதிகாத்தாள். நீங்க கவலைப்படாதீங்கம்மா உத்ரா என்னைவிட தெளிவான பொண்ணு அவளுக்குத் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெம்பு இருக்கு. இருந்தாலும் நான் மறுபடியும் பேசிப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கஞ்சியை அன்னைக்குப் புகட்டினாள் இந்திரா. 

தொடரும்...

Episode # 02

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.