(Reading time: 10 - 19 minutes)

"சொல்லுடி! இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லு!" மிரட்டினார்.அப்போதும் மௌனம்!! அசோக்கின் மனம் பலவீனமானது!!

"வேணாம்!நான் போயிடுறேன். அவங்களை கட்டாயப்படுத்தாதீங்க!என்னால எந்தத் தொல்லையும் வராது!நான் போறேன்.வரேன் சார்!" இறுதியாக ஒருமுறை தன்னவளை...இல்லை...சிவன்யாவை பார்த்தான் அவன். அவளிடம் இப்போதும் எச்சலனமுமில்லை. விரைந்து வெளியேறி அவ்விடத்தை தியாகம் செய்தான் அசோக் நிரந்தரமாய்!!!!அனைத்தும் ஒரு முடிவுக்கு வர காத்திருந்தது.

"பார்த்தீங்களா?எவ்வளவு மோசடி வேலை!" கணவனிடம் குறை கூறினார் அவர்.

"நீ பண்ணது தப்பும்மா!இப்படியா ஒருத்தரை அவமானப்படுத்துவ!"

"நீங்க பேசாதீங்க!உங்களுக்கு என்ன?நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகுறது?"பேசிக்கொண்டே போனார் அவர்.

"யாரைக் கேட்டு அவர்கிட்ட இப்படி நடந்துக்கிட்டீங்கம்மா?"அவ்வளவு நேரம் பொறுமை காத்தவள் இதழ் மலர்ந்தாள்.

"என்னடி சொல்ற?என்ன என்கிட்டயே அதிகாரமா பேசுற?"

"உங்கக்கிட்ட தான் பேசுறேன்னு தெரியுதுல்ல, பதில் சொல்லுங்க!"சரிக்கு சமமாய் நின்றாள் சிவன்யா. இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று வந்தனர்.

"இந்தக் கல்யாணம் நடக்க கூடாது!"

"அதை நான் சொல்லணும்,அவர் கூட வாழப் போறது நான்! வேற யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை.அவரை மறந்துட்டு வேற ஒருத்தனுக்கு மனைவியா என்னால போக முடியாது!"

"ஓ...!மறக்க முடியாதா? மறக்க முடியாத அளவுக்கு அவன் உன்னை என்னப் பண்ணான்?" அவரின் பேச்சு வரம்பு மீறியது.

"இரண்டுப் பேரும் விரும்பி இருக்கீங்க அவ்வளவு தானே, ஒன்று சேர்ந்து வாழ்ந்த மாதிரி பேசிட்டு இருக்க!"

"மீனா!"அவ்வளவு நேரம் கட்டுக்குள் இருந்த ஆத்திரத்தை கட்டை உடைத்து, தன் மனையாளை ஓங்கி அறைந்து வெளிப்படுத்தினார் உதயகுமார்.

சிவன்யாவின் விழிகளில் அவ்வளவு ஒரு வெறுப்பு!!

"என்னையே அடிக்கிற அளவுக்கு வந்தாச்சா?அடிங்க..!வேணும்னா கொன்னுடுங்க! என் விருப்பத்தை மீறி இருக்கணும்னா இவ என் மகளே இல்லை! இந்த வீட்டில் இவ இருக்கக் கூடாது!"

"ஏ...!நீ என்னடி சொல்றது?இது என் வீடு!இவ என் பொண்ணு!"

"இல்லைப்பா!" அவளது பதில் உதயகுமாரை திடுக்கிட வைத்தது.

"இது என் வீடு இல்லை!"

"கண்ணா!என்னம்மா சொல்ற நீ?"-அவள் அமைதியாக தனதறைக்கு சென்றாள்.பத்து நிமிடம் கழித்து கீழிறங்கி வந்தவள கரத்தில் ஒரு பெட்டி இருந்தது.

"கண்ணா!என்னம்மா இதெல்லாம்?"

"நான் என் வீட்டுக்குப் போறேன்பா!"

"ம்..எந்த வீட்டை மகாராணி கட்டி வைத்திருக்காங்களாம்?"

"என் புருஷன் வீடு இருக்கு!" ஒரே போடாய் போட்டாள் அவள்.

"நீங்க உங்க புருஷன் வீட்டை உரிமை கொண்டாடலை?எனக்கும் உறவுன்னு ஒருத்தர் இருக்காரு!உங்க பேச்சை மீறி நான் போறேன்! நீங்களா கூப்பிடுற வரைக்கும் இந்த சிவன்யா இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டா!"என்று ஓரடி எடுத்து வைத்தவள்,

"என்ன சொன்னீங்க?கூட வாழ்ந்தவ மாதிரி பேசுறேன்னா?ஒருநாள் வாழ்ந்தவள் இல்லை, அவரை நினைப்புல சுமந்துட்டு வாழ்க்கை முழுசும் வாழப் போறேன்! என்ன சாபம் கொடுக்கணுமோ கொடுத்துக்கோங்க." என்றாள் வெறுப்பாக!!

"இந்த வீட்டைவிட்டு நீ போனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்." அடுத்த ஆயுதம்!!!

"தன்மானத்தை இழந்து இந்த வீட்டுல வாழுறதுக்கு நீங்க சாகுறதுக்கு முன்னாடி எனக்கு காரியம் பண்ணிடுங்க!நான் இறந்ததுக்கு அப்பறம் யார் என்ன ஆனாலும் எனக்கு கவலை இல்லை!"என்று தன் தந்தையின் பால் திரும்பினாள்.

"நான் வரேன்பா!"அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினாள்.

"கண்ணா!"

"கவலைப்படாதீங்க!உங்க மருமகன் உங்களுக்கு இணையா என்னைப் பார்த்துப்பாரு!"என்றாள் கண்ணீருடன்!!

அவர் தடை செய்யவில்லை. மனித வாழ்வில் அனைவரும் ஏற்படும் முக்கியத்திருப்புமுனை ஒன்று உள்ளது. இன்று அதன் முடிவை சிவன்யா எடுத்துவிட்டாள்.

தந்தையின் ஆசிப்பெற்று பிறந்த வீட்டைவிட்டு வெளியேறினாள் அவள், அவளது இல்லகத்தைத் தேடி!!

தாயின் முன்னிலையை என்றும் சுகதுக்கத்தில் நாடுபவன், இன்று மௌனியாகி மெத்தையில் உறக்கம் கொள்ளாது தவித்திருந்தான்.அனைத்தையும் காட்டிலும் சிவன்யாவின் மௌனம் அவனை அதிகமாக இம்சித்தது. நீண்ட நேரமாய் உறக்கத்துடன் போராடி, உறக்கம் தொலைத்து வேறு வழியே இல்லாமல், எழுந்து கூடத்திற்கு வந்தான். கண்களை மூடி சோபாவில் தலை சாய்த்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.