(Reading time: 10 - 19 minutes)

சில நிமிடங்கள் கழித்து, செவிகளில் கொலுசொலி முழங்க  கண்திறந்துப் பார்த்தான். உக்கிர கோலத்தில் கையில் பெட்டியுடன் எதிரில் நின்றுக் கொண்டிருந்தவளை காண, ஒரு நொடி  திக்கென்றது அவளுக்கு!!

"சிவன்யா!"-அவன் எழ முயல, தன் கொணர்ந்த பையை அவன் மேல் எறிந்தாள் அவள்.

"ஆ..!இப்படி தான் பொண்டாட்டியை விட்டுட்டு வருவாங்களா?"

".................."

"நான் அவங்கக்கிட்ட சொல்லிட்டு வீட்டைவிட்டு வந்துட்டேன்!" எங்கோ வெறித்தப்படி கூறினாள் அவள்.

"என்னம்மா சொல்ற?"அதிர்ந்துப் போனான் அவன்.

"என்ன?ஆ?என்ன?என் வீட்டுக்கு நான் வந்திருக்கேன்.இப்போ என்னங்கிறீங்க?"

"சிவா!இது தப்பு!நீ முதல்ல கிளம்பு!"

"என்னால முடியாது!இது என் வீடு! என்னை இங்கிருந்துப் போக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை!"

"மா!"

"பேசாதீங்க! கொஞ்ச நஞ்சம் பேச்சா பேசுனீங்க? உங்க மேலே அவ்வளவு கோபத்துல இருந்தேன். இஷ்டத்துக்கு பேச வேண்டியது! அன்னிக்கு சொன்னது தான் இன்னிக்கும், நான் உங்க மனைவி! யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது!" பொரிந்துத் தள்ளினாள் அவள்.

அவனோ சிலையாய் உறைந்திருந்தான்.

"சாப்பிட்டு இருக்க மாட்டீங்களே!"

"ம்ஹூம்..!"

"தெரியும்! இப்படி தான் பண்ணுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன். கஷ்டமோ கோபமோ சாப்பாட்டு மேலே தான் காட்டுவாங்களா?யாரும் கேட்க மாட்டாங்கன்னு தைரியம்!" புலம்பிக் கொண்டே சமையலறைக்குள் சென்று அவனுக்கு உணவை எடுத்து வந்தாள்.

"சாப்பிடுங்க!" சப்பாத்தியை பிய்த்து அவனுக்கு ஊட்டிவிட நீட்டினாள். கண்கள் இரண்டும் கலங்கிப்போயின அவனுக்கு!!ஆனால், மனம் தெளிவடைந்திருந்து. நமக்கென ஒரு சொந்தம் நிரந்தரமாய் உள்ளது என்ற தெளிவு அது!!! அவள் அளித்த உணவை உண்டான் அவன்.

"நீ சாப்பிட்டியா மா?"

"நான் கோபத்துல இருக்கும் போது சாப்பிட மாட்டேன்!"

"என்னால தானா?"

"................." மௌனம் சாதித்தாள்.அவளிடம் இருந்து உணவை வாங்கியவன்,அவளுக்கு ஊட்டி விட வந்தான்.

"எனக்கு வேணாம்!"

"நான் கொடுத்தா சாப்பிட மாட்டியா?" பாவமாய் கேட்டான் அவன். அவன் குரலில் இருந்த கோபம் அனைத்தும் பறந்துவிட, அவன் அளித்த உணவினை உட்கொண்டாள்.

"நல்லா யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கியா?என் கூட வாழுறது கடினமான வாழ்க்கையா இருக்கும்!"

"நீங்க கூட இருக்கும் போது எனக்கு எந்த பயமும் இல்லை." உறுதியாக இருந்தாள் சிவன்யா.

அவனிடம் எந்த ஒரு வார்த்தையுமில்லை.

"ரொம்ப நாள் இப்படியே இருக்க முடியாது! சீக்கிரம் கல்யாணத்துக்கான ஏற்பாட்டை பண்ணுங்க!" அவள் அன்புடன் கூறுகிறாளா?அதிகாரம் செய்கிறாளா?காதலில் மட்டும் அதிகாரங்களும் அடிபணிய தான் செய்கின்றன, அடிபணிய வைக்காமல்!!!

"நான் சொல்றதை நம்புங்கண்ணா! நான் சொன்னது நிஜம்! உங்களுக்கு ஒரு பையன் இருக்கான்.சிங்கம் மாதிரி! உங்களுக்கும், தர்மா அண்ணிக்கும் பிறந்த குழந்தை உயிரோட தான் இருக்கான். அன்னிக்கு நான் அவங்களை காப்பாற்றி அனுப்பினதும், அவங்களுக்கு ஒரு பையன் பிறந்திருக்கான்!" கண்ணீர் மல்க கூறினார் நவீன் குமார். இத்தனை யுகங்களாய் இருந்த வேதனை முற்றுப்பெற்ற குதூகலம் சூரிய நாராயணனுக்கு!!கண்ணசைவால் அவன் அடையாளத்தை வினவினார் அவர்.

"அதர்வ்வை அரஸ்ட் பண்ணது அவன் தான்! அசோக் குமார், கலெக்டரா இருக்கான்!" விழிகளை மூடித் திறந்தார் அவர். அன்று தனது மோதிரத்தை அளிக்க வந்த உருவம் கண்முன் வந்து சென்றது. அன்றே சாயல் தெரிந்திருந்தால், அவன் பாதம் பணிந்து மன்னிப்பு வேண்டி இருப்பேன் என்றது மனம்.

"த....த....தர்...தர்ம்...தர்ம..தர்மா?" குளறியப்படி வினவினார் அவர். கனத்த மௌனம்!!இக்கேள்விக்கு இளையவரிடம் பதில் இல்லை.

"அண்ணி இறந்துட்டாங்கண்ணா!" சப்த நாடியும் ஒடுங்கிப் போனது அவருக்கு, இதயத்துடிப்பு நின்றப்பின் நடைப்பிணமாகவா இத்தனை நாட்களாய் உழன்றுக் கொண்டு இருக்கிறாய் சாட்டை சொடுக்கியது மனம்!!!

Episode 11

Episode 13

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.