ஹரிஷ் அனந்திதாவை பார்க்க பார்க்க ப்ரீத்தியால் தன் கோபத்தை கட்டுபடுத்தமுடியவில்லை.
அதனால் கோபம் கொண்டு பிரதீப்பிடம் வந்தவள் அவன் பார்வை அனந்திதாவிடம் செல்வதைப் பார்த்து அவனை உசுப்பேத்திவிட்டாள்.
“அனந்திதா அழகா இருக்காதான?” என்றாள்.
“ஆமாம் !!” என்றான் கண் எடுக்காமல். அப்பறம் தான் ப்ரீத்தி தன்னை பார்த்து சிரிப்பதை உணர்ந்து அவள் முன் மாட்டிகொண்டதால் என்ன சொல்வது என தெரியாமல் அவளை பார்த்தான்.
“பிடிச்சிருந்தா போய் சொல்லு பிரதீப்... ஆஸ்க் போர் டான்ஸ்? “ என்று கூறி அவனை அனுப்பினாள்.
“ஆர் யு சூர்? ஷி வில் அச்செப்ட் ஓர் நாட்?” என்றான் கேள்வியாக.
“ஜஸ்ட் ட்ரை !!... ஆல் தி பெஸ்ட்... !! “ என்று அனுப்பி வைத்தாள்.
அவன் அனந்திதாவிடம் பேச போனான்.
“ஹாய் அனந்திதா !!... யுவர் லூக்கிங் கார்ஜியாஸ்... ஷால் வி டான்ஸ்..?” என்று தன் முன் இருப்பவனிடம் மறுக்கவும் தோன்றவில்லை. இது கார்பரைட் கல்சர் என்பதால் இது எல்லாம் சகஜம் என்று தெரியுமாதலால் ஒத்துக் கொண்டாள்.
ஆனால், அவன் பெண்களிடம் ஒரு மாதிரி பிஹவ் செய்வான் என்பதை இவள் அறியவில்லை. அங்கிருந்த சிலருக்கு இது தெரியுமாதலால் அவர்கள் தங்களுக்குள் பேசிகொண்டனர். அதை பக்கத்தில் இருந்த ஹரிஷ் கேட்டுவிட்டான்.
ப்ரீத்திக்கும் இது தெரியும். அனந்திதா எப்படி ரியாக்ட் செய்வாள் என்பதை பார்க்கலாம் என்று ஜூஸ் என்று நினைத்து மதுவை அருந்திக்கொண்டு வேடிக்கை பார்த்தாள்.
ஹரிஷ் அனந்திதாவிடம் நெருங்கும்முன் அவர்கள் டான்ஸ் ப்ளோரில் சென்றுவிட்டனர். அவளிடம் செல்ல வேண்டும் என்பது மட்டும் அவனுக்கு தோன்றியது.
அப்பொழுது அருகில் ஜூஸ் என்று நினைத்து குடித்துவிட்டு பாதி போதையில் இருந்த ப்ரீத்தியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான் ஹரிஷ்.
முதலில் அதிர்ந்த அவளும் ஹரிஷைப் பார்த்து சந்தோசம் அடைய அவனுடன் ஆட தொடங்கினாள். ஹரிஷோ அவளை சிறிது கூட கண்டுகொள்ளாமல் அனந்திதாவின் மீதே கண் பதித்திருந்தாள்.
முதலில் நார்மலாக தொடங்கிய நடனம் பிரதீப்பின் கரம் அத்துமீற தொடங்கவும் அவள் மறுக்க தொடங்கினால் அவனிடம். ஆனால், அவன் அதனை கண்டுகொள்ளாமல் அவளிடம் நெருங்கினான் மேலும்.
அவள் கோபமாக தள்ளி விட முயன்றாள் அவனை. அவனும் அப்போதுதான் அதனை கவனித்தான். எந்த பெண்ணும் அவனிடம் இவ்வாறு நடைபெற்றதில்லை என்பதால் அவன் கோபம் கொண்டான்.
நிலைமை கைமீறி போகும்முன் ஹரிஷ் டான்ஸ் பார்ட்னர்சை மாற்றி கொண்டான். அனந்திதா அவனிடமும் ப்ரீத்தி பிரதீப்பிடமும் ஆட தொடங்கினர்.
அவன் அவ்வாறு மாற்றவும் அனைவரும் அவர்களை கவனிக்க தொடங்கினர். அதனை உணர்ந்த இவர்களும் ஆட தொடங்கினர்.
ப்ரீத்தி போதையில் இருப்பதை உணர்ந்தான் பிரதீப். பின்பு அனைவரின் முன்பும் அவமானபடாமல் இருக்க அவனும் அவளைப் பற்றி கொண்டு ஆட தொடங்கினான்.
ப்ரீத்தி மயக்கத்தில் ஹரிஷ்தான் ஆடுகிறான் என்றெண்ணி பிரதீப்புடன் மேலும் இழைந்தாள். தன்னை மறந்த அவள் ஒரு கட்டத்தில், ஆட மாட்டாள் என்பதை அறிந்த அவன் அவளை அழைத்துக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அனந்திதாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான் அவன் ஒன்றை கவனித்தான். அனந்திதா தன்னிடம் காட்டாத நெருக்கம் ஹரிஷிடம் காட்டிக் கொன்டிருந்தாள். முதலில் கோபம்கொண்டான்.
பிறகுதான், அவன் புரிந்துக்கொண்டான் இருவரும் தங்களை மறந்து ஒருவரிடம் மற்றவர் தொலைந்துபோயிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.
பிரதீப்பிடம் ஒரு நல்லா விஷயம் இருந்தது. காதலிக்கிறவர்களையும் மணமானவர்களையும் அவன் தொந்தரவு செய்யமாட்டான் எப்பொழுதும்.
இப்போது அவன் முடிவெடுத்தான் அனந்திதாவை அவன் எப்பொழுதும் தொந்தரவு செய்யக் கூடாது என்று இதை அறியாது ப்ரீத்தி செய்த ஒரு செயலால் பிரதீப்பின் கடும் கோபத்திற்கு ஆளானாள்.
அவர்கள் நடனம் ஆடி முடித்ததும் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். அவர்கள் அப்பொழுதுதான் நிகழ் உலகத்திற்கு வந்தனர். அப்பொழுதும் ஹரிஷ் அவளை அவள் போக்கில்விட்டு சென்றான்.
அனந்திதா தான் அதிர்ச்சியில் இருந்தாள். தன்னைசுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல். மித்திலாதான் அவளை எப்படியோ அழைத்து சென்றாள் அவள் அறைக்கு.
ப்ரீத்தி, பிரதீப்பை ஹரிஷ் என்று நினைத்துக்கொண்டு அவனிடமே நெருங்கி அமர்ந்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். அவனும் அவள் தனக்கு நல்ல தோழி என்றும் உறவினர் என்ற எண்ணத்தில் தன் இல்லத்திற்கு அழைத்து சென்றான்.