அவளை படுக்கையில் விட்டுவிட்டு சென்றவன் கையைபிடித்துக்கொண்டு ஹரிஷ் என்றெண்ணி உளறிக்கொண்டிருந்தாள்.
“ஏன் ஹரிஷ்? உனக்கு அந்த அனந்திதாவை பிடிச்சிருக்கு? என்கிட்டே அப்படி என்ன இல்லை. அவளவிட அழகுதான் நான்.. நானும் பணக்காரிதான்.. உனக்காக நான் என்ன என்ன பணியிருக்கேன் தெரியுமா?” என்று லிப்ட்டில் தான் ஏற்படுத்திய அச்சிடேன்ட் முதல் பிரதீப்பிடம் ஏற்பட்ட நட்பு மற்றும் இன்று நடைபெற்ற பார்ட்டி வரைக்கும் அனைத்தும் கூறிவிட்டாள்.
அதனைக் கேட்டு பிரதீப் அதிர்ச்சியாகினான். அவனுக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. அவனுக்கு தோன்றியது ப்ரீத்தி நல்லவளே, ஹரிஷிடம் ஏற்பட்ட காதலால் தான் இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு புரியும்மாதிரி சொல்லி புரியவைத்தால் அவள் திருந்திவிடுவாள் என்று எண்னினான். ஆனால், ப்ரீத்தி ஒன்றும் அப்படி இல்லையே. அவள் திருந்துவதற்கான முயற்சியை அவளின் பெற்றோர்களே விட்டுவிட்டனர். அப்படி இருக்கையில் அவளுக்கு பிரதீப் மற்றும் எம்மாத்திரம்.
சிறிது நேரம் யோசித்தவன், அவளை படுக்கையில் விட்டுவிட்டு வேறொரு அறைக்கு சென்றுவிட்டான். அவன் பெரிய பணக்காரனும் கூட. அவனுக்காக இரண்டு வீடுகள் இந்த லண்டனில் உள்ளது என்பது யாரும் அறியா உண்மை. அவனது பணிக்காக மட்டுமே அவனுடைய தந்தை அவற்றை வாங்கி பரிசளித்தார்.
விடிந்த பிறகு எழுந்த ப்ரீத்தி தான் ஏதோ ஒரு புதிய இடத்தில் உள்ளதாக அறிந்தவள். முதலில் தன்னை ஆராய்ந்தால் அவளும் பெண்ணல்லவா. பின்பு தன்னை சரிபார்த்துக்கொண்டு வெளியே வந்தவள். தான் ஏதோ ஒரு வீட்டில் உள்ளதாக புரிந்தது. எங்கே? யாரது? என்று அறியவில்லை.
பிரதீப்பை பார்த்து சிறிது ஆசுவசமடைந்தாள். “நான் எப்படி இங்க வந்தேன்? எனக்கு எதுவும் நியாபகம் இல்லை? நான் எப்பவும் குடிக்கவே மாட்டேன். ஆனா நேத்து ஜூஸ்னு நினச்சுதான் குடிச்சேன்.. என்ன ஆச்சு? உனக்கு எதாவது தெரியுமா?” என்றாள்.
அவளிடம் அவள் தன்னிடம் கூறிய உண்மைகளை மறைத்து பார்ட்டியில் நடைபெற்றதைக் கூறினான். அனந்திதாவும் ஹரிஷும் விரும்புகிறார்கள் எனவும் அதனால் அவள் எனக்கு தேவையில்லை என்று கூறினான்.
“ஏன்? அவள உனக்கு பிடிக்கலையா?” என்று அவளின் திட்டம் பலிக்காமல் போன ஆதங்கத்தில் அவள் அவனிடம் கேட்டாள்.
“யாரு சொன்னா அப்படின்னு... எனக்கு பிடிச்சிருக்கு.. அதுக்காக ஒருத்தங்க யூஸ் பண்ணத நான் எப்பவும் யூஸ் பண்ண மாட்டேன்... அனந்திதா ஹரிஷுக்கு தான்னு எல்லாரும் புரிஞ்சிக்கற மாதிரி நேத்து நடந்துகிட்டாங்க... சோ நீயும் ஹரிஷ மறந்துடு” என்றான் பட்டென்று.
“உனக்கு எப்படி தெரியும்?”
“நேத்து குடிச்சிட்டு நீதான் உளறிட்டு இருந்த? அதுதான், இனிமேல் அவன disturb பண்ணாத... இல்லனா நீதான் பிரச்சன்னையில மாட்டிப்ப?” என்றான் தன்மையாக.
“அத நீ சொல்ல தேவையில்லை... எனக்கு நான் விருப்பபட்டது எதுவாக இருந்தாலும் கிடைக்கும்... அப்படி இல்லனா எப்படியாவது கிடைக்க வைப்பேன்...” என்று கோவமாக உரைத்துவிட்டு சென்றாள்.
அவனும் தோளை குலுக்கிக் கொண்டு, “எப்படியோ போ?” என்று அவன் வேலையை பார்க்க போய்விட்டான்.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவள் செய்தால், அதனால் அனைவரும் பயந்து போயிருந்தனர். அனந்திதாவின் உயிர் கூட போக இருந்தது.
அப்பொழுதும் பிரதீப் தான் அவளைக் காப்பற்றினான். அவள் செய்த வேலையால் பிரதீப் மிகவும் கோபம் கொண்டு அவளை தன்னுடைய எதிரியாக்கினான். அவள் அடங்கும் ஒரே ஆள் பிரதீப் என்று ஆகி போனான் காலத்தின் கட்டாயத்தால்.
ப்ரீத்தி என்ன செய்தால்? ஹரிஷ் மற்றும் அனந்திதா என்ன ஆனார்கள் அந்த விருந்திற்கு பிறகு? ஹரிஷின் காதல் கைகூடியாத? இல்லையா? என்பதை வரும் வாரத்தில் காண்போம்
தொடரும்...
{kunena_discuss:1192}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.