(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 08 - மித்ரா

Iru thuruvangal

ரிஷும் அனந்திதாவும் அருகே உள்ள காபிடேரியாவில் அமர்ந்திருந்தனர். ஹரிஷுக்கு எவ்வாறு தன் செயலை அவள் எடுத்துக்கொள்வாள் எனவும் அதனை தெரியாமல் செய்ததாக நியாயபடுத்தவும் அவன் விரும்பவில்லை. மேலும் அவளிடம் தன் காதலை உடனடியாக அவளிடம் சொல்லவும் விரும்பவில்லை.

அவளுக்கும் அதுவே தோன்றியது என்னதான் அவன் ஆபத்திற்கு உதவி செய்தாலும் அதற்குமேல் நடந்தது இருவரின் விருப்பமும் உள்ளதை அவள் உணர்ந்திருந்தாள்.

பின் அவர்களுக்கு காபி வரவும் அமைதியாக குடித்துக்கொண்டிருந்தனர். அவனே தொடங்கினான் பேச்சை.

“அனந்திதா !! நான் பண்ணது தப்புதான். ஆனா இது தெரியாம பண்ணிடேன்னு சொல்லமாட்டேன். ஏதோ உன்மேல உள்ள அட்ராக்ஷன் அப்பறம் ஏதோ உன்ன கொஞ்சம் எனக்கு பிடிச்சிருந்ததாலும் என்னை அறியாம பண்ணிட்டேன். உனக்கு இது பிடிக்காம இருந்து இருக்கலாம் அதனால நான் சாரி கேட்டுக்கிறேன்.” என்று அவன் அவளின் பதிலை எதிர்பார்த்தவாறு அவளை நோக்கினான்.

அவனின் பதிலில் அவள் சிறிது மகிழ்ந்தால் எங்கே அவன் நீயும்தான் என்னோட இழஞ்ச என்று அவன் ஏதேனும் கூறி விடுவனோ என்று பயந்தாள்.

அவளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவன் அவ்வாறு பேசவும் அவளும் தன் நிலையை எடுத்துக்கூறினால் அவனிடம்.

“தேங்க்ஸ் ஹரிஷ், முதல என்னால மூச்சு விட சீரமபட்ட போது ஹெல்ப் பண்ணதுக்கு. ஆனா, அதுக்கு அப்பறம் நடந்ததுல என் மேலயும் தப்பு இருக்குப்பா. அது ஏன்னு எனக்கே தெரியல. அதுதான் என்னன்னு என்னையே கேட்டுட்டு இருக்கேன். அதுக்கு ANSWER தான் இன்னும் தெரியல ஹரிஷ்.”

“சரி!! பரவாயில்லை விடு அனந்திதா. இது ஒரு சின்ன ஆக்சிடன்டன்னு நினச்சுக்கோ, இதுக்காக நம்மளோட பிரிண்ட்ஷிப்பை விட வேண்டாம் ப்ளீஸ்” என்றான்.

“சரி!! இப்போ நாம ரூம்க்கு போகலாமா... ஐ நீட் சம் ரெஸ்ட்.. கொஞ்சம் தனியா இருக்கணுமுன்னு நான் நினைக்கிறேன்” என்றாள்.

“ஹம்ம் !! ஒகே போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான். அவர்கள் ரூம்க்கு வரும் வழியில் மித்திலா அவர்களை பார்த்தாள்.

“ஏய் !! நீங்க ரெண்டு பேரும் இப்பதான் வரிங்களா? நீங்க முன்னாடியே வந்துட்டிங்கன்னு இல்ல நினைச்சேன்” என்றாள்.

“ஒரு வேலையில மாட்டிகிட்டோம் அதுதான்” என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டு சென்றாள் அனந்திதா.

“சரி” என்று தலையாட்டி விட்டு அவள் சென்ற உடன் அவர்களின் தளத்திற்கு சென்றனர். இருவரும் அவர்களின் அறையை திறந்து செல்வதற்கு முன் ஒருவரை ஒருவர் சில நொடிகள் பார்த்துவிட்டு சென்றனர்.

அறைக்கு சென்றவர்களின் நிலையோ எதிர்ப்பதமாக இருந்தது. ஹரிஷக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் மறுபுறம் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.

அவளிடம் தான் காதலிப்பதை மறைத்ததால், எனினும் அவளுக்கும் தன் மீதும் ஈடுபாடு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தான்.

அவளுக்கோ தன்னுடைய மனநிலையை அறிய முயன்று தோற்றுப் போனாள்.

தான் எதற்காக இங்கு வந்துள்ளோம்?

ஏன் அவனின் பால் ஈர்ப்பு உண்டானது?

தன் பெற்றோர் என்ன சொல்லி அனுப்பினார்கள் இங்கே, ஆனால் நான் ஏன் இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கிறேன்?

கட்டுப்பட்டான ஒழுக்கம் மிகுந்த குடும்பத்தில் பிறந்த நான் செய்த செயல் நியாயம் தானா? என்று குழம்பிக் கொன்டிருந்தாள். இரவு முழுவதும் யோசித்தவாரே உறங்கி போயிருந்தாள்.

இதைப் பற்றிய எந்த விதமான செய்தியும் ப்ரீத்தி மேத்தா விடம் செல்லாமலே இருந்தது. ஏனோ இருவரும் தங்களுடைய பர்சனல் ஸ்பேஸ்சில் யாரையும் நுழைய விட்டதில்லை இதுவரை இவர்கள். அதனால் தானோ இவர்களின் திருமணத்தை யாரும் அறியவில்லை இதுவரை.

கெஸ்ட் ஹௌசில் ஒருவரின் அணைப்பில் மற்றவர் இருந்தனர். ஏனோ எழுந்திருக்க கூட தோன்றாமல் இனிய பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.

அனந்திதாவே ஆரம்பித்தால், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கறது ரிஷு? இப்பவே 9.3௦ ஆயிடுச்சு. இதுக்கு மேல எப்போ எழுந்து சமைக்கறது. ப்ளீஸ் என்னை விடேன்?” என்றாள்.

“ஏண்டி? என் கூட இருக்கறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு.. அப்போ எல்லாம் நானே விட்டு போனா கூட சண்டைக்கு வருவ நீ, இப்போ பாரு எழுந்துரிக்கறேன்னு படுத்தற? உனக்கு என்மேல லவ்வே இல்லடி?” என்றான் கோவமாக.

“ஹலோ சார், அப்போ நாம இருந்தது லண்டன்ல, அங்க வேண்டியத ஆர்டர் பண்ணிட்டு நாம பாட்டுக்கு நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம். ஆனா இப்போ, இங்க நான் தான் சமைச்சு ஆகணும். சீக்கிரம் எழுந்திரு ரிஷு எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு சமைக்க?” என்று அவன் மேல் படுத்தவரே சொல்லிக் கொன்டிருந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.