(Reading time: 7 - 14 minutes)

அவன் தன்னை விடாமல் இருக்கவும். “ப்ளீஸ் ரிஷு பேபி” என்றாள்.

சும்மாவே அவளிடம் உருகுபவன் இப்படி கேட்டால் வேண்டாம் என்றா சொல்லுவான். “சரி!! மார்னிங் கோட்டவ கொடுத்துட்டு போ” என்று கூறி விட்டான். எப்பொழுதையும் விட சில நிமிடங்கள் அவன் அவளிடம் வசூலித்துவிட்டே அவளை விட்டான்.

பின் எழுந்து இருவரும் குளித்துவிட்டு சமையலில் ஈடுபட்டனர். அவர்கள் சாப்பிடும் சமயம் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதைப் பார்த்து முதலில் ஆச்சரியம் அடைந்தவர்கள் பின்பு அவரிடம் பேசினர் மிகவும் மகிழ்ச்சியாக.

ப்ரீத்தியின் மிரட்டலுக்கு பதில் அவளை கட்டுக்குள் கொண்டுவர இவரால் தான்முடியும் என்பதை அவரின் உரையாடலில் இருவருக்கும் உணர்த்தி விட்டார். அது வேறு யாருமில்லை அனந்திதாவை மிகவும் ஆர்வமாக பார்த்த அவர் தான்.

ஆம் !! அவர் மிஸ்டர். பிரதீப் ஒபராய். அவர் இந்தியாவில் உள்ள மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், தன்னுடைய உழைப்பால் அவருக்கான அடையாளத்தை பெற்றவர். இவர்கள் இருவரையும் விட இரு வயது பெரியவன்.

என்னதான் தன்னுடைய அடையாளத்தை அவன் அவன்முலமே பெற்றாலும் அவனிடம் பணக்காரர்களின் குணமும் இருந்தது ஒரு காலத்தில்.

பெண்ணின் மீதான இச்சை, அதுவே அவனின் மோசமான குணம் ஆகும்.

அவனுக்கு தோன்றும் மற்றும் விரும்பும் பெண்களிடம் தனக்கு வேண்டியதை எதன் முலமுமாக அவன் அடைந்தே தீருவான்.

அதற்கு எந்த அளவையும் அவன் அடைவான் என்பதை இவர்கள் இருவரும் தெரிந்து இருந்தனர்.

ஆனாலும், அனந்திதாவால் அவன் திருந்திருந்தான் என்பதும் உண்மையே. இப்பொழுது அந்த ப்ரீத்தியால் ஏற்படும் பிரச்னையை அவனே தீர்க்கவும் போகிறான்.

ஏனெனில் அவனுக்கும் ப்ரீத்திக்கும் நடக்கும் ஒரு பனிபோரே காரணம். அவளை திருத்த அவன் முயன்றும் அவள் மறுத்துவிட்டால் அவளின் பிறவி குணத்தால், அதனாலே இவர்களுக்கு துணையாக இருக்கிறான் இப்பொழுது பிரதீப்.

மேலும் ஒரு காரணமும் இருந்தது அதனை இவர்கள் அறியவில்லை. அறியும்போது எவ்வாறு இவர்கள் அந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அறியவில்லை.

“ஹலோ ரிஷி, திஸ் இஸ் பிரதீப். CONGRATULATIONS FOR YOUR MARRIAGE..”

“தேங்க் யு சோ மச் பிரதீப்.. எப்படி இருக்கிங்க?.. marriage ஆயிடுச்சா?”

“நான் நல்லா இருக்கேன் ரிஷி... எப்படி இருக்காங்க அனந்திதா?... எனக்கு இன்னும் marriage ஆகல?”

“நல்லா இருக்கா பிரதீப்.. நீங்க எங்கள காண்டக்ட் பண்ணுவிங்கன்னு நான் நினைக்கல?”

“நானும் உங்ககிட்ட பேசுவன்னு எதிர்பார்க்கல? ஆனா, பேச வேண்டிய சந்தர்ப்பம் அமஞ்சிருச்சு அந்த ப்ரீத்தியால?”

“உங்களுக்கு எப்படி தெரியும் பிரதீப்?” என்றாள் அனந்திதா அவசரமாக.

“அவ சமந்தபட்டது எல்லாம் எனக்கு தெரிஞ்சிடும். அது ஏன்? என்று கேட்காதிங்க? ஐ ஹவ் சம் பர்சனல் ரிசன்” என்றான்.

பின்பு அவனே, “நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. அவள நான் 24 ஹௌர்ஸ் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். சோ என்னை மீறி எதுவும் நடக்காது. இருந்தாலும் எனக்கு தெரியாம எதாவது நடக்கவும் வாய்ப்பு இருக்கு. அதுதான் நான் உங்ககிட்ட பேசறேன். அவ எப்போ கால் பண்ணனாலும் என்ன பேசனாலும் எனக்கு இன்போர்ம் பண்ணிடுங்க” என்றான்.

“ஹம்ம் !! ஒகே பிரதீப்” என்று ஹரிஷ் கூறியதும் பிரதீப் வைத்து விட்டான்.

ஹரிஷக்கும் அனந்திதாக்கும் இப்பொழுது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

பின் அனந்திதா அவன் கணவனிடம், “என்ன நடக்குது இங்க ரிஷு? எப்படி பிரதீப்க்கு தெரிஞ்சதுன்னு தெரியல? அவர் லண்டன்ல இருக்கும்போதே நமக்கு ஹெல்ப் பண்ணாரு.. இப்போ சொல்லவா வேண்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் மேல. இருந்தாலும் அவருக்கும் ப்ரீத்திக்கும் என்ன ரிலேஷன்னு தெரியல டா?” என்றாள் குழப்பமாக.

ஹரிஷும், “எனக்கு அதுதான் புரியல அதி டார்லிங்?...” என்றான்

அவளும் அவனிடம் சமாதானமாக “சரி விடுடா, அப்பறம் பார்த்துக்கலாம். நமக்கு ஹல்ப் அதுவா தானா அமையுது. அதனால எதுவும் பயப்பட வேணாம். வா, நாம சாப்பிடலாம்” என்றழைத்துக் கொண்டு சென்றாள்.

அந்த அழைப்பில் இருந்த சாராம்சம் இதுவே ஆகும். பின்பு அவர்களும் தங்களின் மிக பெரிய பிரச்சனைகளுக்கு ஒரு வழி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இருவரும் இருந்தனர். அன்றைய பொழுதை நன்கு களித்தனர்.

மேலும் பிரவீன்க்கு போன் செய்து நித்யா மற்றும் மதுவின் நலனை அறிந்துக் கொண்டான். அனைத்தும் அவர்கள் நினைத்த மாதிரியே நடந்துக் கொண்டிருந்தது.

இவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா? இல்லை ப்ரீத்தி செயல்படுத்தும் இவர்களின் குடும்பதை அழிக்கும் திட்டம் வெற்றி பெறுமா? இல்லை பிரதீப் இதற்கு முட்டுகட்டையாக இருப்பனா? ப்ரீத்திக்கும் பிரதீப்கும் நடக்கும் பனிபோர் என்ன?

தொடரும்...

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1192}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.