(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா

Iru thuruvangal

LONDON HEATHROW AIRPORT :

ண்டன் ஹைத்ரோவ் ஏர்போர்ட் விமான நிலையத்தை அடைந்தனர். அனந்திதா மற்றும் ஹரிஷ் இருவரும் அவர்களின் குழுவுடன் வந்தடைந்தனர் அங்குள்ள வைட்டிங் ஹாலில். ஹரிஷ் மட்டும் ஒரு முடிவை எடுத்திருந்தான்.

அனந்திதாவுடன் முதலில் நட்புடன் பழகி அவளும் தன்னை நண்பனாக ஏற்றபின்னே, அவளிடம் காதலனாக அணுக வேண்டும் என்பதே அந்த முடிவு.

அங்கு வந்த அனைவரையும் வரவேற்றார் இவர்களின் கோ-ஆர்டினேட்டர் மதனகோபால் நின்றிருந்தார். அவர்களுக்கான தங்கும் இடத்தையும் அவர்களின் பணியில் சேருவதற்கான நாளையும் மற்றவற்றை அவர்களுக்கு தெரியபடுத்த வந்திருந்தார்.

அவர்களும் தங்களை அவருக்கு அறிமுகபடுத்தி விட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். இதுவரை விமானத்தில் தனித்தனியே இருந்த மித்திலாவும் அனந்திதாவும் பேச ஆரம்பித்தனர் ஹரிஷை மறந்து.

அவனோ பாவமாக, அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவளிடம் பார்த்த பார்வையைப் பார்த்து, இங்கு ப்ரீத்தி மேத்தாவோ கோவத்தை முகத்தில் காட்டாமல் பொறுமையை இழுத்துபிடித்துக் கொண்டு இருந்தாள்.

மேலும் இவர்களை பார்க்க முடியாமல், “ சார், நாம கிளம்பலாமா?” என்றாள் மதனிடம்.

(இவர்கள் உரையாடல் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. நான் தமிழில் மொழி பெயர்த்து படிக்க வசதியாக மாற்றிக் கொடுத்துள்ளேன்.) 

எல்லோரையும் அப்பொழுதுதான் பார்த்த மதனகோபால் அவர்கள் சோர்வாக இருப்பதை அறிந்தான்.

அவர்கள் அனைவரையும் அவர்கள் தங்க இருக்கும் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு தனித்தனியே அறைகளை பிரித்துக் கொடுத்தார்.

ஹரிஷின் நல்ல நேரமோ இல்லை ப்ரீத்தியின் கெட்ட நேரமோ, அனந்திதா மற்றும் ஹரிஷின் அறைகள் அருகருகே இருக்குமாறு அமைந்தது.

இவர்கள் அறைகள் இரண்டாம் தளத்திலும் மித்திலா மற்றும் ப்ரீத்தியின் அறை முதல் தளத்திலும் இருந்தது.

அவர் அவர்களின் டீமைப் பொறுத்து அமைந்து இருந்தது அவர்கள் அறைகள். டீமில் உள்ள அனைவரும் ஒன்றாக பழகி அதற்கேற்ற மாதிரி அவர்கள் பணிகளின் எந்தவிதமான தடையும் வரக்கூடாது என்பதில் அவர்கள் நிர்வாகம் முக்கியத்துவம் அளித்திருந்தது.

அங்கு வந்துள்ள குழுவில் இருந்து 1௦ பேரின் மனதிலும் இதுவே இருந்தது. அங்குள்ள சில பேர் வெளிப்படையாகவே இதை மதனிடம் கேட்டனர். அவரும் அதற்கான விளக்கத்தை அளித்தார்.

“யெஸ் ப்ரிண்ட்ஸ், இங்க ப்ரஸ்ட் ப்ளோர்ல இருக்கறவங்க ஒரு டீம் நெக்ஸ்ட் செகண்ட் ப்ளோர்ல இருக்கறவங்க ஒரு டீம். இங்க 2 வீக்ஸ் மட்டுமே இங்க இருப்பிங்க. அதுக்கு அப்பறம் ரெண்டு டீமும் வேற வேற இடத்துக்கு அவங்க டீம் மெம்பெர்ஸ் ஓட வொர்க் பண்ண ஆரம்பிச்சிடுவிங்க....” என்று அவர்களுக்கு விளக்கினான்.

பின்பு அவர்கள் அனைவரையும் ஓய்வெடுக்க சொல்லி அனுப்பினார். ஹரிஷ்க்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான். அவன் அறைக்கு சென்றவன் ஷாருக்கானின் லுங்கி டான்ஸ் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தான்.

அவனுக்கோ அனந்திதாவை காதல் செய்து திருமணம் செய்துக் கொள்வதற்கு மிகுந்த முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான்.

அதற்கு என்ன என்ன முயற்சி செய்யலாம் என்று ப்ளைட்டில் யோசித்துக் கொண்டு வந்தால், வழி தானாக அமைந்து போனதில் வானில் பறந்துக் கொண்டிருந்தான்.

அதற்குமாறாக அனந்திதாவோ பரவாயில்லை புதிதாக உள்ளது எனவும் அவள் டீமில் ஒரு பெண் உள்ளால் என்பதாலும், மேலும் ஹரிஷும் உள்ளான் என்பதால் மனதின் ஒரு ஓரத்தில் மகிழ்ந்தாள்.

மித்திலாக்கு மட்டும் வருத்தமாக இருந்தது. ஏனேனில் அனந்திதா மட்டுமே அவளுக்கு தெரிந்தவள் அவளும் தன்னோடு இல்லாமல் இருப்பதால் அவளுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது.

அவள் டீமில் ப்ரீத்தி மற்றும் வேறொரு பெண்ணும் இருக்கின்றனர். ஆனால் அனந்திதாவிடம் இருந்த பிரெண்ட்லி டைப்பாக இருவரும் இருப்பர்களா என்பதில் சந்தேகமே என்றே தோன்றியது..

இவர்களுக்கு எல்லாம் மாறாக கோவத்தில் தன்னுடைய அறையை ஒரு வழியாக்கிக் கொன்டிருந்தாள் ப்ரீத்தி மேத்தா.

எப்படி இவ்வாறு நடைபெறுகிறது? நான் அவர்களை பிரிக்க நினைத்தால், ஏன் விதி அவர்களை சேர்க்கவே பார்க்கிறது?

ஏன் இருவரும் ஒரே டீமில்?

ஏன் இருவரும் ஒரே தளத்தில்?

ஏன் இருவரது அறையும் அருகருகே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.