(Reading time: 12 - 24 minutes)

“ஏய் !! இட்ஸ் ஓகே... நான் சும்மா விளையாடினேன்... ஆமா, அதென்ன அதி - ன்னு கூப்பிடற.... அப்படி யாரும் என்னை கூப்பிட்டதில்லை...” என்றாள் கேள்வியாக.

“அது என்னவோ, உன் பேரு அனந்திதான்னு பெருசா இருக்கா... அதுதான் நான் சார்ட் பண்ணிட்டேன்... ப்ளீஸ் நான் இப்படியே உன்ன கூப்பிடறேன்... என்னால அனந்திதான்னு கூப்பிட முடியாது” என்றான்.

அவளும், “பரவாயில்லை, இதுகூட ஸ்பெஷல்லா இருக்கு... “ என்றாள்.

அப்படியே இருவரும் பேசிக் கொண்டே போனார்கள் லிப்ட் இருக்கும் பகுதிக்கு, எப்படியாவது அனந்திதாவை லிப்டினுள் லாக் செய்து விட வேண்டும் தனியாக என்று குருரமாக எண்ணினால் ப்ரீத்தி.

ஏனேனில் காலையில் இருந்து அமைதியாக இருந்த ஹரிஷ் இப்போது அவளிடம் போய் அவனின் ரொமாண்டிக் வேலையை பார்க்கவும் கோவம் பொத்துக்கொண்டு வந்தது.

எப்படியாவது அவளை மட்டும் தனியே மாட்டிவிட வேண்டும் என்றுக் கருதி அங்கு வந்த மித்திலாவிடம் ஹரிஷை வந்து பார்க்குமாறு மதன் கூறியதாக கூறி அவனை அழைத்துவர சொன்னாள்.

எப்படியும் அவள் போய் சொல்லவும் அவன் வருவான் என்ற நம்பிக்கையில் அவள் லிப்டை நிறுத்தும் இடத்திற்கு சென்று அதை நிறுத்தினாள். பின்பு வெளியே வந்தவள் மித்திலாவிற்காக வெயிட் செய்தாள் ஒன்றும் செய்யாதவளாக.

இன்னொரு லிப்டில் இருந்து வெளியே வந்த மித்திலாவை பார்த்தவள். அவளிடம் சென்று, “ஹரிஷை மதனிடம் அனுப்பிவிட்டாயா? “ என்றாள்.

“நான் சொல்லிட்டேன்” என்றதோடு முடித்துக்கொண்டாள். பின்பு அனைவரும் அவரின் விடுதிக்கு செல்லும் கேபில் அமரவும் அப்பொழுதுதான் அனந்திதாவின் நியாபகம் வந்து பிரீத்தியிடம் கேட்டாள்.

“அவள் முன்பே சென்று விட்டாள்” என்று கூறி எப்படியும் நாளை உயிரோடு இருக்க மாட்டாள் என மனதிற்குள் மகிழ்ந்தாள்.

அவளுக்கு எப்படியும் ஹரிஷ் மதனிடம் பேச போயிருப்பான். அவரும் அவனிடம் பேசி பேசி, அவன் காதில் இரத்தம் வர வைத்த பின்பே அவனை லேட்டாக அனுப்புவர்.

அதனால் நாம் நினைத்தது போலவே நடக்கும் என்ற நம்பிக்கையில் விடுதிக்கு வந்தவுடன் உறங்கி போனாள்.

அவளுக்கு தெரியவில்லை, மித்திலா ஹரிஷிடம் சொல்லுவதற்கு முன் அவள் டீமில் இருக்கும் ஒருவாறு அவளை மதன் சார் அழைப்பதாக கூறி அவளை அழைத்தான்.

பின்பு அவளும், “ஹரிஷை மதன் சார் வந்து பார்க்க சொன்னதாக ப்ரீத்தி கூறினால், நீ போய், அங்கு லிப்டை நோக்கி செல்லும் அவனிடம் கூறி அவனை அழைத்து வா?” என்று கூறி சென்றாள்.

ஆனால் அதற்குள் அனந்திதா மற்றும் ஹரிஷ் உள்ளே சென்றுவிட்டனர். லிப்ட்டும் கீழே சென்று பாதி வழியில் நின்றுவிட்டது. அதில் இருவருமே மாட்டிக்கொண்டனர்.

ப்ரீத்தி, ஏதோ புத்திசாலித்தனமாக செய்வதாக எண்ணி லிப்ட்டை நிறுத்தியவள். யாரும் அதை உபயோகிக்ககூடாது என்று TECHNICAL WORK IS GOING ON என்ற பலகையை வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் அனந்திதாவிற்கு செய்ய நினைத்த கெடுதல் அவர்கள் இருவருக்குமே நல்லதாகவே மாறிவிட்டது.

அங்கு லிப்டில் மாட்டிக் கொண்டவர்கள் முதலில் இருவருமே பயந்தனர். பின்பு நிதானத்திற்கு வந்த ஹரிஷ் அவளை சமாதனப்படுத்த முயன்றான். அவள் அப்போதும் பயத்தில் நடுங்கிக் கொன்டிருந்தாள்.

ஆபத்திற்கு பாவமில்லை என்று அவளை அணைத்தான் இறுக்கமாக. அவளும் பயத்தில் ஒட்டிக்கொண்டாள்.

ஆனால் அவனுக்கோ ஹார்மோன் செய்யும் வேலையால் எதாவது எடக்கூடமாக செய்து விடுவோம் என்ற பயத்தில் இருந்தான்.

அதற்கேற்றார் போல லிப்ட் நிறுத்தி பத்து நிமிடத்தில் அவள் மூச்சி வாங்க சிரமப்பட்டாள்.

அதை உணர்ந்து அவன் அப்போது நினைவு வந்தவனாக தன் மொபைல் போனின் ஒளியின் வழியே EMERGENCY BUTTON – ஐ பிரஸ் செய்தான்.

அவ்வாறு செய்து ஐந்து நிமிடம் ஆகியும் எந்த ஒரு மாற்றமும் நடைப்பெறாததால் தொலைபேசியில் அழைத்தான்.

RECEPTION DESK – கிற்கு அழைத்து நிலைமையை விளக்கினான். பின்பு அவர்களும் உடனடியாக சரி செய்கிறோம் அதுவரைக்கும் சமாளிக்குமாறு கூறினர்.

அனந்திதாவிடம் திரும்பிய அவன், அவள் மயக்க நிலைக்கு போகும்முன் அவன் மூச்சுக்காற்றை அவளுக்கு அவளின் இதழ்களின் வழியே அளித்துக்கொண்டிருந்தான். அதில் சுய உணர்வை பெற்றவள், தாங்கள் இருவரும் இருக்கும் நிலையில் சிறிது குழப்பமடைந்தாள்.

ஆனால், அவனோ முதலில் அவளுக்காக மூச்சைக் கொடுக்க நினைத்தவன். பின்பு அவனின் உணர்வுகளின் தாக்கத்தால் எல்லாம் மறந்து முதலில் மென்மையாக தொடர்ந்த முத்தம் பிறகு எப்படி வன்மையாக மாறியது என்று அறியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.