(Reading time: 12 - 24 minutes)

இத்தனை ஏன்? களுக்கான விடைதான் தெரியவில்லை. விதி வலியது மட்டுமே. இதை மாற்றுபவர்களும் யாரும் இல்லை, இதை கடக்காதவர்களும் யாருமில்லை என்பதை ப்ரீத்தி அறியவில்லை, அறிய போவதுமில்லை என்பதே உறுதி.

ஆனால், இறுதியாக நாம் முயற்சி செய்வதில் ஒன்றும் தவறில்லை என்பதில் நிலையாக நின்றாள்.

உலகம் நொடிக்கு நொடி மாறும்போது இதனையும் இந்த இரு வாரத்தில் மாற்றி விடலாம் என்றே அவள் ஓவர் காண்பிடன்ஸாக இருந்தாள்.

விதி அவளுக்கு எழுதியுள்ளதை அவள் அறியவில்லை அந்த அகந்தை பெண். காதல் மனதில் இருந்து வருவதே, அவற்றை கட்டாயபடுத்தி ஒருவர் மீது திணிக்க கூடாது என்பதை அவள் அறியவில்லை. அவளின் இந்த எண்ணமே அவளை ஹரிஷிடம் இருந்து தூர நிறுத்தியது.

அடுத்தநாள் விடியலுக்காக ஒவ்வொருவரும் ஒரு விதமான மனநிலையில் உறங்கினர். காலையில் எழுந்த அனைவரும் தயாராகி வெளியே வரவும் அவர்களை அலுவலகம் அழைத்து சென்றார் மதனகோபால்.

ஹரிஷ் அவனுக்கு பிடித்த பணி என்பதாலும் இந்தவொரு வாய்ப்பு தனக்கு கிடைத்தாலும் விளையாட்டாக எண்ணாமல் முழுமனதுடன் செய்ய ஆசைக் கொண்டான்.

அதனால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடந்துக் கொண்டான். அனந்திதாவை பார்த்தானே தவிர, வேறு எதுவும் பேசாமல் சிரித்துக்கொண்டே மற்றவர்களுடன் வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

இதனைப் பார்த்த ப்ரீத்திகோ ஒன்றும் புரியாமல் தலையை பியித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

அனந்திதாவோ மித்திலாவிடம் பலகாலம் கழித்து சந்தித்ததை போல பேசிக் கொன்டிருந்தாள்.

மித்திலாவும் அவளுடைய வருத்தத்தை அனந்திதாவிடம் கொட்டினால், “ ஐ ரியல்லி கோயிங் டு மிஸ் யு அனந்திதா!!... ரெண்டுபேரும் வேற டீமா போய்ட்டோம்” என்றாள்.

“இதுல போய் என்ன இருக்கு இங்கதான இருக்க போறோம்... ஒன்னும் வருத்தப்படாத நாம எல்லாம் பார்த்துக்கலாம்....” என்று ஆறுதல் அளித்தாள்..

அலுவலகம் வந்து அங்குள்ளவர்கள் அவர்களின் திறமையை சோதித்து அவர்களின் பணிகளைப் பற்றி விரிவான விளக்கங்களை தந்தனர். அனைவரும் அதில் முழ்கி இருந்தனர். பின்பு அவர்களுக்கான ட்ரைனிங் ஆரம்பமானது.

ட்ரைனிங் ஆரம்பித்ததிலிருந்து இரு கண்கள் அனந்திதாவையே பார்த்துக் கொண்டிருந்தது. அது ஹரிஷும் இல்லை ப்ரீத்தியும் இல்லை என்பது உண்மையே...

அதில் இருந்த ஆர்வமும் அவளை அடைய வேண்டும் என்ற தாபமும் மட்டுமே அவரிடம் இருந்தது. யாரோ தன்னை பார்ப்பது போன்று தோன்ற சுற்றும்முற்றும் பார்த்தாள். ஏதோ பிரம்மை என நினைத்து பணியில் கவனம் செலுத்தினாள்.

அனந்திதா இவ்வாறு பார்க்கவும், அவள் அருகே ஒரு இடம் தள்ளி அமர்ந்திருந்த ப்ரீத்தியும் அதனை கவனித்து அவளையும் ஹரிஷையும் பார்த்துவிட்டு திரும்பும்போது, அனந்திதாவை பார்த்துக்கொண்டிருந்தவனை பார்த்தாள்.

அவன் பார்வை அவளையே கண்ணாடியில் பார்ப்பதுபோல உணர்த்தியது. அனந்திதாவின் மேல் உள்ள ஈடுபாடு. ப்ரீத்திக்கு ஒரு வழி கிடைத்துவிட்டது ஹரிஷிடம் சேர என எண்ணி மகிழ்ந்தாள்.

அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். அவள் எண்ணம் நடக்குமா, இல்லை வேறு ஏதோ விபரிதத்தை அனந்திதாவின் வாழ்வில் கொண்டு வருமா என்பதை அறியவில்லை.

அப்படி வந்தால் அவளையும் சேர்த்து பாதிக்க போகிறது என்பதையும் அறியவில்லை அந்த படித்த முட்டாள். பின்பு அந்த நாள் முடியும் நேரத்தில் அங்குள்ள சக பணியாளரிடம் அவனைப் பற்றி அறிந்தவள் ஆச்சரியமடைந்தாள்.

ஹரிஷை அவள் முன்பே பார்க்கவில்லை எனில் இவனை கண்டிப்பாக காதல் செய்திருப்பேன் என மனதில் ஒரு எண்ணம் ஒரு நொடி வந்து சென்றது.

ஆனால், அகம்பாவம் திமிர் தான் நினைத்தது நடந்தே தீர வேண்டும் என்பதின் மொத்த உருவமான ப்ரீத்தி அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டுவிட்டு அனந்திதாவை எவ்வாறு இவனுடன் சேர்த்துவிடுவது என்ற யோசனையில் இருந்தாள்.

அவள் அறியவில்லை கொஞ்ச நேரம் முன்பு அறிந்தவனுடன் அனந்திதாவை சேர்த்து வைக்க, தான் செய்யும் அனைத்து செயல்களும் அவளுக்கு எதிராக திரும்பி ஹரிஷின் மீது அனந்திதாவிற்கு ஈடுபாடு வருமாறு அமையும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

பணிநேரம் முடிந்து அனைவரும் வெளியே செல்லும் நேரத்தில் வந்தான் ஹரிஷ் அனந்திதாவிடம். “ஹாய் !! அதி !! எப்படி போச்சு வொர்க் எல்லாம்? புது என்விரான்ட்மென்ட் புடிச்சு இருக்கா?”

அவன் அதி என்று சொன்னதும் ஆச்சரியமடைந்தாள். பின்பு சுதாரித்து, “ஆல் இஸ் குட்... ஆனா நீ ரொம்ப சிக்கிரம் கேட்டுட்ட?... இப்போதான் கண்ணு தெரிஞ்சுதா?...”

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல... நான் கொஞ்சம் வொர்க் மேல இருக்கற ஆர்வத்துல அங்க கான்சன்ட்ரேட் பண்ணிட்டேன்.... சாரி அதி” என்றான். ஆனால் மனதில் மகிழ்ந்தான் என்னோட attention - ஐ எதிர்பார்க்கற போல என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.