(Reading time: 12 - 24 minutes)

அவளும் அதற்கு உடன்பட்டாள் அவனிடம் உள்ள மயக்கத்தால். ப்ளைட்டிலேயே அவனிடம் அவள் தடுமாறி இருந்தாள். இப்பொழுது அவன் இழுத்த இழுப்பிற்கு ஒத்துழைத்தாள்.

ஒருக்கட்டத்தில் அவன் கைகள் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டிற்கும், அவளின் டி-ஷர்ட்டிற்கும் இடையில் இருந்த இடைவேளையில் அத்துமீறவும் அவள் துடித்துதான் போனாள்.

அவன் கைகள் அவள் இடையில் நடத்தும் மாயாஜாலத்தில், அவள் உணர்வு பெற்று பெரிய தவறை செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தாள். உடனடியாக அவனை விலக்க முயன்றாள். அவனும் அவள் விலக்கத்தில் நினைவு திரும்பினான்.

அப்பொழுது தான் செய்து கொண்டிருக்கும் காரியம் நினைவில் வர அவள் முகத்தை பார்த்தான். அவளும் குழப்பத்தில் இருப்பதால் அவளிடம் அப்பறம் பேசலாம் என்று முடிவெடுத்தான்.

“சாரி !! அதி !!... இப்போ இதுக்கான EXPLANATION நான் வெளியே போனதும் தரேன். ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத?”

அவளும் பெயருக்கு தலையாட்டினாள். ஆனால் உள்ளே குழம்பி போய் இருந்தாள். தான் எப்படி இவ்வாறு அவனிடம் நெருங்கினேன்? பார்த்த இரண்டு நாள்களில் எவ்வாறு அவன் நெருக்கத்தை விரும்ப ஆரம்பித்தேன் இது தவறு.

அவன் எதற்கு இதை செய்தான்? அவன் தவறு செய்தான் என்றால் தானும் அல்லவா அவனுக்கு இணையாக தவறை செய்துள்ளேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் லிப்ட் கதவு திறந்தது. அதில் இருந்து வெளியே வந்தனர் இருவரும்.

அங்குள்ளவர்கள் அவர்களின் நலத்தை கேட்டறிந்த பிறகு அவர்கள் தங்கள் விடுதிக்கு செல்ல நினைத்தனர். ஆனால் அனந்திதாவிடம் பேச விரும்புவதால் அவன், “ஒரு காபி சாப்டுட்டு பேசலாம், அப்புறம் நாம இடத்துக்கு போலாம்” அவளுக்கும் அது தேவைபட்டதால் அமைதியாக பின் தொடர்ந்தாள்.

அப்படி என்ன பேச போகிறார்கள்? அனந்திதா அவனை புரிந்துக் கொள்வாளா? இல்லை விலகி செல்வாளா? ப்ரீத்தியின் திட்டம் தோல்வி அடைந்ததால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வாள்? அனந்திதாவை ஆர்வத்துடன் பார்க்கும் நபர் யார்? அவரால் மேலும் பிரச்சனைகள் வருமா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

தொடரும்...

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1192}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.