(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா

Iru thuruvangal

திர்திசையில் பேச பேச, அவன் உக்கிரம் ஆகிக் கொண்டே போனான். பின் ஒரு கட்டத்தில் முடியாமல் போனைத் தூக்கி தரையில் வீசினான்.

அதே கோபத்துடன், “என்ன ஏன் நிம்மதியாவே இருக்கவிட மாட்டன்றாங்க யாருமே?” என்று அவன் உச்சஸ்தானியில் கத்தினான்.

அவனுடைய இந்தக் கோபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவளுக்கு தெரிந்த ஹரிஷோ யாரிடமும் கோபம் கொள்ளாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் சமயோகிதமாகவும் நடந்துக் கொள்பவன்.

ஆனால், இன்று அவன் இவ்வளவு எக்ஸ்ட்ரீம் ஆக நடந்துக் கொள்ளவும் மிகவும் பயந்து போனாள். ஏன்? என்றால், அவளே கூட அவனிடம் வம்பு செய்வாள். “உனக்கு கோவமே வராதடா?” என்று.

அப்பொழுது மூச்சை இழுத்து தன்னை சரி செய்தவன் அவளை அப்பொழுதுதான் கவனித்தான். அவனை அதிர்ச்சியாகவும் பயத்துடன் முகம் வெளுக்க அமர்ந்து இருந்தவளை, தன் தலையிலேயே அடித்துக்கொண்டு, “ இவள் இருக்கறதா கவனிக்காம இப்படி ரியாக்ட் பண்ணிட்டேனே !!” என்று.

அவள் அருகே வந்தவன் அவள் தோளைத் தொட பயந்து நகர்ந்து அமர்ந்தாள். அவளிடம் வந்து அமர்ந்தவன் அவளைத் தன்புறம் திருப்பி அவளை அணைத்து, “சாரிடா!! கோபத்துல அப்படி கத்திட்டேன். பயப்படாதடி நான் உன் ரிஷுதான்” என்றான்.

அவன் அணைப்பில் இருந்து விலகி, “நீயே கேட்டதான போன்ல சொன்னதை, அப்போ எப்படி பயப்படாம இருக்கறது?” என்று அவனிடம் கதறினாள்.

அவள் கண்ணீரைத் துடைத்தவன் அவள் தாடையில் விரல் கொண்டு தூக்கி அவனை பார்க்க வைத்தான்.

“என்மேல நம்பிக்கை இருக்குத்தானடி?....”

“என்னைவிட உன்ன தான் நம்பறேன்.....!!”  

“சரி!! அழுகாத!! நான் மத்தது எல்லாம் பார்த்துக்கிறேன்....”

அவள் அப்பொழுதும் பதட்டமாக இருக்க அவன் வழியில் அவளை திருப்பினான். அவளை தன் மடியில் அமரவைத்து அவளை இடையோடு கட்டிக்கொண்டு இருந்தவன்.

தீடிரென்று அவளிடம், “அதி !! பசிக்குதுடி...எதாவது சமைச்சி கொடுமா? “ என்றான்.

எல்லா பெண்களையும் போல அவளும் தாயுள்ளம் கொண்டு தன் பயத்தையும் மீறி, “அரைமணி நேரத்துல சமைச்சிடறேன் ரிஷு....!!” என்று அவனிடம் கூறி அவள் சமையலறை பக்கம் சென்றாள். 

அவள் சென்றதும் போனில் கூறப்பட்டதை நினைவுக் கூர்ந்தான்.

{{ “ஹலோ!!” என்று ஹரிஷ் கூறியதும்,

“என்ன மிஸ்டர். ஹரிஷ் எப்படி போகுது லைப் எல்லாம். ஆமா நல்லா போற மாதிரிதான் தெரியுது..... நான் அவளோ பண்ணியும் அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்ட..... அவளுக்கும் திமிருதான.... நான் எவ்வளவு பண்ணினேன் உங்க ரெண்டு பேரையும் பிரிக்க. திரும்ப திரும்ப எப்படிடா சேர்ந்து தொலைக்கறிங்க.....”

அதில் தெரிந்துக்கொண்டான் யார் தங்களிடம் இவ்வாறு பேசுவது என. ஏன்? அருகில் கேட்டுக்கொண்டிருந்தவளும் அறிந்துக்கொண்டாள்.

“ஜஸ்ட் ஷுட் அப் ப்ரீத்தி. டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்ஸ்” என்று சீறினான்.

“நீ என்ன சொன்னாலும், நான் கேட்கமாட்டேன். உனக்காக நான் என்னலாம் பண்ணினேன்.... அவள உன்மேல சந்தேகப்பட வைச்சு.... அவகிட்ட இருந்து உன்ன பிரிச்சேன்... அப்பறம் அவ உன்னவிட்டு போனபிறகும்... உன் பின்னாடி நாயா சுத்தினேன்... ஏன் உனக்காக நான்.... நீ பேசற தமிழக் கூட கத்துகிட்டேன்...  ஆனா நீ...!! உன்ன நான் HARASMENT பண்ணதா சொல்லி அந்த நாட்டை விட்டே அனுப்பிட்ட... அதுமட்டுமா திரும்ப என்னை அங்க வரமுடியாதபடி பண்ணி என்னை தடுத்துட்ட... ஆனா !!! இப்போ திரும்பவும் அவகிட்டயே போயிட்ட... நீ எனக்கு கிடைக்கலனாலும் பரவாயில்லை.... அவகிட்ட நீ போக விடமாட்டேன்டா... நான் அவகிட்ட தோத்துப் போகமாட்டேன்...” என்று ஆங்காரமாக கூறியவளை அவன் தடுத்தான்.

“நீ இப்படி பைத்தியம் மாதிரி பேசறதால ஒண்ணும் மாறிவிடாது..!! அவ எப்பவோ என்ன நெருங்கிட்ட... எப்போன்னு தெரியுமா லண்டன்லயே அதுவும் உங்க எல்லார் கண்ணு முன்னாடியே உங்களுக்கு தெரியாம.. அவளுக்கு புருஷனா அவக்கூட பத்து மாசம் வாழ்ந்து இருக்கேன்.... உன்னால நாங்க பிரியல...நாங்க பிரிஞ்சதுக்கு காரணமே வேற....!! ஸ்டுபிட்... இப்பவாது உன்னோட லைப் பாரு... இல்லனா நீ இன்னும் அசிங்கப்பட்டு போய்டுவா!!” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மிகவும் கேவலமாக அவனிடம் தோற்றமாதிரி ஒரு வெறி வந்தது.

“அப்போ !! என்னை ஏமாத்திருக்கிங்க ரெண்டு பேரும்.. உங்கள நான் சும்மா விடமாட்டேன்டா....என்னை எப்படி நீ அசிங்க படுத்தினயோ... அதே மாதிரி உங்க ரெண்டுபேர் தங்கச்சிகளையும் அசிங்கபடுத்தி... அவங்கள வீட்டை விட்டே வெளிய வராத மாதிரி பண்றேன்... அப்பறம் எனக்கு ஒரு டவுட் உங்க ரெண்டுபேர் தங்கச்சியும் வெர்ஜின் தானா... இல்ல உங்க ரெண்டுபேர் மாதிரியுமா... அப்படியில்லனாலும், அது இல்லாத மாதிரி செய்யவும் என்னால முடியும்... நான் என்ன சொல்லவரேன் புரியுதா...இனிமேல் உன் லைப் ல நடக்கற எல்லாத்துக்கும் நான் மட்டும்தான் காரணம்.... SAFE ஆ எல்லாரையும் பார்த்துக்கோ... குறிப்ப உன் பொண்டாட்டிய.....” என்று விகாரமாக சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.