(Reading time: 12 - 24 minutes)

அதில் முதலில் அதிர்ந்தவன் மேலே சொல்லுமாறு கண்ணைக் காட்டினான்.

அவளும் தொடர்ந்தாள். “நான் உன்மேல இருக்கற கோவத்துல இந்தியா வந்துட்டேன் லீவ் எடுத்துக்கிட்டு, அப்பறம் வீட்ல எல்லாரும் கொடுத்த பிரஷரால பொண்ணு பார்க்க வர சொன்னேன். அப்போ பிரித்வி என்கிட்ட தனியா பேசணும்னு சொன்னாரு. அப்போதான் அவர் அவரோட பெஸ்ட் ப்ரண்ட லவ் பண்றதாகவும், ஆனா வீட்ல ஒதுக்கல அப்படின்னு சொன்னான். நான் யோசிச்சு சொல்றேனு சொல்லிட்டு அவரோட காண்டக்ட் நம்பர் மட்டும் வாங்கிட்டு அனுப்பிட்டேன்”.

அதுக்குள்ள வீட்ல எல்லாரும் பேசி முடிச்சு.. என்னோட விருப்பத்தைக் கூடக் கேட்காம கல்யாணம் DATE பிக்ஸ் பண்ணிட்டாங்க. நாங்க கீழே வந்து பார்கறதுகுள்ள எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு...”

“அந்த நிலையில நாங்க ஷாக் ஆனது மட்டும்தான், எனக்கு நியாபகம் இருந்துச்சு.. அப்பறம் நல்லா யோசிச்சு அவங்கள மீட் பண்ண வர சொன்னேன்.”

“அவரும் அவங்க லவ் பண்ற பொண்ணும் வந்தாங்க. நான் நம்மளப் பத்தி எல்லாம் சொல்லவும் அவங்களும் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க. அப்பறம் என்ன பண்றதுன்னு யோசிக்கும்போதுதான் அந்தப் பொண்ணு ஷாலினி ஒரு ஐடியா கொடுத்தாங்க. அதுப்படிதான் எல்லாமே நடந்துச்சு” என்றாள்.

“என்ன ஐடியா?....”

“கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க ரெண்டுபேரும்.... ஆனா நீ தாலிகட்ட வேண்டாம். நான் அவளுக்கு கட்டறேன்”, ஷாலினி.

“என்ன சொல்றிங்க? எனக்கு புரியல?....”

“நீங்க கல்யாணம் மேடையில் உட்கார்ந்து இருப்பிங்க... பிரித்வி தாலி உங்க கழுத்துல மட்டும்தான் வைப்பான்... நான் பின்னாடியிருந்து கட்டிடறேன்” என்றுக் கூறினாள்.

“ஏங்க !! அது தங்கச்சிதான கட்டணும்.. நீங்க எப்படி?...”

“அதுநான் பார்த்துக்கிறேன்...அவதான் கட்டுவா...அவள சம்மதிக்க வைக்க என்னால மட்டும்தான் முடியும்....” என்றாள்.

ப்ரித்வியும், “ஆமா !! அனந்திதா. அவளோட வீக்னஸ் எங்களுக்கு தெரியும்” என்றான்.

அப்பறம், “நீங்க அன்னைக்கு நைட்டே, இவன் என்னை லவ் பண்றது தெரிஞ்சுட்டு, நீங்க கேட்டதுக்கு உங்கக்கூட வாழ மாட்டன்றானு.... சண்டப் போட்டுட்டு கிளம்பிடுங்க.... அதுக்கு அப்பறம் இவங்க வீட்ல என்ன சொல்லி சம்மதிக்க வைக்க முயற்சி பண்ணனாலும்.. நீங்க ரெண்டுபேரும் ஒதுக்காதிங்க... அப்பறம் நாம நினைக்கறதுதான் நடக்கும்” என்றுக் கூறினாள்.

இருந்தபோதிலும் “ஏதோ !! கஷ்டமா இருக்கு எல்லாரையும் ஏமாத்த” என்றாள் அனந்திதா.

அவள், “உங்களால ஹரிஷ விட்டுடு, வேற யாரோடாவது நிம்மதியா வாழ்ந்திட முடியுமா? இல்லதானா. நீங்களும் ப்ரோப்லம்ல இருக்கீங்க. சோ இத விட ஒரு பெட்டர் SOLUTION கிடைக்காது.... நீங்க இதை செய்யபோறது இல்லை... நான்தான் செய்ய வைக்க போறேன்.... அதனால நீங்க வருத்தபடாதிங்க... நான் பார்த்துக்கிறேன்....”

அவ சொன்னது மாதிரிதான் எல்லாமே நடந்துச்சு, அப்பறம் நான் டிவோர்சுக்கு APPLY பண்ணிட்டு லண்டன் வந்துட்டேன். 3 மந்த்ஸ் கழிச்சு, டிவோர்ஸ் ஆனதுக்கு அப்பறம் அவங்க என்ன மீட் பண்ணாங்க... அவருக்கும் ஷாலினிக்கும் marriage  பண்ண ஒத்துக்கிட்டாங்கனும் ... நானும் அவங்க சந்தோசமாயிருக்காங்கன்ற சந்தோசத்துல லண்டன் வந்து செட்டில் ஆயிட்டேன்....

ஆனா உனக்கு நான் துரோகம் பண்ணல டா... என்றுக் கண்கள் கலங்கி எங்கே அவன் தன்னை தவறாக நினைத்துக் கொள்வனோ என்றுப் பயந்து அவனைப் பார்த்தான்.

ஹரிஷோ, “என்ன மாதிரியான காதல் இது... எனக்காக எந்த அளவிருக்கும் சென்றிருக்கிறாள்.” என்று மகிழ்ந்து அவளை தன் இருக் கைகளாலும் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான்.

அங்கே அவளை விட்டவனிடம், “என்மேல கோவமா?..” என்றுக் கேட்டாள்.

“கோவமாயிருந்த, உங்க ஊருல இப்படித்தான் தூக்கிட்டு வருவாங்கள என்ற அம்மனி...” என்றான் சரசமாக.

“ச்சூ.. போட..” என்று அவனை விட்டு விலகி போனவளை... அளவுக்கடந்த காதலால் ஆக்கிரமித்தான் அந்த அன்புக் கணவன். அவளும் அவனிடம் அடங்கி காதலில் முழ்கி போயிருந்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். இவர்களின் லண்டன் வாழ்க்கையும் ப்ரீத்தியின் கோவத்தையும்.....

தொடரும்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1192}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.