(Reading time: 12 - 24 minutes)

“உன்னை கொல்லாம விடமாட்டேன்டி... நீ எந்தக் காரணத்தாலயும் என் முன்னாடி வந்துடாத... அப்படி வந்த அன்னைக்கு தான் நீ உயிரோட இருக்கற கடைசி நாள்...வைடி போனை.....” என்று கத்தி போனைப் போட்டு உடைத்தான். }}  

அனந்திதாவிடம் அவன் சமாதானமாக பேசினாலும் அவளைப் பற்றி நன்றாக அறிந்தவன். நித்யாவையும் மதுமிதாவையும் எவ்வாறு காப்பற்ற போகிறோம் என்று ஒரு சிறு பயம் இருக்கவே செய்தது.

உடனடியாக அவர்களுக்கு போன் செய்ய முயலவும் தான், அவன் போனை உடைத்தது அவனுக்கு நியாபகம் வர அவன் தன்னுடைய லக்கேஜில் உள்ள ஸ்பெர் போனைத் தேடி எடுத்து கீழே உள்ள போனில் இருந்த சிமை எடுத்து அந்த போனில் இட்டவன்.

பிரவீன்க்கு போன் செய்தான். அவன் இப்படி தீடிரென்று அவனை அழைக்கவும் என்னவோ? ஏதோ? என்று பயந்தவன்.

“என்னாச்சு அண்ணா !! ஆல் ஒகே தான, ஒன்னும் பிரச்சனையில்லையே !!” என்றான்.

“அப்படி எதுவும் இல்லை, மது வீட்லதான இருக்கா!! அவள எங்கயும் தனியா அனுப்பிடாத...!! நான் வீட்டுக்கு வர வரைக்கும்...அவள பத்திரமா பார்த்துக்கோ...!! அதே மாதிரி நித்யாகிட்ட பேசி...அவளையும் எங்கயும் போக வேணாம்...அப்படி போன உனக்கு இன்போர்ம் பண்ணிட்டு போக சொல்லு புரியுதா?....”

“சரினா!! வேற ஏதும் ப்ரோப்லம் இல்ல தான, என்னாச்சு தீடிருன்னு ??”

“இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது... நீ அவங்க கிட்ட இன்போர்ம் பண்ணிடு... அவங்கள நான் வர வரைக்கும் பார்த்துக்கோ... நான் வந்து விவரமா சொல்றேன்...” என்றான்.

“ஹ்ம்ம் ஒகே....நான் பார்த்துக்கிறேன்... நீ எதுவும் கவலைப்படாம....அண்ணி கூட என்ஜாய் பண்ணு... BYE..” என்றுக் கூறி வைத்தான்.

அப்பொழுது தான் தாங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதையும் அனந்திதாவை பற்றிய நினைவும் அவனுக்கு வந்தது.. சரி!! எல்லாம் நல்லதாதான் நடக்கும்... நாம தேவை இல்லாமல் குழம்ப வேண்டாம் என்று முடிவெடுத்தவன் தன் மனைவியிடம் சென்றான்.

பிரவீனோ அவள் தங்கையிடம் அவர்களின் அண்ணன் கூறியதைக் கூறினான்.

அவளோ !! ஏன்? எதற்கு? என்று ஆயிரம் கேள்வி கேட்கவும் இவன் கோபமடைந்து “அண்ணா !! உன் நல்லதுக்குத்தான் சொல்லுவாங்க!!... கேள்விகேட்காம நான் சொல்றத கேளுடி” என்று அவளைத் திட்டியவன்.

அங்கிருந்தே நித்யவிற்கும் அழைத்து கூறவும், அவள் ஏதோ விஷயம் இருக்கபோய்தான் இப்படி சொல்லியிருக்காங்க என்று புரிந்துக்கொண்டவள்..

“சரி பிரவீன் !! நான் பார்த்துக்கிறேன்.. வெளிய போறதா இருந்தாலும் உங்ககிட்ட சொல்லிட்டே போறேன்” என்றுக் கூறி அழைப்பை அணைத்தாள்.

அதில் மகிழ்ந்தவன். தன் தங்கையை முறைத்து “பாருடி !! பொண்ணுனா இப்படி இருக்கணும்... நான் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டு ஒத்துக்கிச்சு... நீயும் இருக்கியே... அவக்கூட தான சுத்தற.. இத பார்த்து கத்துக்ககூடாது... ஒழுங்கா நான் சொல்றத கேட்டு நட...அப்பறம் அண்ணா வந்தவுடனே... உன் டவுட் எல்லாம் கேளு....” என்று கூறிச் சென்றான்.

இதைக் கேட்டு கொண்டிருந்தவள், “இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்ல போல, காலைல இருந்து எல்லார்கிட்டயும் திட்டு வாங்கறான்... சரி அவங்க வர வரைக்கும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா வீட்லயே இருக்கலாம்... அப்படியே இந்த பிரவீன ஒரு வழியாக்கி டைம் பாஸ் பண்ணலாம்” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு சிரித்தாள்.

அங்கே கெஸ்ட் ஹௌசில் சமயலறையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த அனந்திதாவிடம் வந்தவன். அவளை பின்னிருந்து அணைத்து அவளிடம், “எதாவது ஹெல்ப் பண்ணட்டுமாடா?” என்றான்.

“அவளோதான் முடிஞ்சிடுச்சு ஹரிஷ் !! ஆனா ரொம்ப நாளாச்சு இல்ல சமைச்சு, எப்படி வந்திருக்கோனு தெரியல?” என்றாள்.

“நீ எப்படி செஞ்சு இருந்தாலும் எனக்கு ஒகேதான் குட்டிமா....”

அவன் கூறியதைக் கேட்டு சிரித்தால், பின் இருவரும் சேர்ந்து சமைத்து உணவு உண்டனர்.

அங்கிருந்த லானில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தவர்கள் அமைதியாக இருந்தனர். அதைக் கலைக்கும் விதமாக, “நாம வீட்டுக்கு போகலாமா, எனக்கு அந்த போன் வந்ததுல இருந்து பயமா இருக்கு?”

அவளைப் புரிந்தவனாக, “நான் ப்ரவீன்கிட்ட சொல்லிட்டேன், ரெண்டுபேரையும் SAFE- ஆ இருக்க சொல்லி, அவங்களும் இருக்கறதாக சொல்லிட்டாங்க. நோ வொர்ரீஸ்.”

“இரண்டு நாள் தான டா... நாம இங்க ஸ்டே பண்ணிட்டே போகலாம். நமக்கும் திரும்ப இந்த மாதிரி சான்ஸ் கிடைக்காது” என்றான்.

பின் அவளைத் தெளிவாக்க முயன்றான். அவளை ஹாலிற்கு கூட்டி சென்றவன். அங்கிருந்த டிவியை ஆன் செய்து, பாடல்களை ஒலிக்கவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.