Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி

Vaanum mannum katti kondathe

ரேவதி, சந்திரன் தம்பதியின் ஒரே மகன் கணேஷ்.

சந்திரனின் சாப்ட்வேர் கம்பெனியில் முதலாளி என்ற பந்தா இல்லாமல் சாதாரண வேலை செய்தாலும், அக்ஷரா அவனுக்கு வைத்திருக்கும் செல்ல பெயரை போல நிஜமாகவே அவன் ‘ராம்போ’ தான்.

வேலை, பிரென்ட்ஸ் தவிர அவனுக்கு மிகவும் பிடித்தது பாக்ஸிங். கிடைக்கும் ப்ரீ டைம் முழுவதையும் தன் பாக்ஸிங் பேகை பன்ச் செய்வதிலேயே செலவிடுவான்.

சுருக்கமாக சொன்னால், அவனை ஆபிசில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஜிம்மில் கட்டாயம் சந்திக்கலாம்!

கணேஷின் பள்ளித் தோழி அகிலா. அகிலாவின் பெற்றோர் வெளி நாடு வாழ் இந்தியர்கள். எனவே சிறு வயது முதலே போர்டிங் பள்ளியில் படித்த அகிலாவிற்கு கணேஷ், ரேவதி, சந்திரன் தான் சொந்த குடும்பத்தை போல.

ரேவதியையும், சந்திரனையும், அம்மா, அப்பா என்று தான் அழைப்பாள் அகிலா.

அக்ஷராவும் அகிலாவும் ஒரே கல்லூரியில் பயில, அகிலாவின் மூலம் கணேஷிற்கு அறிமுகமானாள் அக்ஷரா.

நேரம், இடம் எதையும் கவனிக்காமல் கேமராவுடன் சுற்றும் அக்ஷராவிற்கு அவ்வப்போது பாடிகார்டாக மாறி உதவுவான் கணேஷ்.

ணேஷும் அகிலாவும் விடை பெற்று சென்ற பின், ஆகாஷ் மெல்ல அக்ஷராவின் காதில் முணுமுணுத்தான்.

“அக்ஷரா ஆன்ட்டியும், அம்மாவும் இந்த காருல வரட்டும், அப்பா இரண்டு பேரும் உங்க காருல வரட்டும்...”

அக்ஷராவும் பதிலுக்கு அதே கிசுகிசு குரலில் பேசினாள்.

“என்னடா உளறுற? இன்னைக்கு அவங்க வெடிங் ஆனிவெர்சரி. இன்னைக்கு அவங்களை பிரிச்ச பாவம் எனக்கு வேணாம்”

“ஏய் பேக்கு, இரண்டு அம்மாவும் ஒன்னா இருந்தா ப்ரீயா கதை பேசிட்டு வருவாங்க. அவங்களுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும். அப்பா கூட இருந்தா ஒன்னு அப்பா சொல்றதை கேட்டு ம்ம்ம் போடுவாங்க, இல்லை தூங்குவாங்க. அதும் முக்கியமா உங்க அம்மா வீட்டை விட்டு வெளியே வரதே அதிசயம். இப்படி வந்திருக்க டைம்ல அவங்க பிரெண்ட் கூட தனியா கொஞ்ச நேரம் ஸ்பென்ட் செய்யட்டுமே. வெடிங் ஆனிவர்சரி இன்னைக்கு முழு நாள் இருக்கே, அம்மா, அப்பா வீட்டுல போய் கொண்டாட்டத்தை கண்டின்யூ செய்துப்பாங்க”

“ஹப்பா, இவ்வளோ யோசிக்குறீயே, எப்படிடா அஷ்!!! நீ சொல்றதும் சரி, இரண்டு அப்பாங்க தனியா மொக்கை போடட்டும். அம்மாங்க மட்டும் இல்லை, நானும் உன் கூடயே வரேன்”

“முதல்ல பேசு... அப்பா உடனே சரின்னு சொல்ல மாட்டார். அவரால அம்மாவை பிரிஞ்சு இருக்க முடியாது. எப்படியாவது பேசி சமாளி”

“இதெல்லாம் நீ எனக்கு சொல்லி தரனுமா ஆஷ், இப்புடு சூடு!!!”

ஆகாஷிடம் ஸ்டைலாக சொல்லி விட்டு, நேராக பிரகாஷிடம் சென்றாள் அக்ஷரா. மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தவரை தனியே அழைத்து பேசினாள்.

பின் மீண்டும் ஆகாஷை நோக்கி வந்தவள்,

“சக்சஸ்” என்றாள்

“எப்படிடி?”

“அதெல்லாம் சீக்ரட் அஷ் சொல்ல முடியாது...” என அக்ஷரா சொல்லி கொண்டிருக்கும் போதே, பிரகாஷ் அவர்களை நோக்கி வந்தார்.

“ஆகாஷ், அம்மாவும், ஆன்ட்டியும் நம்ம காருல வரட்டும்... நீ டிரைவ் செய். பேபி நீ எங்க கூட வரீயா?” என அக்ஷராவை பார்த்து கேட்கவும்,

“இல்லை அங்கிள் நானும் அம்மா கூடவே வரேன்... நீங்க இரண்டு பேரும் என்ஜாய் செய்ங்க” என்றாள் அக்ஷ்ரா.

“ஓகே சுபா, நீயும், அவங்களும் ஆகாஷ் கூட போங்க, நான் வசீ கூட வரேன்” என பிரகாஷ் சொல்லவும், சுபாஷினி இளையவர்கள் இருவரையும் பார்த்தாள்.

அக்ஷ்ரா கண் சிமிட்டி என் வேலை தான் என்று சிக்னல் கொடுக்கவும், மேலே எதுவும் கேட்காமல்,

“சரிங்க..” என்றாள்.

பிரகாஷும், வசீகரனும் கிளம்ப, ஆகாஷ், பெண்கள் படையுடன் காரை கிளப்பினான்.

அக்ஷ்ரா அவனுடன் மின்னிருக்கையில் அமர்ந்திருக்க, அம்மாக்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

“என்னடா செல்லக்குட்டி செஞ்ச? ஏன் அங்கிள் திடீர்னு பிளானை மாத்திட்டார்?” அக்ஷராவிடம் கேட்டாள் சுபாஷினி.

“அவர் ஈசியா உங்களை விட்டுட்டு கிளம்புரவரா என்ன ஸ்வீட்ஹார்ட்! ஒரு பொய் சொல்லி அனுப்பி வச்சேன்...”

“என்ன பொய் சொன்ன? எதுக்கு சொன்ன?”

“அங்கிள் உங்களுக்கு பட்டுப்புடவை வாங்கி கொடுத்தாராமே...”

“ஆமாம்...” பெருமையும், வெட்கமும் கலக்க சொன்னாள் சுபாஷினி.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிDevi 2018-08-19 18:13
wow... Akash ketpaaanu edhirparkkalai.. :yes: aanal unga prologue padi idu nadakkuma theriyalaiye :Q: waiting.. Cute update Bindu ji
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிsaaru 2018-07-20 14:29
Very nice bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிBindu Vinod 2018-08-08 21:08
Thanks pa Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிPadmini 2018-06-30 09:35
Nice update Bindu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிBindu Vinod 2018-07-18 10:34
Thank you very much Padmini :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிSAJU 2018-06-28 15:24
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிBindu Vinod 2018-06-28 22:16
Thank you Saju :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிmadhumathi9 2018-06-28 05:53
:clap: nice epi.but aksharaa sammadham solvaala :Q: enna nadakkuthendru paarppom. (y) waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிBindu Vinod 2018-06-28 22:15
Thank you Madhumathi :-)

Unga kelvikana pathil adutha epila kidaichidum :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிThenmozhi 2018-06-27 21:20
Padichu mudicha udane Bahubali-la vara
thaai madiyil povaavaan
paattu line nyabagam vanthuchu.

Ivaru thaana avaru ;-) Ippadi ellaam chellam konchittu tomm,

ammaa ningal seithathu thaavrammaa
nu solla porarunu theriyuthu ;-)

Heroine enge ji?? Epo entry avanga? Ammas-ku pidichiruku sari, Akshara intha kalyanathuku sammatham solvangala?

Waiting to read Binds ji.

And kamar-kat kaga en pakkam irunthu extra 2 love it 💖💖

Kamarkat virumbuvor sangam ungalai anbudan vazhthugirathu 🍬🍬🍬
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிBindu Vinod 2018-06-28 22:14
Thank you Thens :-)

Kamarkat'ku 2e 2 love its romba kammiyana deal'a iruke. Koncham parthu podunga madam :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிAdharvJo 2018-06-27 21:19
I see, but inga ninga than planner and path shower :D so engala confuse panama master plan enan secret aga sollunga climax varaikkum adhai appadi-a maintain panuven ;-) lovely update bindu ma'am :clap: :clap: Ellarume inga rombha illa konjam over sweetish aga irukanga :yes: its a cool.flow but hero eppadi pechu maruvaru in near future n therindhukola waiting. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதிBindu Vinod 2018-06-28 22:13
Thank you Adharv. :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top