(Reading time: 12 - 23 minutes)

சரியான நேரத்துல சொல்ற ஒரு குட்டி எஸ் நம்ம வாழ்க்கையை ரொம்பவே அழகா மாத்திடும்.கல்யாணத்தை பத்தி எல்லாருக்கும் எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். என் மனசுல பட்டதை சொல்றேன்.ஆணோ பெண்ணோ தனக்கு வர போற துணையை தன்னோட சரி பாதியா நினைக்கணும்.தன்னவங்க சந்தோசத்தையும் சேர்த்து அவங்களோட உறவுகளையும் சந்தோசமா வச்சுக்க நினைக்கணும்.

உன்னோட அப்பா அம்மாவுக்கு இன்னொரு மகளா இருக்க ஆசை படறேனு பொண்ணும் உன் அப்பா அம்மாவுக்கு இனி நான் ஒரு மகனா இருக்கணும்னு நினைக்குறேனு ஆணும் வாழ்ந்து காட்டணும்.இதெல்லாம் ஒரு நிமிசத்துல சாதிக்குற விஷயம் இல்லை .டைம் எடுக்கும் பட் அப்படி வாழ்ந்து கட்டிட்டோம்னா எவ்ளோ அழகா இருக்கும் .

ஓகே நேயர்களே நான் என்னோட ஒப்பீனியன் அபௌட் மேரேஜ் பத்தி உங்க கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கேன் .நீங்களும் உங்க கருத்துக்களை எனக்கு கால் பண்ணி சொல்லலாம் .அண்ட் நீங்க கேட்டுட்டு இருக்குறது நம்ம சில்ஸி ஏப் எம் நான் உங்க அஷி .இதோ மை பாவரேட் சாங் .

பிரண்ட்ஸ் இப்படி நான் கதைக்குள்ள அப்பப்போ என்ட்ரி குடுக்கலாம் தான? ப்ளீஸ் எஸ் சொல்லிடுங்க பிரண்ட்ஸ் உங்க பிரண்ட் அஷி காக .

வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்

ஆனாலும் அன்பு மாறதம்மா

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்

பிரிவென்ற சொல்லே அறியாதம்மா

அழகான மனைவி அன்பான துணைவி

அடைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சம் எனும் வீணை பாடுதே தோடி

சந்தோஷ சாம்பிராஜ்யமே

சஹி எப் எம் இல் இந்த பாடலை கேட்டு கொண்டே சென்னை செல்லும் பேருந்தில் தலை சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்.அம்மா ஆசையாக செய்த சப்பாத்தியும் குருமாவும் மிகவும் சுவையாக இருந்தது.சாப்பிட்டு கை கழுவவும் அவள் மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது.

ரயில் பயணத்தில் இரவு நேரத்தில் அமைதியாக அவனும் அந்த நிகழ்ச்சியை தான் கேட்டு கொண்டிருந்தான்.அவளை பார்த்து 2 நாட்கள் ஓடி விட்டது.அன்று நடந்ததை மெல்ல அசை போட்டான்.

அவளை பார்த்துட்டு வீட்டுக்கு வந்தனின் நிலை சொல்ல முடியாத ஒரு பரவசத்தில் இருந்தது .தனிமை நாடி அவளின் புகை படத்தை பார்த்தவாறு இருந்தான்.திடிரென்று கையில் இருந்த மொபைல் பறிக்க பட்டது

ஏன் டா இடியட் அவ்ளோ டயலாக் பேசிட்டு இப்போ அண்ணி போட்டோவை பாத்து சைட் அடிக்குறியா.அப்பா என்ன சொல்லுவாரோ நு பயந்து போய் பிரீஸ் ஆகிட்டேன் ஒரு நிமிஷம்.நீ என்னடானா கூல் ஆ வந்து டைரக்ட் அ மேரேஜ் வைங்கன்னு சொல்ற.என்ன படுத்துனதுக்கு என்ன செய்யலாம் பேசாம இந்த மொபைல் ல இருக்குற பிக் அ டெலீட் பண்ணிரலாம்.அது தான் சரி என்று சக்தி மொபைலை பார்க்க சரவணன் அதை பிடுங்க முயற்சி செய்தான்.

 டேய் சக்தி நோ அப்படி செய்யாத .நான் வேற எதுலயும் சேவ் பண்ணலை குடுத்துரு.முடியாது முடியாது என்று ஓட ஆரம்பித்தான்.

ஹால் சோபாவை சுற்றி ஓடி கொண்டிருந்தனர்.

டேய் டேய் என்னங்க டா.நில்லுங்க ரெண்டு பேரும்.சக்தி நிக்க போறியா இல்லையா.சரோ கண்ணா இரு இரு என்று அவனை ஒரு வழியாக பிடித்தார்.லட்சுமி

அம்மா என் மொபைல் பிடுங்கிட்டு ஓடுறான் .அதுல இம்போர்ட்டன்ட் அ ஒன்னு இருக்கு ஆபீஸ் பைல் மா.குடுக்க சொல்லு.

டேய் ஷக்தி என்ன விளையாட்டு இது குடு என்றார்.

அட பொய் சொல்லி அண்ணா இரு உன்னைய . அவனின் லாக் பட்டர்ன் தெரியும் என்பதால் அவனே கலோரி ஓபன் செய்து சஹியின் படத்தை காட்டினான்.இது தான் மா அண்ணன் வச்சுருக்க முக்கியமான பைல்.

பார்த்துவிட்டு சிரித்தவாறே மொபைலை சரவணனிடம் குடுத்தார்.அசடு வழிய வாங்கி கொண்டு தம்பியை செல்லமாக முறைத்தான்.உன்னை என்று சக்தியை துரத்துவது இப்போது சரவணன் முறை ஆகிற்று.

டேய் பசங்களா அப்பா வர நேரம் ஆச்சு டா என்று லக்ஷ்மி கூற சிரித்தவாறே எங்க உன் வீட்டுக்காரரை இப்போ வர சொல்லு பாப்போம் என்று விளையாடி கொண்டிருந்தான் ஷக்தி.

அவன் சொன்ன நேரமோ என்னமோ நாராயணன் சரியாக அதே நேரம் நுழைந்தார்.இது தெரியாமல் ஷக்தி ஏன் மா இப்போ என்ன உன் வீட்டுக்காரருக்கு கொம்பு முளைச்சுருக்கா அப்டின்னா வந்து என்னய முட்ட சொல்லு.

ஏன் டா அப்பா நு சொல்றேன் பயமில்லையா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.