(Reading time: 12 - 23 minutes)

யு சி மம்மி பேசிக்கலி ஐ அம் ஸ்ட்ரோங்.

அப்புறம் ஏன் டா அப்பாவை பார்த்து அப்படி நடுங்குற தம்பி பையா.

இதுக்கெல்லாம் காரணம் நீ தான் டா அண்ணா.

வாட் நானா .

ம்ம் எஸ் ப்ரோ நீ பாட்டுக்கு மார்க்ஸ் ஹை அ வாங்கிட்டு சிரிச்சுகிட்டே சின்ன பிள்ளைல வருவியே அப்போ இந்த தம்பியை தங்க கம்பியை யோசிச்சியா. அண்ணா எப்படி படிக்குறான் நீ ஏன் இப்படினு நான் கொஞ்ச அடியா வாங்குனேன் அப்பா கிட்ட அப்போ இருந்து இப்போ வரைக்கும் எனக்கு மார்க்ஸ் ஏறல அப்பாக்கும் எனக்கும் செட் ஆகாமலே போச்சு என்று செம்ம காமெடியாக பெரபோர்மன்ஸ் (pperformance)பண்ணி கொண்டிருந்தான்.

அவன் சொல்லி முடிக்கும் வரை பின்னால் இருந்து கேட்டு கொண்டிருந்தவர் அவன் தோளில் கை வைத்தார்.

தொட்டதும் தெரிந்து விட்டது தந்தை என்று.லக்ஷ்மியும் சரவணனும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த இன்டெர்னல்ஸ் மார்க்ஸ் எவ்ளோ டா.

டாடி இன்னும் பேப்பர் கொடுக்கல டாடி.ப்ராஜெக்ட் வேலை இருக்கே நான் போய் பாக்குறேன் என்று நழுவி விட்டான்

வாங்க காபி எடுத்துட்டு வரவா என்று லட்சுமி உள்ளே சென்றார்.

சரவணா

என்னப்பா

நாளைக்கு தான கிளம்புற

ஆமப்பா

பொண்ணு பிடிச்சிருக்கு தான

நீங்க எது செஞ்சாலும் சரி பா என்று உள்ளே நழுவினான்.

டேய் அண்ணா நில்லு நீ மட்டும் எப்படி டா இப்படி கேப் ல சிக்ஸர் அடிக்குற.

அதுக்கெல்லாம் கிட்னி வேணும் டா தம்பி.

சரி நான் எதும் உனக்கு ஹெல்ப் பண்ணவா என்ற சரவணனை ஒரு மாதிரியாக பார்த்தான் ஷக்தி. இப்போ உனக்கு நான் என்ன டா செய்யணும் அதை சொல்லு.

அது டா

டேய் விஷயத்துக்கு வா

சஹி நம்பர் வேணும் டா

அதுதானே பாத்தேன் சரி நான் நம்பர் குடுத்தா நீ எனக்கு என்ன குடுப்ப ?

உனக்கு என்ன வேணும் நாளும் தரேன் ஷக்தி குட்டி.

என்னது குட்டியா ஒஹ்ஹ ஏதும் சின்னதா கேக்கணும்னு மறை முகமா சொல்லறானோ? ஷக்தி அலெர்ட் ஆகிக்கோ.

 ப்ரோ எனக்கு ஆப்பிள்.

.சூப்பர் டா 2 கிலோ வாங்கி தரேன்.

எதை

ஆப்பிள் பழம் .

ஹேய் ஆசை தோசை நான் கேட்டது பழம் இல்லை. ஆப்பிள் ஐ போன்

டேய் உனக்கே நல்லா இருக்கா

 நல்லா இருக்க போய் தான கேக்குறேன் யோசிக்காத உன் கல்யாணம் முடியுற வரைக்கும் என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் தான் பண்ணனும்

சரி வாங்கி குடு நம்பர்

உனக்கு வாட்ஸாப்ப் பண்ணிட்டேன்

அதுக்குள்ளயா

ஆமா எப்படியும் நீ கேட்பேன்னு தெரியும் அதான் அண்ணி சிஸ்டர் மஹி கிட்ட வாங்கி வச்சுருந்தேன் என்ஜோய்.

 என் சமத்து ஷக்தி

ஒரு நம்பர் வாங்குறதுக்கு நான் பட்ட பாடு அதை நினைத்தவாறே அவளுக்கு கால் செய்தான்.

ஹெலோ ஹாய் சஹி

 ம்ம் எஸ்

சஹி நான் சரவணன்

 நீ நீ நீங்களா சொல்லுங்க

 என்னை பிடிச்சிருக்கா இதோட நான் 3 டைம்ஸ் கேட்டுட்டேன் ம்ம்ம் அது உங்க வீட்ல ஏதும் போர்ஸ் பன்னலயே.சொல்லு சகி ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு

கொஞ்சம் விளையாடி பாப்போமா என்றது சஹியின் மனம்.

இல்லை முதல் முதலா சொல்ல போறோம் இதுல விளையாட்டு வேண்டாம்.அதும் இல்லாம என் மனசுக்கு பிடிச்ச சரண் (செல்ல பெயர் கூட வச்சாச்சு போல )விளையாட்டுக்கு கூட மனசுல பீல் பண்ண கூடாது.

பிடிக்கலைனு சொல்ல தயங்கிட்டு தான் டைம் எடுக்குறியா சஹி.சரி நீ பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் என்மனசை சொல்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.