(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி

Kaathalana nesamo

றுநாள் காலையில் முதலில் கண் முழித்த ஷ்யாமிற்கு சற்று நேரம் இருக்கும் இடம் புரியாமல் விழித்தவன், பின்னரே தான் மித்ராவின் அறையில் இருப்பதை உணர்ந்தான்.

கண்கள் மித்ரவைத் தேட, அருகில் திரும்பிப் பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆம். அவளுக்கும் அவனுக்கும் நடுவில் அவள் உயரத்தில் ஒரு டெட்டி பியர் படுத்து இருந்தது. அதை மித்ரா அணைத்து படுத்து இருந்ததைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஹேய்.. மிது .. இன்னும் நீ வளரவே இல்லைடி..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். பின் மெல்ல எழுந்து ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவன், கட்டிலில் தலைமாட்டில் நின்று முகத்தை துடைத்துக் கொண்டு இருந்தான்.

அப்போது அறைகதவு தட்டப்பட , மித்ரா கண்களைத் திறக்காமலே

“மா.. இன்னும் பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்” என்றாள். அப்போதும் விடாமல் தட்டப் படவே பாதிக் கண்ணைத் திறந்து நேராக இருந்த சுவர்க் கடிக்கரத்தைப் பார்க்க, வழக்கமாக அவள் எழுந்திருக்கும் நேரத்திற்கும் மிகவும் முன்னதாகவே காட்டியது.

வேகமாக எழுந்து கதவைத் திறந்தபடியே,

“அம்மா, இன்னும் அந்த திருப்பதி பெருமாளுக்கே சுப்ரபாதம் ஆயிருக்காது? என்னை எழுப்பி விடறீங்களே? இது நியாயமா?” என்று கேட்டாள்.

அத்தோடு நில்லாமல், தன் அன்னையின் கையில் இருந்த காபி ட்ரே பார்த்தவள், தனக்கு மட்டும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு, அதை வாசனை  பிடித்தவளாக ,

“ஏதோ, உங்க பில்ட்டர் காபிக்காக உங்களை சும்மா விடறேன்” என்று விட்டு நகரப் போனாள். சபரியோ அவளைத் திட்ட வந்தவர், தன்னைக் கட்டுப்படுத்தி,

“மித்ரா, ஷ்யாமிற்கும் காபி எடுத்துட்டுப் போ” என,

“அத்தானுக்கு, எங்கிட்ட ஏன் கொடுக்கிற? அவர் ரூம்லே இருப்பாரு கொண்டு கொடு” என்று கூறிக் கொண்டிருக்கும் போது தான் நினைவு வந்தது. தனக்கு முதல் நாள் ஷ்யாமோடு நடந்த திருமணமும், அதை ஒட்டிய மற்ற நிகழ்வுகளும். அத்தோடு அப்போதுதான் ஷ்யாம் தன் அறையில் தங்கிய நினைவும் வர, நாக்கைக் கடித்தவளாக திரும்பினாள்.

அங்கே ஷ்யாம் ஒரு சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். சபரி அவளை முறைத்துக் கொண்டே, காபி ட்ரே கொடுக்க, தன் அன்னையிடம் வழிந்தபடி, வாங்கிக் கொண்டாள்.

“சீக்கிரம் குளிச்சுட்டு , நல்ல புடவையா கட்டிட்டு வா” என்றார் சபரி.

அவரிடம் “சரிம்மா” என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்லதவள், உள்ளே சென்றாள்.

அவன் அருகில் மெல்ல சென்றவள்,

“வந்து.. சாரி. நியாபகம் இல்லை. நீங்க இருக்கீங்கன்னு” என்று ஏதோ உளறினாள்.

“அது இருக்கட்டும். இது என்ன? “ என்று தங்களுக்கு நடுவில் இருந்த டெட்டியை பார்த்துக் கேட்டான்.

“ஒஹ். இது என்னோட பெட் வின்னி..”

“சரி. ரூம்லே தான் நிறைய செல்ப் இருக்கே. அத விட்டுட்டு இங்கே பெட்லே வச்ச்ருக்க.”

“நான் ரூம்லே இல்லாதப்ப அதுக்கு இடம் அங்கே இருக்கிற செல்ப்.” என்று அவள் காண்பித்த இடம் அவள் வார்டுரோப் அருகிலான இடம். அதில்  அழகாக ஒரு சின்ன வீடு போல் செய்து இருந்தாள்.

“நைட் மட்டும் என்னோட தான் வச்சுப்பேன்’ என்று கூறினாள்.

“நேற்றைக்கு நைட் படுக்கும் போது நான் அதைப் பார்க்கவில்லையே. “

“கல்யாண மண்டபத்துக்கு எல்லாம் இத தூக்கிட்டு வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களா. அதான் அதை உள்ளே வச்சுருந்தேன். நைட் படுத்ததும் எனக்கு தூக்கம் வராம ரொம்ப புரண்டுட்டே இருந்தேனா? அப்போ தான் என் வின்னி நியாபகம் வந்துது. போய் எடுத்துட்டு வந்துட்டு படுத்தேன். அதுக்கு அப்புறம் நல்லா தூங்கிட்டேன்”

“ஹ்ம்ம்.. கிழிஞ்சது போ” என்று முனகியவன்,

“டெய்லி இப்படிதான் பண்ணுவியா?

“ஆமாம் அத்தான்“

“சரி. இன்றைக்கு நம்ம வீட்டுக்கு போகப் போறோமே.. அங்கே என்ன பண்ணுவ?

“ஏன் நான் அங்கியும் எடுத்துட்டு வருவேன்”

“அதுக்கு நான் அலோவ் பண்ணனும் மேடம்”

“ஹ. ஏன் பண்ண மாட்டீங்களாம்?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என் ரூம்லே பெட்ஸ் நாட் அலோவ்ட்.

“ப்ளீஸ் ப்ளீஸ் அத்தான்” என்று அவள் கண்களைச் சுருக்கி கேட்கவும், சரி என்று விடலாமா என்று யோசித்தவன், நோ இவ இந்த டெட்டிய கெட்டியா பிடிசுகிட்டு என்னை டீலில் விட்டுடுவா. சோ ஷ்யாம் பீ ஸ்டெடி என்று மனதிற்குள் கூறிக் கொண்டவன்,

“நோ. நான் சொன்னது சொன்னதுதான். இதை  இங்கியே விட்டுடுதான் வரணும்”

அவள் மூஞ்சைத் தூக்கிக் கொண்டு, தன் காபி எடுத்துக் குடிக்கப் போனாள்.

“ஒய்.. பிரஷ் பண்ணினியா?

“பண்ணிட்டேனே”

“எப்போ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.