Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

அன்று 2002

திலோ அழுவதை பார்த்து பயந்து போன சித்தார்த் என்ன செய்வது என வேர்த்து வழிய வேறு வழி தெரியாமல் இறுதியாக பாட்டியை நாடி அவரின் அறையை நோக்கி ஓடிச் சென்றான்.

ரூமிலிருந்து வெளியே சென்றவன் நேராக தாத்தா பாட்டி ரூமுக்குச் சென்று அங்கிருந்த பாட்டியை அவசரமாக எழுப்பினான்

”பாட்டி எழுங்க பாட்டி” என கத்த தூக்கக் கலக்கத்தில் இருந்த பாட்டியும் தாத்தாவும் எழுந்து அவனை பார்த்தனர்

”என்னடா இந்த நேரத்தில எழுப்பற”

”பாட்டி வாங்க அங்க டால் அழுவுறா ஏன்னு தெரியல” என கேட்க பாட்டிக்கு இருந்த தூக்கம் கூட ஓடிவிட்டது. அவர் திலோவை காண விரைவாக சென்றார். உடனே அவர் பின்னாடியே சென்ற சித்துவை நிறுத்திய தாத்தா

”ஏன் உன் முகமெல்லாம் வேர்த்திருக்கு, உடம்பெல்லாம் நடுங்குது என்ன நடந்திச்சி” என சந்தேகத்துடன் கேட்க அவன் எச்சில் விழுங்கிக் கொண்டு

”அது தாத்தா ஒரே வேர்த்திச்சி அதான்”

”ஏசி ரூம்ல  உனக்கு வேர்த்திச்சா”

என அவர் கேட்க அவன் திருதிருவென விழிக்க அவனை அருகில் அழைத்து

”டேய் படவா உண்மையை சொல்லு அவளை நீ என்ன செஞ்ச?” என கேட்க

”தாத்தா அது எனக்கு படிப்பு முடிஞ்சிடுச்சி நான் லண்டனுக்கு போகப்போறேன்”

”சரி அதுக்கு என்ன இப்ப”

”அதான் போறதுக்கு முன்னாடி முத்தம் கேட்டேன்”

”அதான் தினமும் உனக்கு கன்னத்தில தர்றாளே அதுக்கா அவள் அழறா?”

”இல்ல தாத்தா இது லிப் கிஸ் கேட்டேன் அதுக்கு அழறா” என அவன் கூற

”ஓ அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா நீ, பொடிப்பயலே இப்பதான் உனக்கு மீசையே சின்னதா முளைச்சிருக்கு அதுக்குள்ள அவள்கிட்ட முத்தமெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டியா உன்னை” என அடிக்க வர அவன் சட்டென தப்பித்துக் கொண்டு தன் அறையை நோக்கி ஓட அங்கு அறைக்கதவு சாத்தியிருக்கவும் கதவை தட்டினான்.

”பாட்டி என்னாச்சி எதுக்கு கதவை சாத்தினீங்க திறங்க” என கத்த பாட்டி உள்ளிருந்து

”டேய் இவளோட அம்மா பக்கத்து வீட்ல இருப்பா நான் கூப்பிட்டதா அவளை இங்க வரசொல்லுடா”

”ஏன் எதுக்கு அவங்க வரனும், என்ன பிரச்சனை நான் வேணா டாக்டரை வரசொல்லட்டுமா” என கூற பொறுமையிழந்து அவரே கதவைத் திறந்து

”டேய் சொன்னதை செய் நேரா வாட்ச்மேன் கிட்ட சொல்லி பார்வதியை வரசொல்லு”

”ஏன் பாட்டி என்னாச்சி டால்க்கு என்ன?” என கவலையுடன் கேட்க

”அவள் பெரியமனுஷி ஆயிட்டாடா”

”அவள்தான் பெரிசா ஆயிட்டாளே அதுக்கென்ன இப்ப”

”டேய் மடையா அவள் வயசுக்கு வந்திட்டா போதுமா, உனக்கு சொன்னா புரியாது”

”ஏன் புரியாது புரியறமாதிரி சொல்லுங்க”

”போய் தாத்தாவை கேளு, அவர் விவரமா சொல்வாரு முதல்ல பார்வதியை வரசொல்லு” என கத்திவிட்டு கதவை இழுத்து தாப்பா போடவும்

அதற்கு மேல் நிற்காமல் வெளிய சென்ற சித் தூங்கி கொண்டிருந்த வாட்ச்மேனை எழுப்பி விசயம் கூறி அனுப்பினான். அவனும் சென்று சிறிது நேரத்தில் மகாதேவனையும் பார்வதியையும் அழைத்து வந்தான். பார்வதி மட்டும் அறைக்கு செல்ல மகாதேவன் வெளியவே நின்று கொண்டு சித்தார்த்தை பார்த்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”என்னை எதுக்கு இப்படி முறைக்கறீங்க?” என விரோதியை பார்த்து கேட்பது போல் கேட்டான் சித்தார்த்

”நீ ஏன் இப்படி பதட்டமா இருக்க” என மகாதேவன் சந்தேகத்துடன் அவனை ஏற இறங்கப் பார்த்து கேட்டார்

”இப்ப இதான் பிரச்சனையா இல்ல டாலுக்கு உடம்பு சரியில்லாம இருக்கறது பிரச்சனையா” என கேட்க

”எனக்கென்னவோ உன்னாலதான் என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும்னு  நான் நினைக்கிறேன்”

”நீங்க ஒண்ணும் டாக்டர் கிடையாது என்னால எப்பவும் டாலுக்கு எதுவும் வராது வந்தா அது உங்களாலதான் இருக்கும்”

”நடுராத்திரியில என் பொண்ணு அழறா நீ எதையும் செய்யாமதான் அவள் அழறாளா”

”அவள் அழற மாதிரி நான் என்னிக்குமே எதையுமே செஞ்சதில்லை, அது உங்களுக்கும் நல்லாவே தெரியும்னு நான் நினைக்கிறேன்”

”உன்னை சின்னப்பவே என்னால சமாளிக்க முடியல, இப்ப நீ பெரியவனா வேற ஆயிட்ட, என்னை விட ஹைட்டா வேற இருக்க, இப்ப உன்னை என்னால எதுவும் செய்யமுடியாது ஆனா ஒண்ணு நீ இங்க இருக்கற வரைக்கும்தான், நீ லண்டனுக்கு போயிட்டா யார் அவளை பார்த்துக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்” என அவர் கூறவும் அதற்கு சித்தார்த்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாThenmozhi 2018-07-31 18:58
nice update Sasirekha.

Sidharth & Thilo pair (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாராஜேந்திரன் 2018-07-20 15:44
எப்பதான் டால்தான் திலோன்னு சித்துக்கு சொல்வீங்க steam இப்பவே 16 எபியாயிடுச்சே :angry: குட்டி சித் பாவம்னா பெரிய டால் ரொம்ப ரொம்ப பாவம் :yes: சீக்கிரமா சஸ்பென்சை உடைச்சி டாலையும் சித்துவையும் சேர்த்துடுங்க 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாvijayalakshmi 2018-07-20 15:42
சித்துவோட பொறாமை பார்க்க நல்லாயிருக்கு :P :cool: :GL: பாவம் குட்டி சித் :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாராணி 2018-07-20 15:40
பாவம் குட்டி சித் :sad: பிக் சித் பிக் டாலை லவ் பண்ணுவாரா :Q: நைஸ் எபி :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாAdharvJo 2018-07-20 13:25
Thathavikk ertha peren....thath's unga explanation oda vibaridhathai parungal :sad: ippove kalayanam pani vaika solluraru :D :grin: aduthavati scientific aga sollungal thatha sollungal unga smart grand son eppo baby yaga marurarun theriyadhu :yes: sometimes ellame therindhavnpole pesuran :Q: however his love n care towards doll is superb
Achacho Mr Siddharth unga clause ellam bayangarm boss nambi emanthadhu ninga ippo over strict agama at least konjam salary yavdhu kudunga....already save seithal ok illati pavam buvavukk Ena panuvanga :Q: talent illadha employees ellam mudinja alwavukk repay pana solli thukunga boss vachikittu Ena pana poringa....indha mathiri smart chip concept rombha bayangarma irukku :D but adhukku adhi-a thilo chamathu solluvadhu cute :lol: and Siddharth oda poramai (y) enada thambi ninga annan bad businessmen aitarun feel pana business eppadi na pogatum Anna kalayan mukkiyamn irukingale... interesting flow ma'am :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாmahinagaraj 2018-07-20 10:52
so sweet.... :clap: :D :clap:
unmaiya sidhthu & thilo super jodi... avanga silent love sema.... ;-)
sekaram dholl tan thilonnu teriyanum...
thilo athiya gonjarathu so sweeeeeet..... ;-) :P :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாmadhumathi9 2018-07-20 05:58
facepalm enna mam ippadi oru gundai thookki podareenga :Q: rendu perum seruvatharkku late aaguthennu naanga kavalai padugirom :sad: neenga ippadi solreengale.nice epi.waiting to read more. :thnkx: (y) :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாsaaru 2018-07-20 00:23
Periya periya update super dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகாJass 2018-07-19 19:22
Yeppo thursday varum aavalaga kaathirukiren...kadhai sellum vidham arumai
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top