(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 06 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

றவுகள் என்பது ஒரு தொடர் சங்கிலி. மரணம் அவற்றை பிரித்திட முடியாது. அடுத்தடுத்த சந்ததிகளுக்கு முக ஜாடை, டி.என.ஏ. அல்லது குறிப்பிட்ட பழக்கவழக்கம் என எதையாவதை பரிசளித்துவிட்டுதான் சில மூதாதையர் சென்றிருப்பார்கள்..

இப்படியெல்லாம் யோசித்து மண்டை காய்ந்த ஆகாஷிற்கு அந்த அமிர்த தகவல் கிட்டியது. சாருவை ஒருவழி செய்துவிட முழுமூச்சில் இறங்கினான். வீட்டில் அதிகம் யாரும் பேசவில்லை. அவரவர் வேலையை இயந்திரத்தனமாக செய்துக் கொண்டிருந்தனர்.

மாலை லலிதாவும் ராகவும் ஒருவர் பின் ஒருவராக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினர். அவர்கள் சற்று ரிலாக்ஸ் ஆனதும் பத்மாவதி அன்று நடந்ததை அவர்களிடம் கூறினார்.

லலிதா விக்கித்துப் போனாள் “என்னடா இவ்ளோ நடந்திருக்கு . . நீ சும்மாவா விட்ட?” என ஆகாஷை கேட்டாள்

“இல்லடி ஆகாஷ் அந்த பொண்ண உண்டு இல்லனு பண்ணிட்டான் . .” இது பத்மாவதி

“அந்த போட்டோவ காட்டு மா”

“இந்தா”

“அச்சு உன்ன மாதிரி இல்லமா?”

“ஆமா”

“இது பக்கத்துல யாரு?”

“ம்ம்ம் . . . பாய்பிரெண்டு” என்றார் நக்கலாக

“அம்மா . ..” என ஓர் ஆர்தத்துடன் பத்மாவதியை குறும்புடன் பார்க்க . . லலிதா முதுகில் ரெண்டு வைத்த பத்மாவதி “ஏன் எனக்கு பாய்பிரெண்டு இருக்கக் கூடாதா?” என்றார்.

“நீங்க பாருங்க ராகவ்” லலிதா காட்ட

“ஓ மை காட்” என ராகவும் வாயை பிளந்தான் போட்டோவை பார்த்தான்.

ஆகாஷ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் மனதில் அடுத்து செய்ய வேண்டியவை ஓடிக் கொண்டிருந்தன.

“எல்லாரும் இப்பவே சாரு வீட்டுக்கு கிளம்புங்க” திடீலென ஆணை பிறந்தது ஆகாஷிடம்.

“நானும் ராகவும் எதுக்குடா?” லலிதா கேட்க

“சொன்னத செய் லலிதா . . ராகவ் அப்பா அம்மா நீங்களும் கிளம்புங்க” குரலில் கடுமை ஒலித்தது. யாரும் மறுப் பேச்சின்றி கிளம்பினர். குழந்தை ஹரி உட்பட.

சாரு காலிங் பெல் சப்தத்தைக் கேட்டவள் யாரோ என கதவை திறக்க முன்னே லலிதாவை பார்த்து அவள் பின் ஒரு பட்டாளத்தையே பார்த்தவள். இறுதியாக அவள் கண்கள் ஆகாஷிடம் நின்றது.

அவன் புன்னகையுடன் “ஹாய்ய்ய்ய்ய . . . உள்ளவானு கூப்பிட மாட்டியா சாரு”

அவன் “ஹாய்யில்” ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருப்பதை அவள் உணராமல் இல்லை.

“உள்ள வாங்க அம்மா . . வாங்க” என தயக்கத்துடன் அனைவரையும் அழைத்தாள். “இவன் எப்படி பால் போட போறானோ . . போல்ட் ஆகாம இருக்கணுமே” என பயந்தாள். அவள் உணர்வுகள் ஆகாஷால் கவனிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தாலும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

“உட்காருங்க . . காபி?” என தொடங்கியவளை இடைமறித்த ஆகாஷ் தன் தாயின் கையை பிடித்து சாருவின் கைகளுக்குள் வைத்து “சாரு என் அம்மா . . சாரி உன் அம்மா கண்ணுல இனிமே ஆனந்த கண்ணீர் தவிர வேற எதுவுமே வரக் கூடாது.. . என் உயிரயே உன் கையில ஒப்படைக்கிறேன் . . இவங்க உன சொத்து” என்றான் வராத கண்ணீரை துடைத்தபடி.

“என்னடா சேம் சைட் கோல் அடிக்கிற” சாரு மைண்ட்வாய்ஸ் லபோதிபோவென கத்தியது.

“இது ஆடி மாசம்ல ஒண்ணு வாங்கினா இன்னொன்னு ப்ரீ . . சோ அம்மா கூட அப்பா ப்ரீ ” சாரு அம்மாவின் கைத்தளம் பற்றி நின்றிருக்க அதன் மேல் அப்பாவின் கையை வைத்தான்.

“டேய் . .இது என்னடா கொடும” சாரு மைண்ட்வாய்ஸ். விழி பிதுங்கியது . .

“என் அக்கா இனி உன் அக்கா” என லலிதா கையை மேல் வைத்தான்

“ராகவும் குழந்தையும் லலிதா இல்லாம இருக்க முடியாது . . அவங்களும் இனி உனக்குதான். சாருவிற்கு மூச்சே நின்றுவிடும் போல ஆகிவிட்டது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“டேய்ய்ய என்னடா பண்ற” லலிதா அலறியே விட்டாள்

நிதானமான அமைதியின் வடிவமாக நின்ற ஆகாஷ் “இவங்க எல்லாரும் உனக்குதான் சாரு”

“இல்ல ஆகா. .” என சாரு பேச முடியாமல் திணற

தன் குடும்பத்தாரை பார்த்து “நான் வீட்டுக்கு போயி உங்க திங்க்ஸ்ச அனுப்புறேன்” என சொல்லி வாசலை நோக்கி அடி வைத்தவனை

“நில்லுடா . . என்ன இதெல்லாம் விளையாட்டு ஆகாஷ்” என்றார் அம்மா

அவன் சாரு அருகில் சென்று “நான் விளையாடுறேனா சாரு?“

அவளுக்கு ஆம் இல்லை இரண்டும் சொல்ல முடியாமல் முழித்தாள் . . ஆகாஷ் மேல் சூடான கோபம் உண்டாகி வெப்பசலனம் காரணமாக கண்களில் மழை மேகம் . . மழையை பொழிய காத்திருந்தது.

முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்தது முதல் சாருவின் ஒவ்வொரு முக அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிறான் ஆகாஷ். அவன் இத்தனை அருகில் நின்று இப்படி கேட்டது . . அவனின் முழுகட்டுப்பாட்டுக்குள் அவள் வந்துவிட்டதைப் போல உணர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.