(Reading time: 11 - 21 minutes)

“உன்ன இதெல்லாம் செய்ய சொன்னது யார் சாரு . . தைரியமா சொல்லு . . அவங்களால உன்ன ஒண்ணும் செய்ய முடியாது . . நான் இருக்கேன்” கேட்க வேண்டியவற்றை தாமதிக்காமல் கேட்டுவிட்டான் . . ” வசீகரமான அடிபணிய வைக்கும் குரல்.

சாருவிற்கு அவனின் உடல் மொழியே அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை சொல்லலாமல் சொல்லியது.

“அது வந்து . .” என சாரு தயங்கி தொடங்க

“டேய் உன் கேஸ் விஷயத்துல எங்களுக்கெல்லாம் என்னடா வேல நாங்க கிளம்புறோம்” என லலிதா படபடத்தாள்

“நோ” என்ற ஒற்றை வார்த்தை லலிதாவை நோக்கி ஆணித்தரமாக வந்தது மீண்டும் அவன் பார்வை சாரு மேல் படிய . . என் கேள்விக்கு விடை வரவில்லை என்பதைப் போல அவளை பார்த்தான்.

“இதெல்லாத்துக்கும் காரணம் . . .” சாரு வார்த்தையை சிரமத்துடன் கோர்க்க ஆரம்பித்தாள் . .

“ஆகாஷ் எனக்கு போர் அடிக்குது” இது அப்பா

முடியாது என தலையசைத்தான்.

“லலிதா . .” என சாரு முடித்தாள்.

லலிதா பொய் கோபத்தோடு முறைக்க . . சாரு ஆகாஷின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்.

“இல்லடா பொய் சொல்றா சாரு . . எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல” என லலிதா கத்தியேவிட்டாள். “ஐயோ உளறிட்டயே” என லலிதா சாருவை பார்த்து செய்கை செய்ய . . .

“அப்ப எதுக்கு யக்கா லலிதா . . . அம்மா அப்பாவோட போட்டோவ போட்டோஷாப்ல மாத்தி . . சாருக்கு மெயில் பண்னே?” தான் அனைத்தையும் கண்டுபிடித்துவிட்ட வெற்றிப் புன்னகையுடன் கேட்டான்.

“வேற எங்கயும் மாத்த முடியல அதனால போட்டோஷாப்ல மாத்தினே” என கெத்தாக எத்தனை அடிபட்டாலும் தாங்குவேன் என்ற பாணியில் அவள் கூற . . .

இறுக்கமான சூழ்நிலை போய் அனைவரும் சிரித்தேவிட்டனர். “இந்த டிராமாக்கு கதை திரைகதை வசனம் டைரக்ஷன் எல்லாம் என் பொண்டாட்டிதான் ஆகாஷ்” என பெருமையாக சமத்தாக அப்ரூவல் ஆகி சோபாவில் குழந்தையோடு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டான் ராகவ்.

“ஆமா லலிதாதான்” சாரு நிம்மதி பெருமூச்சோடு கூறினாள். அதற்கு லலிதாவிடமிருந்து ஒரு செல்ல அடியும் வீழ்ந்தது.

“எப்படிடா கண்டு பிடிச்ச?” மகிழ்ச்சியும் பெருமையும் பொங்க மானசீகமாய் திருஷ்டி கழித்தபடி அம்மா கேட்டார்.

“முதல்ல நீங்க சொல்லுங்க . . எதுக்கு இந்த டிராமா?” என அவனும் கால்மேல் பேபாட்டபடி சோபாவில் அமர்ந்து தன் நீண்ட கைகளை சோபாவின் மேல் படரவிட்டபடி ரிலாக்சாக அமர்ந்த வண்ணம் அனைவரையும் பொதுவாக பார்த்து கேட்டான்.

சோபாவில் அவன் அருகில் ராகவும் அடுத்து அப்பா அமர . . . சிங்கிள் சோபாவில் அம்மா அமர அவர் அருகில் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு லலிதா அமர்ந்தாள். ஆகாஷ் அருகில் சேரில் சாரு. ஹரி குட்டி தன் அப்பா மடியில் ஜம்மென்று குறும்புதனம் செய்த வண்ணம் இருந்தான்.

“சாருக்கு ஒரு நல்ல லீகல் அட்வைசர் வேணும்னு சொன்னா . . என்ன இப்படி கேட்டுட என் தம்பி இருக்கானேனு சொன்னேன் . . அவ அதுக்கு என் பிராப்ளம்க்கு கொஞ்சம் வித்யாசமா யோசிக்கிற ஆள் வேணும் . . சாதாரணமா லா புக்கை கரைச்சி குடிச்சவங்க வேண்டாம்னு சொன்னா . . என் தம்பியா இன்சல்ட் பண்ற மாதிரிதானே இது . . அதனால நான் அவளுக்கு உன் திறமைய புரூவ் பண்ண ஒரு டெஸ்ட் வைக்கலாம்னு சொல்லி ஆரம்பிச்சதுதான் இது” என சொல்லி முடித்தாள் லலிதா

“லலிதா சொல்றது உண்மைதான்” என்றாள் சாரு

“இப்ப சொல்றதாவது உண்மையா இல்ல இதுவும் பார்ட் ஆப் த கேமா?” என சந்தேகமாக கேட்டவனிடம்

“நான் சொல்வதெல்லாம் உண்மை . . உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை” லலிதா விரைப்பாக நின்றபடி கூற அனைவரும் சிரித்துவிட்டனர்.

“மத்த எல்லாரும் இதுக்கு சைட் ரோலா?“ என தன் பெற்றோரை பொய் கோபத்தோடு முறைத்தான்.

“நான் முடியாதுனு சொன்னேன் இந்த லலிதாதான்” அப்பா பாவமாக சொல்ல

“அப்பாவ இப்படியா சைனாகாரன் மாதிரி மாத்துவ? என்னத கிராபிக்ஸ் கோர்ஸ் படிச்சயோ சப்ப மூக்கு தொங்கு மீசை டிரஸ் பேக்ரவுண்ட் . . . ” போட்டோவை ஆராய்ந்தபடி கேட்டான் ஆகாஷ்

“எப்படி அப்பானு கண்டுபிடிச்ச?” ஆர்வத்தோடு கேட்டாள்

“அப்பாவோட கல்யாண மோதிரம் . . ஆர் னு போட்டு இருக்கே . .அத விட்டுட . . என் அப்பாவோட பாடி லாங்க்வேஜ் எனக்கு தெரியாதா?” புருவத்தை உயர்த்தி எப்புடி என்றான்

“அம்மா உன் பாயிபெரண்டை இப்படி சொதபிஇருக்கா உன் பொண்ணு . . நீ ஒண்ணுமே சொல்லாம இருக்க?” அம்மாவை வேண்டுமென்றே உசுப்பேற்றி விட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.