(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 17 - தேவி

Kaathalana nesamo

திய உணவிற்குப் பின், எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும்போது, ஷ்யாமின் பாட்டி கௌசல்யா

“ராம், கல்யாணம் முடிஞ்சு தம்பதிகள நம்ம குல தெய்வம் கோவிலுக்குக் கூட்டிகிட்டு போகணும். எப்போ போகலாம்? என்று கேட்டார்.

ராம் யோசனையோடு ஷ்யாமைப் பார்க்க, அவனோ

“பியுட்டி , இன்னும் ஒரு மாசத்துக்கு நோ சான்ஸ். நான் நாளைக்கே கம்பனிக்கு போகணும்“

“என்னடா சொல்ற? நீ இப்போ புது மாப்பிள்ளை நியாபகம் இருக்கா?

“அது எல்லாம் நல்லா நியாபகம் இருக்கு. இது நான் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சு இருந்த மீட்டிங். நான் வந்தவுடனே ஆரம்பிச்சு இருக்கணும். இந்த கல்யாண விஷயத்தால் எல்லா வேலைகளும் ஒத்தி வச்சுருந்தேன். இதுக்கு மேலும் தள்ளிப் போட முடியாது.”

“டேய். மிதுவ கொஞ்சம் நினைச்சு பாருடா. அவளுக்கு எல்லாம் பழக வேண்டாமா?

“பாட்டி, இது உனக்கே ஓவரா தெரியல. அவளுக்கு இது என்ன தெரியாத இடமா? இல்ல வெளி மனுஷங்களா நீங்க? என்னை விட அவள நீங்க நல்லாவே பார்த்துப்பீங்க. சோ வெளியூர் ப்ரோக்ராம் எல்லாம் இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் தான்.”

“இப்போத்தானே ஒரு மாசம்ன்னு சொன்ன, அதுக்குள்ளே ரெண்டு மாசம்ன்னு சொல்ற?

“ஆமா. அப்புறம் அடுத்த மாசம் கரெக்டா வந்து நிப்பீங்களே ஊருக்குப் போகணும்னு. அதான் முன்னாடியே சொல்லிட்டேன். நான் ப்ரீ ஆனவுடனே சொல்றேன் எல்லோருமே போகலாம் சரியா?

“என்ன ராம் ? ஷ்யாம் இப்படிச் சொல்றான்?

“அம்மா, அவனை கொஞ்சம் ப்ரீயா விடுங்க. அங்கே கம்பெனிலே ஊர்பட்ட வேலை இருக்கு. அதை எல்லாம் அவன் முடிச்சாதான் அடுத்த கட்டத்துக்கு நாம போறதுக்கு சரியா இருக்கும். “ என்று முடித்துவிட்டான்.

கௌசல்யா “இவன சப்போர்ட்டுக்கு கூப்பிட்டதுக்குப் பதில், நானே இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருந்தால் ஷ்யாம் சரின்னு சொல்லிருப்பான். இவனும், இவன் ரூல்ஸ்சும்” என்று முனகி கொண்டே சென்றார்.

அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசாமல், கல்யாண விஷயங்களும், பொது விஷயங்களும் பேசிக் கொண்டு இருக்க, பக்கத்து வீட்டில் குடி இருக்கும் ஷ்யாம் பாட்டி கௌசல்யா வயதை ஒத்த ஒரு பெண்மணி வந்தார்.

அவரைப் பார்த்ததும் நைசாக ஷ்யாம் நழுவி செல்ல, ராமோ போன் பேசிக் கொண்டே நகர்ந்து விட்டான்.

முரளியும், சபரியும் ஏதோ உறவுக்காரர்களின் போன் வந்தது என்று ஏற்கனவே சென்று இருக்க, அந்த அம்மாவின் தலையைக் கண்டதும், சுமித்ரா சைந்தவியை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.

அங்கே மைதிலி, கௌசல்யா, மித்ரா மட்டுமே இருந்தனர்.

மைதிலி “வாங்க ஆன்ட்டி. உக்காருங்க” என்று உபசரித்தாள்.

அந்த பெண்மணி “என்னடிம்மா, நாத்தனார் பொண்ணுக்கு கல்யாணம்னு போன. உனக்கு மருமக வந்துட்டா போலே இருக்கே?

அவரின் மூக்கு சற்று நீளம். அதனால் அவரின் கேள்விகள் எங்கே சுற்றும் என அறிந்த மைதிலி

“ஆமா.” என்று மட்டும் சொன்னவள், “மித்ரா, போய் நம்ம சமையல்காரர் கிட்டே சொல்லி காபி போட்டு ஆன்ட்டிக்கு எடுத்துட்டு வா.” என்று அனுப்பி வைத்தாள்.

முதலிலேயே மைதிலி மித்ராவையும் உள்ளே அனுப்பி விடத்தான் எண்ணினாள். ஆனால் திருமணம் விசாரிக்க வந்து இருக்கிறார் என்பதால் அவளை பார்த்த பின் போகட்டும் என்று நினைத்தவள், அவரின் வம்புக் கேள்விகள் ஆரம்பமாகவும், நாசூக்காக அனுப்பி விட்டாள்.

மித்ராவிற்கும் அவரைப் பற்றி தெரியும். எனவே மைதிலி சொல்லியதை புரிந்து கொண்டவளாக, உள்ளே சென்று விட்டாள்.

அந்த பெண்மணி கல்யாணத்தைப் பற்றி விலாவரியாக விசாரிக்க, மைதிலியும், கௌசல்யாவும் பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சற்று நேரம் சென்று, மைதிலி குரல் கொடுக்க, காபி எடுத்துக் கொண்டு மித்ரா வந்தாள். அப்போது சரியாக அந்த அம்மா

“ஏன் கௌசல்யா, மித்ராவிற்கும், முதலில் பார்த்த பையனுக்கும் ஏன் கல்யாணம் நின்னுடுச்சி?

“அது “ என்று இருவரும் சற்று தயங்க, கௌசல்யா, மைதிலியைப் பார்த்து தலை அசைக்க,

“அவங்க கல்யாண நெருக்கத்துலே ரொம்ப கெடுபிடியா இருந்தாங்க. அதும் இல்லாம கடைசி நேரத்திலே வரதட்சணை எல்லாம் கேட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு இடம் தேவை இல்லை என்று, ஷ்யாம் அப்பா தான் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க.”

“ஒஹ் ஆனால் ஷ்யாமிற்கு எப்படி உடனே பேசுனீங்க? அவனும் எப்படி உடனே சம்மதம் சொன்னான்?

“அவன் உடனே ஒத்துக்கலை. நான், அவங்க அப்பா, எல்லோரும் பேசினதுக்கு அப்புறம் தான் ஒத்துக்கிட்டான். “ என்று மைதிலி கூறிக் கொண்டு இருக்கும் போதுதான் மித்ரா வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.