(Reading time: 11 - 22 minutes)

அவள் வருவதற்குள் ஷ்யாமும் ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவன், மித்ரா வெளியில் வரவும், அவளை அருகில் அழைத்தான்.

அவள் வரவும், அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். நேற்றைக்கு இருந்த ஒரு இலகுவான மனநிலை இன்றைக்கு மித்ராவிற்கு இல்லை. ஒரு மாதிரி டிஸ்டர்ப்டாக இருந்தாள்.

அதை உணர்ந்த ஷ்யாம் அவளின் அருகில் அமர்ந்து கையைப் பிடித்து

“மிதுமா, ஏன் டென்ஸ்சா இருக்க? நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அப்கோர்ஸ் அது திடீர் கல்யாணம்தான். ஆனால் அதுக்கு முன்னாடி நான் உன் அத்தான் ஷ்யாம். எங்கிட்ட எப்போவும் இருக்கிற மாதிரி ப்ரீயா இரு. “

அவளுக்கு சற்றுத் தயக்கமாக இருந்தாலும் “இத்தனை நாள் நாம் பழகினாலும், இப்படி ஒரே ரூமில் எல்லாம் இருந்தது இல்லையே?” என்று கேட்டு விட்டாள்.

அதற்கு  சிரித்த ஷ்யாம் “அதுக்குதானே கல்யாணம் பண்ணி வைக்குறாங்க” என்று கூறி மீண்டும் சிரித்தவன் “மித்ரா, நாம கல்யாணத்தோட அடுத்த ஸ்டேப் எடுத்து வைக்கும் முன்னாடி, நீயும், நானும் தான் கணவன் மனைவின்னு நமக்குள்ளே உணருவோம். அதுக்கு முதல் படியா, நம்முடைய வேலை நேரங்களைத் தவிர மற்ற நேரம் ஒருவரை ஒருவர் பக்கத்த்தில் இருந்து பழகி கொள்வோம். எனக்குத் தேவையானதை நீ செய். உனக்கு வேணும்கறதை என்னிடம் தயங்காமல் கேள். “

அவள் முகம் முழுதாக தெளியவில்லை என்றாலும், சற்று சிரித்தாள். அதில் நிம்மதி அடைந்த ஷ்யாம், “வா தூங்கலாம்” என்று அழைத்தான்.

மித்ரா தயங்கி “அந்த இன்னொரு ரூம் இருக்கே. நான் அதில் இருந்துக்கவா? எனக் கேட்டாள்.

“இப்போதானே சொன்னேன். நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க அருகில் தான் இருக்கணும்னு. “

“இல்லை. நான் ரொம்ப புரளுவேன். அதான் “ என்று வெட்கத்தோடு சொல்லவும்,

“ஒன்னும் பிரச்சினை இல்லை. பெட் பெரிசுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”

“என்னோட வின்னி எடுத்துட்டு வந்து இருந்தா, அதை நடுவில் வைத்து உங்களுக்கு டிஸ்டர்ப் இல்லாம பார்த்து இருப்பேன்.

“என்னோட ரூமை உன் கூட மட்டும் தான் ஷேர் செய்வேன். உன் பெட்ஸ்க்கு எல்லாம் இங்கே இடம் கிடையாது” என்று கண்டிப்பாக சொல்லவும், மித்ராவின் முகம் வாடியது. அதைக் கண்ட ஷ்யாம்

“மிதுமா, நீ இப்போ சமர்த்தா என்கூட இருந்தா, நாளைக்குக் காலையில் உனக்கு ஒரு கிப்ட் தருவேன்” எனக் கூறவும், குழந்தை போலே அவள் முகம் பிரகாசம் ஆகியது.

“என்ன கிப்ட் அத்தான்”

“அது நாளைக்குத்தான் சொல்வேன். இப்போ போய்ப் படு” என்று கூற, அவனுக்கு அழகு காட்டிவிட்டுப் போய்ப் படுத்தாள்.

ஷ்யாமும், அவளின் அருகில் சென்று படுத்தான். புது இடம் என்பதால் வெகு நேரம் மித்ரா புரண்டு புரண்டு படுக்க, ஷ்யாம் அவளைத் தன் அருகில் படுக்கச் செய்தான்.

ஒரு மாதிரி அவஸ்தையாக இருந்தாலும் , அவள் தூங்கி விட்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காலையில் முதலில் கண் விழித்த ஷ்யாம், அவளின் குழந்தை முகம் கண்டு புன்னகையோடு எழுந்தான்.

சற்று நேரத்தில் மித்ராவும் கண் விழிக்க, முதலில் இடம் புரியாமல் நின்றவள், பிறகு ணர்ந்தவளாக தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வரவும், ஷ்யாமும் தன் ஓட்டப் பயிற்சி முடித்து அறைக்குள் வந்தான்.

அவளைப் பார்த்து புன்னகைத்தபடி

“குட் மார்னிங் மிது. காலை காபி வேண்டும் என்றால் கீழே தான் போக வேண்டும். வா போகலாம்” என்று அழைத்தான்.

“அத்தான் என் கிப்ட் எங்கே?

அவளின் கேள்வியில் சிரித்தான் ஷ்யாம். குழந்தை இரவு ஏதாவது சொன்னால் அதே நினைவாக படுத்து விட்டு, காலையில் எழுந்தவுடன் முதலில் அதையே கேட்குமே அதைப் போல் இருந்தது மித்ராவின் கேள்வி.

மித்ரா சில விஷயங்களில் பெரிதாக யோசித்தாலும், அடிப்படையில் அவளின் குழந்தைதனம் போக வில்லை. அதை உணரந்தவனாக பக்கத்து அறைக்கு அவளை அழைத்துக் கொண்டு செல்ல, அங்கே அவளின் வின்னி அழகாக அதற்கு உரிய செல்ப்பில் இருந்தது.

அதைப் பார்த்து வியந்தவள், மகிழ்ச்சியில் குதித்தாள்.

“தேங்க்ஸ் அத்தான். என் வின்னிய இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு. ரொம்ப ஹாப்பி” என்று கூற,

“இப்போவும் சொல்றேன். அது இந்த ரூமில் தான் இருக்கணும். நம்மோட ரூமிற்குள் நோ என்ட்ரி சரியா? “ என்று கேட்க,

கொஞ்சம் முகம் சுழித்தாலும், மித்ரா வேகமாக தலையாட்டினாள்.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.