(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 18 - தேவி

Kaathalana nesamo

மித்ராவின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்த ஷ்யாமிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. மித்ரா அவள் வின்னியிலே லயித்து இருக்க, அவள் தோளை தொட்டு திருப்பி,

“சரி. சரி அப்புறமா கொஞ்சிக்கலாம். இப்போ காபி சாப்பிட கீழே போகலாமா?”

“இங்கே யாரும் எடுத்துட்டு வர மாட்டாங்களா?

“உனக்குத்தான் தெரியுமேடா. அப்பாவும், அம்மாவும், சில விஷயங்களில் இப்படிதான். எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு என்பதால், அப்படிப்பட்ட நேரங்களில் பொதுவாக எல்லாரும் காலை, மாலை நேரங்களில் சேர்ந்து அருந்துவது வழக்கம். இன்று ஒருநாள் வா. அம்மாவிடம் சொல்லி இனிமேல் ரூமில் கொண்டு தர சொல்கிறேன்”

“ஐயோ. அப்படி எல்லாம் இல்லை அத்தான். நைட் ட்ரஸில் இருக்கேனா? மாமா, தாத்தா எல்லோரும் இருப்பாங்களே ? எப்படி வருவது என்று யோசித்தேன்”

“ஹேய்.. ஏன் சுமி எப்படி இருக்கா? அது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. யாரவது கெஸ்ட் வந்தா மாட்டும் பார்த்துக்கோ. மற்றபடி யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க. சரியா”

“சரி “ எனவும், அவன் அந்த ஆபீஸ் ரூமை விட்டு வெளியே வர, மித்ராவும் வெளியே வந்தவள், நேராக தங்கள் அறைக்குச் சென்றாள்.

அவள் வருவதற்காக ஷ்யாம் காத்து இருக்க, தலையை லேசாக வாரி , ஒரு போனி டைல் போட்டுக் கொண்டு, அவளின் நைட் ட்ரெஸ்சின் மேல் ஒரு ஷ்ராக் மாதிரி அணிந்து கொண்டு வந்தாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“நீ ப்ரீயா இருன்னு சொன்னேனே மித்து”

“இல்லை அத்தான். இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. எங்கள் வீட்டிலும் நான் ரூமை விட்டு வெளியில் வந்தால் கண்டிப்பா இதே மாதிரி தான் வருவேன். “

“இட்ஸ் ஓகே. பட் இது உனக்கு கஷ்டமா இருந்தா, அம்மா கிட்டே சொல்லி ரூமிற்கு காபி கொண்டு வரசொல்லிக்கோ. அப்புறம் ரெடி ஆகிட்டு கீழே போகலாம் ஓகேவா? என, சரி என்று தலை ஆட்டினாள் மித்ரா.

இருவரும் கீழே இறங்கும் போது மித்ரா

“நீங்களும் இன்னும் ஒன்னும் சாப்பிடலையா?

“இல்லைடா. ஜாகிங் முடிச்சு வந்ததும் காபி குடிப்போம். இன்னைக்கு நீ கீழே வரவில்லை என்றதும் உன்னைத தேடி வந்தேன். கீழே நமக்காகத தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”

அதற்கு பிறகு இருவரும் வேகமாக கீழ் ஹாலிற்கு வந்தனர்.

மைதிலி, ராம் மட்டுமில்லாமல் ராமின் பெற்றோருக்கும் ஷ்யாம் வழக்கம் போல் ஜாகிங் வந்து இருப்பதில் சற்று சந்தேகமே. உடனே இருவரும் எல்லாவற்றிலும் மாறி விடுவார்கள் என்று எதிர்பார்க்கா விட்டாலும், இந்த வாழ்க்கையை நல்லபடியாகக் கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கிறார்களா என்பதைப் பற்றி கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

இப்போது இருவரும் பேசிக் கொண்டே இணைந்து வருவதைப் பார்த்தவர்களுக்கு நிம்மதி வந்தது. ஷ்யாம், மித்ரா இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்று தெரியும். இருந்தாலும் மித்ரா மனதில் சரவணனின் தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

சரவணனை அவள் மனதில் நினைத்து இருப்பாள் என்று எண்ணவில்லை தான். ஆனால் அவர்கள் அடித்த கூத்தில், திருமணத்தின் மீது வெறுப்பு வந்து விட்டு இருக்கக் கூடாதே என்பதுதான் அவர்களின் கவலை.

அப்படி எதுவும் இல்லை என்பது அவர்களைப் பார்த்தவுடன் தெரிந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

அவர்கள் அருகில் வரவும்,

எல்லோரும் ரெட்டை சோபாவில் அமர்ந்து இருக்க, ஷ்யாமும் ஒரு சோபாவில் அமர்ந்து தன்னருகில் மித்ராவை அமர வைத்தான்.

அவளும் சாதரணமாக அமர்ந்து கொள்ள, முகமலர்ந்தனர் மற்றவர்கள்.

“குட் மோர்னிங் மிது மா” என்ற மைதிலி “உனக்கு காபி யா ? டீ யா? என்று கேட்டார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“காபி தான் அத்தை” என்று விட்டு பதிலுக்கு அவளும் விஷ் செய்தாள். அதே நேரம் வேகமாக வந்த சுமித்ரா, மித்ரா அமர்ந்து இருந்த பக்கம் உள்ள சோபா கைபிடியில் அமர்ந்து

“ஹாய். குட் மோர்னிங் மை நியர் & டியர்ஸ்” என்றவள் “மத்து டார்லிங் ஸ்பெஷல் குட் மோர்னிங் & வார்ம் வெல்கம் பார் திஸ் கொலைவெறி பாமிலி” என்று கூற,

மைதிலி “அடிங்க. என்னடி கொலைவெறி பாமிலி ?

“பின்னே என்ன? ஒரு பெட் காபி குடிக்க முடியுதா இந்த வீட்டிலே? பல் விளக்கிட்டு தான் குடிக்கணுமா? யானை எல்லாம் பல் தேய்க்குதா என்ன?“ என்று பொரும ஆரம்பித்தாள் சுமி.

ஷ்யாம் “ச்சே.. ச்சே.. யானைன்னு எல்லாம் சொல்லாத” என்று கூறினான்.

“தேங்க்ஸ் டா அண்ணா. நான் அவ்ளோ பெரிய உருவம் இல்லையே. “

“நான் அதுக்கு சொல்லலை. யானை அறிவாளி மிருகம். அதைப் போய் உன்னோட கம்பேர் பண்ணி, அதை கேவலப் படுத்தாதே” என்று கூற , மித்ராவோ சிரிக்க ஆரம்பித்தாள்.

“டேய்.. உன்னை.” என்று அடிக்க வந்த சுமி , பின் தன் தந்தை ராமிடம் திரும்பி “அப்பா, பாருங்கப்பா.. அவன் என்னை முட்டாள்ன்னு சொல்றான்” என்று புகார் வாசித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.