Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

அன்று 2002

றுநாள் காலையில் சித்தார்த்தை கூட்டிச்செல்ல சித்துவின் தந்தை சக்கரவர்த்தி விருதுநகரில் இருந்து ஊட்டிக்கு வந்திருந்தார்.

பல வருடங்கள் கழித்து அவரை பார்த்த சரோஜா பாட்டிக்கு சந்தோஷம் பொங்கியது அவனிடம் ஆசையாக பேசி மகனுக்குப் பிடித்த உணவுகளை தானே சமைத்து பரிமாறினார். தாத்தாவிற்கும் சரி பேரனுக்கும் சரி சக்கரவர்த்தியை பார்க்க பார்க்க கோபம் வர அவர்கள் இருவரும் ஒதுங்கியே இருந்தனர். அதைபற்றி கவலைப்படாமல் சக்கரவர்த்தி தன் தாயிடம் மட்டுமே பாசமாகப் பேசிக் கொண்டிருந்தார். மதிய சாப்பாடு முடிந்ததும் மெதுவாக ஹாலில் அமர்ந்து தாத்தா, பாட்டி, சித்து 3 பேரிடமும் பேச ஆரம்பித்தார் சக்கரவர்த்தி.

”அப்புறம் அம்மா ரொம்ப வருஷம் கழிச்சி எனக்குப் பிடிச்ச சமையல நீங்க எனக்கு செஞ்சி போட்டீங்க அந்த ருசி, கைமணம் அப்படியே இருக்கும்மா வழக்கத்தை விட நிறையவே சாப்பிட்டேன்” என பெருமையாகச் சொல்ல பாட்டிக்கு தலைகால் புரியவில்லை

”சே சே என்னடா நீ இப்படியெல்லாம் பேசற, நீ மட்டும் இங்கயே இருந்தா உனக்கு பிடிச்சதெல்லாம் நான் தினமும் செஞ்சி போடுவேன்ல”

”ஆனா எனக்கு வேலையிருக்கேம்மா”

”நாங்க வேணும்னா விருதுநகருக்கு வந்துடறோமே”

”எதுக்கும்மா இங்க என்ன பிரச்சனை எல்லாம் நார்மலாதானே இருக்கு”

”அப்படியில்லப்பா சித்துவோட படிப்புக்காகத்தான் எங்களை இங்க ஊட்டியில தங்க வைச்ச, அவன் தான் படிச்சி முடிச்சிட்டானே இப்ப லண்டனுக்கு வேற போகப்போறான் நாங்க இங்க தனியாதானே இருக்கனும் அதனால நாங்களும் வீட்டுக்கு வந்துடறோமே”

”அம்மா அங்க எதுக்கு இங்கயே இருங்க, நீங்க இங்க நிம்மதியா இருக்கலாமே எந்த தொந்தரவும் இல்லாம எப்படியோ இத்தனை வருஷம் ஓட்டிட்டீங்க பின்ன என்ன” என அலட்சியமாக கேட்க தாத்தாவிற்கு கோபம் வந்தது

”பார்த்தியாடி அவன் பேசறது எதுக்கு வரனும்னு கேட்கறான், நம்மள விரட்டிட்டு அந்த கருணாகரன் குடும்பத்தை வைச்சிகிட்டு இருக்கான்ல அதான் நாம அவனுக்குத் தேவைப்படலை. எங்க நாம அங்க போனா அவங்களை விரட்டிடுவோம்ல அதனாலதான் வராதேன்னு சொல்றான் உன் பையன்” என்றார் கோபமாக உடனே சக்ரவர்த்தி

”அப்பா அப்படியெல்லாம் இல்ல எனக்கு மட்டும் என்ன அந்த கருணாகரனை பிடிச்சிருக்கா எல்லாம் சுசீலாவுக்காகதான் பார்க்கறேன், ஒவ்வொரு முறை அவங்களை விரட்டலாம்னு சொல்லும்போதும் சுசீலா என்கிட்ட கெஞ்சறா அவள் முகத்துக்காக அவங்களை விட்டு வைச்சிருக்கேன்பா மத்தபடி எனக்கும் அவங்களை பிடிக்காது” என அமைதியாக பேச தாத்தாவோ கோபமாக

”போடா நீயும் உன் நியாயமும் எனக்கு ஒண்ணும் அங்க வந்துதான் ஆகனும்னு இல்ல, நானும் என் பொண்டாட்டியும் இங்கயே இருப்போம் ஆமா நீ எதுக்கு வந்த உன் புள்ளையை கூட்டிட்டுப் போகதானே அந்த வேலையை பாரு” என கூறவும்

சக்கரவர்த்தி இனிமேல் தன் தந்தையை சமாதானப்படுத்துவது கடினம் என தோன்றி சித்துவிடம்

”சித்து என்னப்பா ரெடியா லண்டனுக்கு அடுத்த வாரத்துல ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன், உனக்கான பாஸ்போர்ட், விசா, லண்டன்ல நீ படிக்கிற காலேஜ்க்கான அட்மிஷன் பார்ம் எல்லாம் ரெடி, நீ இங்கிருந்து கிளம்பி அங்க போனதும் நீ தங்கறதுக்கு ஒரு வீடு சகல வசதிகளோட தயாரா இருக்கு நீ எதுக்கும் கவலை படவேணாம். எல்லாமே உனக்கு பிடிச்ச மாதிரியே நான் ரெடி பண்ணியிருக்கேன்”

”அப்பா நான் வரலை” என்றான் திடீரென்று அதைக் கேட்டு சக்கரவர்த்திக்கு திக்கென்றது

”என்னடா விளையாடறியா போன மாசம் கேட்டப்ப சரின்னு சொன்ன, அதை நம்பி நானும் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சா இப்ப வரலைன்னா என்ன அர்த்தம் அம்மா என்ன இது இப்படியா உங்க பேரனை வளர்ப்பீங்க” என கத்த தாத்தாவிற்கு கோபம் வந்தது

”டேய் உன் பையனுக்கும் உனக்கும் நடக்கற சண்டைக்கு மத்தியில எதுக்கு என் பொண்டாட்டியை இழுக்கற, எதுவாயிருந்தாலும் அவன்கிட்ட பேசு இது என் வீடு இங்க வந்து திட்டற வேலையை வைச்சிக்காத நான் உன் அப்பன் அதை மறந்துடாத” என அவர் கத்தவும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சக்கரவர்த்தி சிறிது அமைதியாகி சித்துவிடம்

”என்னாச்சி சித்தார்த் ஏன் இப்படி பண்ற?”

”இல்லப்பா எனக்கு லண்டனுக்கு போக விருப்பமில்லை, நான் இங்கயே இருக்கேன்”

”இங்க இருந்து என்னத்த செய்யப்போற?”

”இங்க இருக்கற காலேஜ்லயே படிக்கிறேன், லண்டன்ல படிச்சாதான் நான் பெரிய ஆளா வரணும்னு அவசியமில்லையே”

”போதும் சித்தார்த் நான் உன்னோட அப்பா, உனக்கு எது நல்லது? எது கெட்டதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்”

”எதுப்பா நல்லது, சின்ன வயசில எங்கம்மா கிட்டயிருந்து என்னை பிரிச்சி இங்க கொண்டு வந்து விட்டது நல்லதா, இப்ப கூட என்னை எங்கம்மாகிட்ட அனுப்பாம லண்டனுக்கு அனுப்பறீங்களே இது நல்லதா சொல்லுங்கப்பா” என சித்து கேட்க அதற்கு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாrspreethi 2018-08-03 19:29
Super update... Yen Siddharth ippadi irukar Ashok udanea kandu pidichachu Ivara innum confusion layea irukar :sad:
Ivar therinjuka kulla Ashok yedhachum Vela papthuruvaro? :Q: waiting for nxt update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாsasi 2018-08-03 20:50
Quoting rspreethi:
Super update... Yen Siddharth ippadi irukar Ashok udanea kandu pidichachu Ivara innum confusion layea irukar :sad:
Ivar therinjuka kulla Ashok yedhachum Vela papthuruvaro? :Q: waiting for nxt update

:cool: அசோக்கால கண்டிப்பா ப்ராப்ளம் உண்டு அதைப்பற்றி அடுத்த எபிகளில் சொல்லியிருக்கிறேன் படியுங்கள் ஆனாலும் சித்துவை கோபிததுக் கொள்ளாதீர்கள். ப்ளீஸ் அவனுக்கு சப்போர்ட் செய்யுங்கள் :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாSaranya Mohan 2018-08-03 11:25
Ashok can understand thilo(doll) but Siddharth can't able to understand and story is very nice I like the story line
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாsasi 2018-08-03 12:05
Quoting Saranya Mohan:
Ashok can understand thilo(doll) but Siddharth can't able to understand and story is very nice I like the story line

நன்றி சித்து பாவம் உங்களோட கேள்விக்கு அடுத்த எபியில பதில் இருக்கு படித்து கமெண்ட் தாருங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாmahinagaraj 2018-08-03 11:03
ஐய்யோ... பழைய சித்து தத்தி.... டால இப்படி அழவைச்சு தானும் அழுதுகிட்டு... 3:) :angry: steam இதுல சாருக்கு கோவம் வேர....
5 பேர்ல ரெண்டு பேருக்கு ஜோடி ரெடி மத்த மூனுபேருக்கும்.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாsasi 2018-08-03 12:08
Quoting mahinagaraj:
ஐய்யோ... பழைய சித்து தத்தி.... டால இப்படி அழவைச்சு தானும் அழுதுகிட்டு... 3:) :angry: steam இதுல சாருக்கு கோவம் வேர....
5 பேர்ல ரெண்டு பேருக்கு ஜோடி ரெடி மத்த மூனுபேருக்கும்.. :Q:
:thnkx:

:cool: கோச்சிக்காதீங்க பாவம் சித்து மத்த தம்பிகளுக்குதானே நல்ல பொண்ணா பார்த்துடறேன் தொடர்ந்து படியுங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாmadhumathi9 2018-08-03 05:02
:Q: sila per nalla thiramaisaaliya irunthaalum ethavathu oru vishayathil muttaalthanama mudiveduppaanga endru kelvi pattu irukkiren. Ashok kandu pidithathupola ean sidhu vaala kandu pidikka theriyavillai.nice epi. :clap: (y) :thnkx: :GL: :sad: innum irandu epithaana :Q: romba seekkiram mudivathu polirukku.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாsasi 2018-08-03 10:55
Quoting madhumathi9:
:Q: sila per nalla thiramaisaaliya irunthaalum ethavathu oru vishayathil muttaalthanama mudiveduppaanga endru kelvi pattu irukkiren. Ashok kandu pidithathupola ean sidhu vaala kandu pidikka theriyavillai.nice epi. :clap: (y) :thnkx: :GL: :sad: innum irandu epithaana :Q: romba seekkiram mudivathu polirukku.

சித்து டாலை பத்து வயசுல பார்த்துட்டு போனதால அவனால திலோவை அடையாளம் கண்டுபிடிக்க முடியலை ஆனா அசோக் டாலை 16 வயசுல பார்த்துட்டு போனதால அவனால திலோதான் டால்ன்னு ஈசியா கண்டுபிடிக்க முடிஞ்சது. டால் வளர வளர முகம் மாறினது சித்து தெரியாது பாவம் சித்துவை கோச்சிக்காதீங்க ப்ளீஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாAdharvJo 2018-08-03 13:07
U mean ashok has seen doll but doll never saw ashok except andha lkg scene :Q: Ivan Apo foreign pogalaya :Q: but irundhalum ninga sidharthuk ivalo support panakudadhu madam ji...avaru ungala business partner aga serthukuradha sonnaro :D .ashok avalo soliyum ivaru erka marukurar idhula 4 vari padasona oru pattepadidraru.. :dance: very cute.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாsasi 2018-08-03 13:19
Quoting AdharvJo:
U mean ashok has seen doll but doll never saw ashok except andha lkg scene :Q: Ivan Apo foreign pogalaya :Q: but irundhalum ninga sidharthuk ivalo support panakudadhu madam ji...avaru ungala business partner aga serthukuradha sonnaro :D .ashok avalo soliyum ivaru erka marukurar idhula 4 vari padasona oru pattepadidraru.. :dance: very cute.

தங்கள் கேள்விக்கான பதில் அடுத்த எபியில் இருக்கிறது. சஸ்பென்ஸ் உடைக்க விரும்பவில்லை. நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாராணி 2018-08-02 23:13
அசோக்கே கண்டுபிடிச்சிட்டான் ஏன் சித்துவால டால்தான் திலோன்னு கண்டுபிடிக்க முடியலை :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாvijayalakshmi 2018-08-02 23:11
அசோக் சொல்லியும் சித்து டால்தான் திலோன்னு கண்டுபிடிக்கலையே :angry:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகாAdharvJo 2018-08-02 21:35
:clap: :clap: interesting flow sasi ma'am :-) I expected FB might end dis week. indha thatha paati-k sid ivalo periya amount ketparun ethir parkalaiyo :Q: such a huge amount...ok indha oru kodi thaan doll kitta irupadha (y) sid appove periya apatakara irukare (idhu ippo thaa purinjadhun ketka kudadhu) :D Uncle ninga varisiya reasons sonnalum I don't agree to ur points...naa kutti sid oda katchi ama :yes:

Mr Siddharth either u have to realize who thilo is orelse doll marandhu indha ponna accept panunga....nangalum ninga ethavdhu oru idathila sixer adipinga adipinga ninaikiren...mkkm pch run out agiduvinga pole irukke boss facepalm sasi ma'am ena oru disappointment indha vinodhavdhu correctaga guess panuvarun ninaichen....indha stupid ashok vera :angry: sabba suspense eppo thaa namba hero-k solluvinga....why is he so blind :sad: first half la sid pavama therinja second half la I feel bad for Doll :sad: Look forward for next epi. THank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top