(Reading time: 10 - 20 minutes)

“டேய் ஷ்யாம்.. குழந்தைய ஏண்டா அப்படி சொல்ற? “ என்று திட்டியவர்

“நீ ஏண்டா உன்னை யானைன்னு சொல்லிகிட்டே? அழகா மயில் போல்ன்னு சொல்லிருக்க வேண்டியது தானே” என்றார்.

“அப்பா..யு டூ?” என்று சிணுங்கியவள், மீண்டும் திரும்பி “மிதும்மா.. காபி” என்று கேட்டாள்

“நைட் எத்தனை மணிக்கு படுத்த?

அசடு வழிந்தவாறே “ஹி. ஹி.. ரெண்டு மணிக்குமா” என்றாள்.

“அவ்ளோ நேரம் லேட்டா தூங்குவதற்குப் பதில், காலையில் சீக்கிரம் எழுந்து படிக்கலாமா இல்லியா?

“நைட் முதலில் சீக்கிரம் தூங்கிட்டேன். அப்புறம் தான் நியாபகம் வந்தது இன்னிக்கு ஒரு வைவா இருக்குன்னு. அதுக்கு ப்ரிபேர் பண்ணத்தான் லேட்டா தூங்கினான்.” என்று சமாளிக்க,

“ஹ்ம்ம். இனிமேல் சீக்கிரம் தூங்கனும்” என்று கட்டளையிட்டு அவளுக்கு காபி கொடுத்தாள் மைதிலி.

மேலும் சற்று நேரம் அரட்டை அடித்துக் கொண்டே காபி குடித்து முடித்தவுடன் எல்லோரும் அவரவர் அறைக்குத் திரும்பினர்,

ராம் அவர்கள் அறைக்கு செல்லும் முன் ஷ்யாமிடம்

“ஷ்யாம். நீ மீட்டிங்கிற்கு வரியா ? இல்லை நான் பார்துக்கவா?

“இல்லைப்பா.. நானும் வரேன். அதோட என் ரிசெப்ஷனுக்கு நம் ஸ்டாப்ஸ் எல்லோரையும் நானே அழைத்து விடுகிறேன்.”

“சரிதான். “ என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

அவன் மீண்டும் படி ஏறுமுன், மைதிலி

“ஷ்யாம். வேலை வேலை என்று ஆபீசில் இருந்து விடாதே. ஈவினிங் சீக்கிரம் வந்து விடு. நாம் வரவேற்பு பற்றி டிஸ்கஸ் செய்யலாம்” என்று கூற,

“மம்மி டார்லிங். நீங்களே பார்த்துக்கோங்க ப்ளீஸ். “

“உன்னோட ஐடியா & மெனு பத்தி மட்டுமாவது சொல்லுடா”

“அது எல்லாம் எங்கிட்ட ஏன் கேட்கறீங்க? உங்க மருமக கிட்டே கேளுங்க. “

“உன் டிரஸ் எடுக்கவாவது நீ வருவியா? இல்லை அதையும் நாங்களே எங்களுக்கு எடுக்கிற சுடிதார் மாதிரி எடுத்து விடட்டுமா?

“ஐயோ . மம்மி வொய் திஸ் கொலைவெறி? டிரஸ் எடுக்க நானே வந்துடறேன். அது என்னிக்கு மட்டும்ன்னு நீங்க முன்னாடி சொல்லுங்க “ என்று விட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டான்.

மித்ராவிடம் மைதிலி “மிதுமா, நீயும் உன் அறைக்குச் சென்று ரெடி ஆகி கீழே வா. அவன் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பிய பின் நாம் பேசலாம்” என,

“சரி அத்தை” என்று விட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்..

ஷ்யாம் குளிக்க சென்று இருக்க, மித்ரா தன் பெட்டியில் இருந்து துணிகளை பிரித்தாள்.

மற்ற காஸ்மெடிக் சாமான்களை எல்லாம் டிரெஸ்ஸிங் டேபிளில் வைத்தவள், வேறு சில பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தாள். துணிகளை பிறகு அடுக்கலாம் என்று நினைத்தவள், அன்றைக்குத் தேவையானதை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மற்றதை ஓரமாக வைத்தாள்.

அதற்குள் ஷ்யாமும் குளித்து விட்டு  இடுப்புத் துண்டோடு மட்டும் வர, அதைப் பார்த்த மித்ராவிற்கு வெட்கமாக இருந்தது. வயது வந்த பின் அவள் எந்த ஆண்மகனையும் இத்தனை நெருக்கத்தில் கண்டதில்லை. அதில் சற்றுக் கலவரமும் , வெட்கமும் அடைந்தாள்.

முதலில் அவளைக் கவனிக்காத ஷ்யாம், அவள் விழிகளின் அலைப்புருதலைக் கண்டபின் அவனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் அவளை சமன் செய்யும் பொருட்டு,

“மிது, நீ போய் குளிச்சுட்டு வா. நான் ரெடியாகிறேன்” என்று விட, விட்டால் போதும் என ஓடிப் போய் விட்டாள்.

அவளின் ஓட்டத்தை ரசித்து சிரித்தவன், பின் ரெடி ஆகினான். மித்ராவும் குளித்து டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று ரெடி ஆகி வந்தாள்.

இருவரும் ஒன்றாகக் கிளம்பி வர, டைனிங் ஹாலில் மறுபடி எல்லோரும் அமர்ந்தனர். இம்முறையும் ஷ்யாம், சுமித்ரா இருவரும் வம்பிழுத்துக் கொண்டு இருக்க, அதை பஞ்சாயத்து செய்வதே மற்றவர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது.

பிறகு ராம், ஷ்யாம் இருவரும் அலுவலகம் கிளம்ப, கௌசல்யா, ஜெகந்நாதன் இருவரும் ஓய்வு எடுக்க சென்றனர். சுமித்ராவிற்கு வைவா இருந்ததால், அவளும் காலேஜ் சென்று விட்டாள்.

மைதிலி , மித்ரா இருவர் மட்டுமே இருந்து, அடுத்து வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து பேசினார்.

மைதிலி மேடை அலங்காரம், ஹால் அலங்கராம் மாடல் எல்லாம் லேப்டாப் வைத்து  காமிக்க, பார்த்துக் கொண்டு வந்த மித்ரா

“அத்தை.. இந்த வரவேற்பு நம்ம ஸ்டாப்ஸ்க்ககதானே”

“ஆமாம். “

“அப்போ இவ்ளோ பகட்டா வேண்டாமே”

“ஏண்டா அப்படி சொல்ற?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.