(Reading time: 10 - 20 minutes)

“இல்லை அத்தை. அவங்களுக்கு எங்க வரவேற்பிற்கு வரும்போது அவங்க வீட்டுக் கல்யாணம் என்ற பீல் கொடுக்கணும். நீங்க காட்டின ஏற்பாடுகள் மாதிரி செஞ்சா, யாருக்கோ கல்யாணம் மாதிரி இருப்பாங்க”

அவள் சொன்னதும் சரியாகத் தோன்ற “ஹ்ம்ம். புரியுதுடா” என்ற மைதிலி, அதன் பிறகு சில சிம்பிள் இன்டீரியர் அலங்காரங்கள் காமிக்க, அதில் ஒன்றை மித்ரா தேர்ந்தெடுத்தாள்.

“இதே போல் வேறே என்ன ஐடியா உனக்குத் தோணுது மித்ரா? என்று மைதிலி கேட்க, சற்று திகைத்தவள்.

“அத்தை, நாம் நம் தொழிலார்களை குடும்பத்தோடு வர சொல்லிருக்கோம் இல்லியா? அப்போ குழந்தைகளும் வருவார்கள். அதற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு தனி விளையாடும் இடம் ஒதுக்கி விடலாம். அதோடு ஒரு ஓபன் ஸ்டேஜ் வைத்து, வரும் குழந்தைகளின் தனித்திறமையை அங்கே மேடை ஏற்றலாம். இதைப் பற்றி முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து விட்டால், அவர்களும் தயாராக வருவார்கள்.”

“வாவ். சூப்பர் ஐடியா மிதுமா. உடனே அதைப் பற்றிய விவரங்கள், பாதுகாப்பு முறைகள் பற்றி டிடைல்ஸ் எடுத்து தரச் சொல்கிறேன். உனக்கு வேறே எதுவும் சொல்லனுமா?

“அத்தை. பபே வைப்பதாய் இருந்தால், சின்ன பிள்ளைகளுக்கு தனியாக வைத்து விடலாம். முக்கியமா பருப்பு சாதம், ஷேப் தோசை, குட்டி குட்டி பூரி என்று வைத்தால் அவர்கள் பிடித்து சாப்பிடுவார்கள். வீணாவதும் குறையும்”

“மிது, கலக்கறடா.. இது உங்க ரிசெப்ஷன் மட்டும் இல்லாம, இனி நம்ம கம்பனிக்கு வர எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஐடியாஸ் பற்றி கிளையன்ட் கிட்டே பேசுவோம்.” என்று மகிழ்வோடு உரைத்தார் மைதிலி.

அதே போல் பெரியவர்களுக்கான மெனுவிலும் வழக்கமான ஐட்டங்களோடு , எண்ணெய் , இனிப்பு குறைவாக உள்ள உணவுகளையும் லிஸ்ட்டில் சேர்த்தாள்.

நிறைய காம்பினேஷன் மாற்றி அமைத்தாள்.

அன்று மாலை ஷ்யாம் முதலில் வீடு திரும்பிட, எல்லோரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது வரவேற்பு எற்படுகள் குறித்து பேச்சு ஆரம்பிக்க, மித்ராவின் யோசனையை எல்லோரிடமும் தெரிவித்தார் மைதிலி. அதைக் கேட்ட எல்லோரும் அவளைப் பாராட்டினார்கள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் சிறு வெட்கத்தோடு நன்றி உரைத்தவள், ஏதோ போன் வர எழுந்து சென்றாள்.

அவள் செல்வதை யோசனையோடு பார்த்தவன், தன் அன்னையிடம் ஏதோ கூற, அதைப் பற்றி யோசித்த மைதிலி பிறகு சரி என்றாள்.

மித்ரா மீண்டும் வந்து அமர, மைதிலி பேச்சு வாக்கில் சொல்வது போல்

“மித்ரா, இந்த வரவேற்பு எல்லாம் முடிந்தவுடன், நீயும் என்னோடு என் அலுவலகத்திற்கு வந்து விடு. உனக்கு இந்த ஈவென்ட் மானேஜ்மெண்ட் நன்றாக வருகிறது. என்னோடு இருந்து கொள்” என்று கூறினார்.

“ஐயோ அது எல்லாம் வேண்டாம் அத்தை. அதில் ஏதாவது தப்பு நடந்தால், என்னால் தாங்க முடியாது. ப்ளீஸ் நீங்களே பார்த்துக்கோங்க” என்று கெஞ்ச, அவளை உணர்ந்தவனாக ஷ்யாம்

“மித்ரா, அம்மா கூட நீ போ. உன்னால் முடியற வேலைதான் அம்மா தருவாங்க. சோ பயப்படமா போ. அப்போதான் உனக்கு ஒரு எக்ஸ்போஷர் கிடைக்கும்” என்று கூற, எதிலும் ஷ்யாம் பேச்சைக் கேட்கும் மித்ரா, இதிலும் அவன் சொன்னதைக் கேட்டு,

“அத்தை, நீங்க கூட இருக்கீங்கன்னா, நான் வரேன் அத்தை” என்று கூறவும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.