(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 09 - லதா சரவணன்

kadhal ilavarasi

நீலாங்கரை அருகே கடற்கரை பங்களாவின் முகப்பில் நிலவொளியை ரசித்தபடியே தன் கண்ணாடிப்கோப்பையின் திரவத்தை ஒவ்வொரு சிப்பாக ரசித்து ரசித்து குடித்துக்கொண்டிருந்தான் சத்யா. கூடவே நாலைந்து நண்பர்கள் எல்லாரும் நிதானத்தில் இல்லை என்பதை அவர்களின் தள்ளாட்டமும் குழலறான பேச்சும் காட்டியது. ஆனால் சந்திரன் மட்டும் எதையோ எண்ணி பயந்தபடியே இருந்தான் அந்த குளிர்ந்த நேரத்தில் அவனுக்கு வியர்வை பெருகியது

என்னாச்சுன்னு இப்படி பயப்படறே சந்திரன். நம்ம திட்டத்தில் எந்த ஓட்டையும் இல்லாம இப்போ வரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருக்கு, பரத்ங்கிற திமிங்கலம் இருக்கிற வரையில் நான் எதற்கும் பயப்படத் தேவையில்லை, அநாவசியமா மனசைப் போட்டு குழப்பிக்காம கிடைச்ச நேரத்தை என்ஜாய் பண்ணுடா ?!

நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் என் மனசு சமாதானம் ஆகமாட்டேங்குது சத்யா. நாம செய்யறது சட்ட விரோதமான செயல் நம்ம நாட்டோட கனிம வளத்தை எடுத்து அழகாக தாரை வார்க்கிறோம் அதனால...

இன்னைக்கு உனக்கு என்னடா ஆச்சு ஏன் எல்லாத்தையுமே நெகட்டிவ்வாவே யோசிக்கிறே ? கொஞ்சமாவது பாசிட்டிவ் திங்கிங் வேணும்டா இப்போ நமக்கு ஆர்டர் தந்திருக்கிற பார்ட்டி என்ன பீல் பண்றாங்க நாம கேட்ட டயமிங்கிற்கு ஒப்புகிட்டாங்க பணமும் கைமாறியாச்சு இனிமே நல்ல விதமா அவங்களுக்கு என்ன தேவையோ அதை நாம் எடுத்து தரணும் அதைவிட்டுட்டு எப்பபாரு அபசகுமணமாகவே பேசிகிட்டு போ போய் ஆக வேண்டிய வேலையைப் பாரு சத்யா தன் கடைசி சிப்பை பருகிவிட்டு எழுந்தான். 

மிஸ்டர் நிக்கோலஸ் உன்கிட்டே பேசணுமின்னு நேற்றே போன் பண்ணினார். டாக்குமெண்ட்ஸ் ரெடியா இருக்காம் எப்போ மீட் பண்ணலான்னு கேட்டார் போன முறை இராமேஸ்வரத்தில் நம்ம திட்டம் வெற்றிகரமா நிறைவேறிச்சு அதேபோல இப்போ அந்தமான் இன்னும் சில கடல்பிராந்தியத்தில் நம்மோட முயற்சி பலிச்சிதுன்னா பேசினதை விடவும் பல கோடிகள் தருவதாக சொல்லியிருக்கிறார் நீ என்ன சொல்றே ?

இதிலே சொல்றதுக்கு என்ன இருக்கு எனக்கு ஒ.கே இராமேஸ்வரத்தில நாம பண்ணியது கன்னி முயற்சி அதுக்கு வெற்றி கிடைச்சிருக்குன்னா காரணம் பரத்தான். அரசாங்க ரீதியா நமக்கு எந்த சிக்கலும் இல்லா எல்லா பர்மிஷனையும் அவனே வாங்கிட்டான் அப்படியே ஏதாவது சந்தேகம் வந்து சிக்கலானாலும் நாம எஸ்கேப் ஆகிடலாம் அவனை மாட்டி விட்டுடுலாம். 

இது நாட்டுக்கு செய்யற துரோகம் ஆகிடாதா பாவம் நம்மால பரத் மாட்டிக்கப்போறான்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

டேய் இதென்னடா திடீர்னு இவன் மகாத்மா மாதிரி பேசறான். சிங்கிள் டீக்கு கூட வழி இல்லாம தண்டச்சோறுன்னு எத்தனை அவமானப் பட்டு இருப்போம் அப்ப எல்லாம் இந்த நாடும் அரசாங்கமும் என்னடா செய்தது. இப்பக்கூட நிக்கோலஸ் இந்தியாவில் வளங்களைப் பற்றி எல்லா விவரமும் தெரிந்து வைத்திருக்கார்ன்னா அதுக்கு நம்ம ஆளுங்களோட உதவி இல்லாமயா இருக்கு, டேய் வெளியுறவுத் துறை அமைச்சர் நிக்கோலஸ் பாக்கெட்லே நேரடியா தொடர்புன்னா மாட்டிக்கிவோம்ன்னுதான் நம்மளை மாதிரி கருவிகளை மாட்டிவிடறாங்க. இந்தியாவோட வளங்களைப் பார்த்துதான் வெள்ளைக்காரன் அடிமைப்படுத்தினான் கஜினி முகமது விடாமல் படையெடுத்தார். அதையெல்லாம் விடு மதுரையிலே கிரானைட் ஊழல், மீத்தேன், மணல் கொள்ளைன்னு, இன்னும் என்ென்னவோ வளங்கள் திருடப்பட்டுதான் இருக்கு, இப்போ லேட்டஸ்ட் நியூஸ் கோவில்ல உள்ள புராதன சிலைகளில் பாதிக்கும் மேல் போலியாம். புத்திசாலியும் திறமையுள்ளவனும் தான் வாழ பிறரை அடிச்சிப்போட்டுகிட்டு போயிட்டே இருக்கான். இப்பக் கூட பாரு யுரேனியம் என்கிற கனிம வளம் தங்கத்தை விடவும் மதிப்புள்ளது அது இந்தியாவில் அதிகமாக கிடைக்குது. அதுவும் ஆழ்கடலில் இருள் சூழ்ந்த பகுதிகளில் அதாவது மனிதன் காலே வைக்க முடியாத பகுதிகளில் அள்ள அள்ள குறையாம இருக்குது அதில கொஞ்சம் நாம கொடுக்கப்போறோம் இதனால யாருக்கு என்ன நஷ்டம் ?!

அதுசரி சத்யா இதை நாம எப்படி எடுக்கப்போறோம் ?

இப்போ கேட்டியே இது நியாயமான கேள்வி பொழைக்கிற கேள்வி, ஒருவிதத்தில இதுக்கு அரசாங்கமே நமக்கு உதவியிருக்கு, உலக வெப்பமயமாக்கல் காரணமா பனிப்பாறைகள் அதிகளவில உருகுவதால கடலின் நீர் மட்டம் அதிகரிக்குது. கடல் நீரில் நாளுக்குநாள் உப்புத்தன்ைையும் அதிகரிக்கிறது. இதிலே மழை தர்ற மரத்தையும் எட்டு வழிச்சாலை பத்துவழிச்சாலைன்னு அரசாங்கமும், ரியல் எஸ்டேட்காரனுங்களும் அழிச்சிடறாங்க. இயற்கை நிறைய வகையில் மனித வாழ்வியலுக்கு அரணை ஏற்படுத்தித்தருது, ஆனால் நம்ம சுயநலத்திற்காக அதையெல்லாம் நாம அழிச்சிடறோம். அப்படி இயற்கையா ஏற்படுத்தி தந்ததுதான் பவளப்பாறைகள் கூகுளில் போய் அதன் பயன்பாடுகளையும் அதன் இப்போ எப்படியெல்லாம் சுரண்டப்படுதுங்கிறதையும் படி இன்னமும் விளக்கமா புரியும். இப்போ நம்மோட டீம் அந்த பவளப்பாறைகளைக் காப்பாத்துறதாக நாம கொடுக்கிற திரவத்தை ஊசிமூலம் பவளப்பாறைகளை அழிக்கிற மீனை சாகடிக்கப்ப பயன்படுத்தப் போறாங்க. இது மேலோட்டமான எல்லாருக்கும் தெரிந்த தகவல். ஆனா உண்மையில நடக்கிறது என்ென்னா நட்சத்திர மீன்களை கொல்ல போடப்படும் ஊசி மூலம் ஆழ்கடல்ல இருக்கிற யுரேனியம் கொஞ்ச கொஞ்சமா உருக ஆரம்பிக்கும் இப்போ பவளப்பாறைகளை சாக்கா வைச்சு எல்லா கடல் மட்டத்திலும் கண்ணுக்குத் தெரியாத ரேடார் மூலமா லிங்க் தரப்போகிறோம் அந்த ரேடார் யுரேனியங்கிற அரிய வகை கனிம வளத்தை திரவமாக எடுத்து யாருக்கும் தெரியாம வெளிநாட்டுக்கு விக்கப்போறோம். நல்லா புரிஞ்சுக்கோ ஒருபக்கம் கனிம வளத்தையும் சுரண்டுகிறோம் இன்னொரு பக்கம் பவளப்பாறைகளையும் காப்பாத்துறோம் செயற்கை பவளப்பாறைகளையும் அமைக்கிறோம். இது ஒரு இடத்திலே மரத்தைவெட்டி இன்னொரு இடத்திலே மரக்கன்னு நடறோமே அதுமாதிரிதான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.