(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 08 - புவனேஸ்வரி

vellai pookkal ithayam engum malaruthe 

"ன்ன சொல்லுறாங்க நம்ம ஹீரோஸ் ?" குரலில் ஆர்வம் தேக்கி வைத்த தங்கையை திட்டவும் மனமின்றி இருந்தாள்  பிரசன்னலீலா. ப்ரியதர்ஷினியை பொறுத்தவரை கார்முகிலன், கதிரவன், பிரபஞ்சன் மூவருமே  கதாநாயகர்கள் தான் . வாழ்க்கை என்றும் ரசித்து வாழ வேண்டியதாகவே உருவாகிறது . மனிதன் வாழ்வதற்க்காக எதையும் கொண்டு வந்து பிறக்கவில்லை ..ஆனால் வாழும்போது மட்டும் எதையாவது தேடி பறிக்க முயன்றே  சாகிறான் . அந்த வகையில் தங்களின் தேவைகளை உணர்ந்து யாருக்கும் பணியாது இருக்கும் அம்மூவரும் தரிஷினியை பொறுத்தமட்டில் ஹீரோக்கள் தான் ..

இதை பலமுறை லீலாவிடம் உரைத்திருக்கிறாள் . அப்போதெல்லாம் லீலாவின் முகத்தில் கடுமை பரவும் . ஆனால் இன்று ? மனிதர்களை எடைபோடுவது அத்தனை எளிதில்லை தானோ ? தூரத்தில் இருந்தபோது அவர்கள் மீது தேங்கி இருந்த கோபங்கள் இன்று லேசாய் கரைகிறதோ ? கண்களை ஒருகணம் மூடினாள் . அவள் கோபத்தின் காரணம் எல்லாம் ஓருருவாய் நின்று சிரித்தது . அடுத்த நொடி தனது மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தாள் லீலா.

"ஹ்ம்ம் சொல்லுற அளவுக்கு இன்னும் எதுவும் நடக்கல குட்டிமா.. நடக்கும்போது  சொல்லுறேன் .. இப்போதைக்கு  வெச்சிடுறேன்" என்றாள்  அவள் .

"என்னாச்சுக்கா ?"

"ப்ச்ச்  ஒன்னும் இல்லடா .. இன்னைக்குத்தான் முதன்முறையா இப்படி கூப்பிட்டு பேசுறேன் .. ஏதாவது வகையில் நாம மாட்டிக்கிட்டா நினைச்ச எதுவுமே நடக்காமல் போயிடும்டா.. கொஞ்சம் பொறுமையா இருக்கணும் .. அம்மா அப்பாவை பார்த்துக்க.. நீயும் உடம்ப பார்த்துக்கோ .. மாப்பிள்ளை அத்தானுக்கு என்னோட வாழ்த்துக்கள்" என்றாள்  உற்சாகமான குரலை வரவழைத்துக் கொண்டு ..

" மாப்பிள்ளை அத்தான் ? உன்னால மட்டும்தான்க்கா இப்படியெல்லாம் பெயர் வைக்க முடியும் !" என்று சிரித்த இளையவள் , போனை துண்டிக்கும் எண்ணமில்லாமல் துண்டித்தாள் . ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துக்கொண்டாள் . "கண்ணா, நான் தப்பு பண்ணலைனா நீ என் கூட இரு " என்று வாய்விட்டு சொல்லி கொண்டாள் பிரசன்னலீலா . 

ன்னொரு பக்கம் , "ஆதிரா" கம்பெனியில் தீவிரமான முகபாவத்துடன் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன். கதிரவனும் கார்முகிலனும் கூட அவன் என்ன சொல்ல போகிறான் என்று காத்திருக்க , தலையை இடதும் வலதுமாக அசைத்தான் பிரபஞ்சன் . அவன் செய்கையில் அவனது மேனஜர் மற்றும் நண்பனுமான மனோவுக்கு கடுப்பாகியது .

"யோசிச்சிட்டேன் மனோ , உனக்காக யோசிச்சிட்டேன் ஆனா ஆதிராவுல எடுத்த முடிவு எடுத்ததுதான் . நாம அனுபவம் உள்ளவர்களை ஒதுக்கல .. ஆனா அதே நேரம் திறமை உள்ள புது ஆளுங்களுக்கு தான் முதல் வாய்ப்பு .. உன்னையும் உட்பட நாம எல்லாருமே வாய்ப்புகள் தேடி அலைஞ்சு  கஷ்டப்பட்டுத்தானே இங்க இருக்கோம் ? கொஞ்சம் மேல வந்ததும் நம்மளோட சௌகாரியத்துக்காக நம்மள மாதிரி உள்ளவர்களை மறக்க கூடாது !" என்று அவன் தன்னையும் மீறி ஆவேசமாக பேச, மனோ இருவரையும் பார்வையாலேயே துணைக்கு அழைத்தான். பிரபஞ்சனின் வார்த்தைக்கு மறுவார்த்தையா ? என்று பாணியில் இருவருமே அமர்ந்திருக்க , மனோவே பேச்சை தொடர்ந்தான்.

"முன்ன மாதிரி இல்ல பிரபா .. நமக்கு போட்டிகள் ஜாஸ்தியா இருக்கு .. நிலைச்சு  இருக்க்கணும்னா கொஞ்சம் வேகமா ஓடணும் "

"ஓடுறேன்டா .. நான் ஓடுறேன் .. புதுசா வந்தவர்களையும் கூட்டிட்டு ஓடுறேன் . தோல்வி நமக்கு புதுசு இல்லையே . என்னை நம்பி வந்தவர்களை கைவிடாம பிடிச்சிட்டு ஓடுவேன்!" . அவர்கள்  அமர்ந்திருந்த  அந்த அறையின் கதவு லேசாய் திறந்து மூடப்பட்ட சில வினாடிகளில் பிரபஞ்சனின்  குரலை  கேட்டிருந்தாள்  நித்யா .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனது குரலும் வார்த்தைகளும் அவளை உடனே கவர்ந்திட ,

"நான் உங்களை என் பாஸா செலெக்ட் பண்ணிட்டேன் "என்றாள் வாய்விட்டு . அதே குதூகலத்தில்  அவள்  மற்றவர்களையம் ஆராய முற்பட , கார்முகிலனின் அழுத்தமான  பார்வையை அவளால் சந்திக்க இயன்றது . "இவனா ?" என்று அவள் திடுக்கிட்டு போனது ஒரு நொடிதான் . மீண்டும் அவளே , " ச்ச  எங்க பார்த்தாலும் அவன் மூஞ்சியாகவே தோணுது  என தோளை  உலுக்கி கொண்டாள் .

கார்முகிலனும் அதே நிலையில் தான் இருந்தான் . பிரபஞ்சனுக்கும் மனோவுக்குமான உரையாடலை கேட்டுகே கொண்டே இடது பக்கமாக திரும்பியவன் அவளை பார்த்ததுமே "அய்யயோ " என்று மனதிற்குள் அலறினான்தான் .. அடுத்த நொடியே "கூல் டா .. அவளாவது  இங்க வர்றதாவது !" என்று சொல்லி முடிக்க , முதல் ஆளாவாகவே அந்த அறைக்குள் நுழைந்தாள்  நித்யா . பிரபஞ்சன் , கதிரவன், மனோ மூவரையும் பார்த்து மலர்ந்த இருவிழிகளும் கார்முகிலனை பார்த்ததும் அதிர்ச்சியை வெளிப்படுத்தின ! அவ்விடமும் அவ்விதமே !

"நீயா ?"  என்று சீட்டை விட்டே எழுந்திருந்தான் கார்முகிலன் . "மச்சான் என்னடா?" என்று கதிரும் பிரபாவும் கேட்க ,

"டேய் மச்சான் ..அந்த பொண்ணுடா " என்று அடிக்குரலில் ஜாடை செய்தான் கார்முகிலன் . அவனது கேட்ட நேரமோ என்னவோ , அவனது அடிக்குரல் பேச்சு அவர்களின் கருத்தில் பதியாமல் போக, மனோவும் பார்வையாளனாக இருக்க மனமில்லாமல் , "எந்த பொண்ணு கார்கி" என்று சத்தமாகவே கேட்டு வைத்தான் . மற்ற மூவரையும் கட்டி வைத்து உதைத்தால்தான் என்பது போல அவன் முறைக்க , நித்யா மிக பொறுமையாய்

"குட் மார்னிங் என் வருங்கால முதலாளிகளே .. " என்று பொதுப்படையாக கூறிவிட்டு , கார்கியிடம் , "உங்களுக்கு என்னை தெரியுமா சார் ?" என்றாள்  தேனொழுகும் குரலில் !

“ஹாய் ப்ரண்ட்ஸ் ! எல்லாரும் எப்படி இருக்கீங்க ? இனி கதைகளின்  மூலம் , அடிக்கடி சந்திப்போம்  என்ற நம்பிக்கையில் ஒரு குட்டி அப்டேட் . இப்போ இருக்கும் சூழ்நிலை குட்டி குட்டி அப்டேட்ஸ் தான் வரும் .. பொறுத்துக்கோங்க செல்லங்களே .. நன்றி”

தொடரும்...

Episode # 07

Episode # 09

Go to Vellai pookkal ithayam engum malargave story main page

{kunena_discuss:1166}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.