(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07 - புவனேஸ்வரி

vellai pookkal ithayam engum malaruthe

மித்ரனே,

உலகம் நம்மை வெவ்வேறு உயிர்களாய் பார்த்திட,

நாமோ உடலால் மட்டுமே வெவ்வேறானோம்!

நான் வாழ்ந்த நரகத்தை நீ உணர்ந்தாய்!

நீ கற்பனை செய்த சொர்க்கத்தை நான் உணர்ந்தேன்!

அதனாலோ என்னவோ நம்ம உணராதவர்கள் அனைவரும்

உறவில்லாமல் போனார்கள்!

சுயோதசேனாவை விட்டு பிரபஞ்சனும் கதிரவனும் காரில் கிளம்ப, கார்முகிலன் வழக்கம்போலவே பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது பிரசன்னலீலா எதையோ எதிர்ப்பார்ப்பதை போல உணர்ந்தான். ஒரு நொடி நிதானித்தவன்,

“என்ன லீலா?” என வினவினான்.

“இல்ல, நீங்க மூணு பேரும் வர லேட் ஆகுமா?” என்று அவள் கேட்கவும் அவனது முகம் கொஞ்சம் யோசனையும் கொஞ்சம் அஷ்டகோணலாகவும் மாறியது.

“என்னாச்சு கார்கி?”

“இல்ல,இந்த மாதிரி எங்கள யாரும் கேள்வி கேட்டு ரொம்ப வருஷமாச்சு..அதான் புதுசா இருக்கு!” என்றான்.

“புடிக்கலனா சொல்லிடுங்க.. “

“தெரியல.. ஆனா புடிக்கிதுனும் இல்ல..” என்றான் கார்கி.

“ஓ சாரி..” என்றாள் லீலா.

“கம் ஆன் லீலா.. நீ  இந்த வீட்டுல இருக்குற வரைக்கும் சுதந்திரமா இருக்கலாம்னு நாங்க சொல்லிட்டோம்.. சோ உன் மனசுல பட்ட கேள்விக்கெல்லாம் மன்னிப்பு கேட்காத”

“இதெல்லாம் நல்லாத்தான் பேசுறீங்க.. ஆனா கேட்ட கேள்விக்கு பதிலை காணோமே”

“ஹீ ஹீ அதை சொல்ல தெரியாம தானே நானே உளறிட்டு இருக்கேன்.. அதான் வீட்டு ஃபோன் இருக்குல..லேட் ஆச்சுனா ஃபோன் பண்ணுறேன்..பாய்” என்றவன் ஸ்னேகமான புன்னகையை சிந்தி அங்கிருந்து கிளம்பினான். கார்முகிலனின் பைக் கண்ணை விட்டு மறையும்வரை அப்படியே நின்றிருந்தாள் லீலா.

என்னத்தான் தாமரை இலையின்மேல் நீரென அவ்வப்போது அம்மூவரும் பேசினாலும், அடிப்படையில் மூவருமே நல்லவர்கள் தானே! ஏதோ ஒரு வகையில் தன் மீது நம்பிக்கை இருப்பதினால்தானே இவ்வளவு பெரிய வீட்டில் தன்னை அனுமதித்து இருக்க வேண்டும். ஆரம்பத்தில் பிரபஞ்சன் அவளைப் பற்றி விசாரித்தான் தான்! ஆனால் அதன் பின் தன்னைப் பற்றி எதுவுமே கேட்கவில்லையே.. அந்த நம்பிக்கையை  உடைப்பது சரியா?” கண்களை மூடி யோசிக்கவும், அவள் அங்கு வரவதற்கான முழுகாரணம் ஒன்று கண்ணீர் மறைத்து புன்னகைத்தது.

அடுத்த நொடியே லீலாவின் மனதில் கடினம் திரும்பியது. “சரிதான்.. சரிதான்.. நான் யோசிக்காமல் இந்த காரியத்தில் இறங்கலயே.. இது தேவை இல்லாத குற்ற உணர்வு.. குட்டிமாவுக்கு ஃபோன் பண்ணி பேசுவோம்..மனசு சரி ஆகிடும்” என்று எண்ணியபடி வீட்டு ஃபோனை எடுத்தாள் லீலா.

“ஹலோ அக்கா”- பிரியதர்ஷினி..

“குட்டிமா.. நல்லா இருக்கீயா? நான்தான்னு எப்படி தெரியும்?”

“என்னக்கா, உன்னை சும்மா தெரியாத இட்த்துக்கு அனுப்பி வெச்சுட்டு நிம்மதியா இருப்பேனா? அந்த வீட்டு நம்பர் எல்லாம் எப்பவோ நோட் பண்ணிக்கிட்டேன்” என்றாள் இளையவள்.

“ அம்மா அப்பா எப்படி இருக்காங்க தங்கம்? கல்யாணம் நல்லா நடந்துச்சா? ஹீ சந்தோசமா இருக்கீயா?”

“அக்கா நீ ஏன் இப்படி பதட்டமா இருக்க?கல்யாணம் நல்லா நடந்துச்சு நீ இல்லாத குறையை தவிர. அவரும் என்னை நல்லாத்தான் பார்த்துக்குறாரு,, லவ் டாச்சர் பண்ணுறாரு.. அப்பா அம்மாவுக்கு ப்ரண்ட் ஆகிட்டாரு.. அதோடு போதாம உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டு காதுல ரத்தம் வர வைக்கிறார்” என்று பிரியா சொல்லும்போதே லீலா முகத்தில் புன்னகை அரும்பியது.

தன்னுடையவனைப் பற்றி பேசிடும்போது மட்டும் பெண்களின் குரல் எப்படித்தான் தேனுடன் குழைத்து தென்றலுடன் ஊஞ்சலாடி ஒலிக்கிறதோ? வெட்கம், காதல் அனைத்தையும் தாண்டி “அவன் என்னவன்” என்ற உணர்வோடு பெண் பேசிடும் அழகை இன்னமும் எந்த கவிஞனாலும் வர்ணித்து முடிக்க இயலாது அல்லவா? ப்ரியதர்ஷினியின் சந்தோஷத்தை எடுத்துகூற இதைவிட மொழியொன்று வேணுமா என்ன? தங்கையின் இல்வாழ்க்கை நல்லவிதமாக அமைந்த சந்தோஷத்தில் அவளை சீண்ட தொடங்கினாள் லீலா.

“ அடிப்பாவி என்மேல அக்கறை பட்டதுக்கே பொறாமையா? சரி அதைவிடு.. நான் முதல் முக்கிய கேள்வியா அப்பா அம்மாவைப் பத்தி கேட்டேன்.. ஆனா உன் காதுல அதெல்லாம் விழலையோ? நேரா உன் ஹஸ்பன்ட் பத்தி ரம்பம் போடுற?”

“மங்குனி அக்கா.. அவர் அப்பா அம்மாவுக்கு பிரண்டு மாதிரி இருக்காருன்னா, இங்க எல்லாத்தையும் நாங்க சமாளிக்கிற அளவு எல்லாம் நல்லா இருக்குனுதானே அர்த்தம்? அதுமட்டும் இல்லாம,நான் பாட்டுக்கு அவரைபத்தி கொஞ்சமா பேசி வெச்சிட்டு போனா, நீ உடனே நாங்க சந்தோஷமா இருக்கோமா? இல்லயானு யோசிச்சு ஃபீல் பண்ணுவ.. இதெல்லாம் தேவையா சொல்லு?”

“போதும் போதும் பாட்டிமா..உன் பட்டிமன்றத்தை ஆரம்பிக்காதே..”

“அந்த பயம் இருக்கட்டும்.. அப்பறம் எப்படி இருக்காங்க மூவேந்தர்கள்?” ஆர்வத்துடன் கேட்டாள் ப்ரியதர்ஷினி. மற்றவர்களுக்கு எப்படியோ அவளுக்கு அவர்களைப் பார்த்தால், தனி மதிப்பும் ஆர்வமும் எப்போதுமே தொற்றிக் கொள்ளும். நாமெல்லாம் நண்பர்களோடு அதிகம் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில், “நாம ஒரே வீட்டில் வாழ்ந்த நல்லா இருக்கும்ல? பார்ப்போம்: என்று பெருமூச்சுவிட்டுவிட்டு அதை மறந்துவிடுவதோடு சரி! ஆனால் அதையும் வாழ்க்கையாக்கி சாத்தியமாக்கி வாழ்கின்ற மூவரும் பிரியதர்ஷினிக்கு “ஹூரோக்கள்” தான்.

பிரசன்ன லீலா இங்கு அவர்களைப் பற்றி விவரிக்க, அங்கு “ஆ-தீ-ரா” அலுவலகத்தில் மூவரும் நுழைந்திருந்தனர்.

ஹாய் ப்ரண்ட்ஸ்.. போன வாரமெல்லாம் உடல்நிலையும் இந்த வாரமெல்லாம் வேலையும்னு ரொம்ப பிசி ஆகிட்டேன்.. என்னை அப்பறம கட்டிவெச்சு உதைச்சிருங்க.. கண்டிப்பா எழுதனுமேனு அவசரமா ஏனோ தானோ எழுத விரும்பாமல் இங்க ஸ்டாப் பண்ணுறேன்.. அடுத்த வாரம் தொடருகிறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் மன்னிச்சு..

தொடரும்...

Episode # 06

Episode # 08

Go to Vellai pookkal ithayam engum malargave story main page

{kunena_discuss:1166}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.