(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 06 - புவனேஸ்வரி

vellai pookkal ithayam engum malaruthe

 

மித்ரனே,

பூர்வ ஜென்மத்தில்,

நாட்டை காத்தேனா?

தாயை சுமந்தேனா?

தர்மம் புரிந்தேனா?

எறும்புக்கும் வாழ்வு தந்தேனா?

எந்த பலனில் நீ கிடைத்தாய் எனக்கு?

வியப்பில் நான். சிலிர்ப்பில் நட்பு!

ய் ..ஏய்.. நீ இங்க என்ன பண்ணுற?” கையில் பெட்டி படுக்கையுடன் சுயோதசேனாவின் வாசலில் நின்றவளை பார்க்க தூக்கிப் போட்டது கார்முகிலனுக்கு. அதுவும் வெண்ணிலவு மேகங்களின் இடையில் மறைந்து விளையாடிடும் இரவில்! அவளின் பெயரை கூட அறிந்திருக்கவில்லை அவன்.  ஆனால் “ஐ லவ் யூ” என்றிருந்தான். அவளுக்கும் அப்படித்தான் ! அவனை தெரிந்தே இருக்காது! என்று அவன் நினைத்திருக்க அதை பொய்ப்பிக்கும்படி அவன் முன்னால் நின்றிருந்தாள் நித்யா.

“இங்க என்ன பண்ணுறேனா? ஐ லவ் யூ சொல்லிட்டு போயிட்டா, போதுமா? என்னை அதுக்கு தேடியே வரல.. அதான் நானே வந்துட்டேன்” என்றாள்.

“ஏய்..என்ன விளையாடுறியா?”

“ஐ லவ் யூன்னு சொன்னப்போ அது உங்களுக்கு தெரியலயோ?”

“ப்ச்ச்..நீ கூடத்தான் யாருகிட்ட பேசுறோம்னு தெரியாம என்கிட்ட பேசின…அது தப்பில்லையா?”

“அது தெரியாமல் நடந்தது.. பட் நீங்க பண்ணது தெரியாம நடந்தது இல்லை.. இனி நான் இங்கத்தான் இருப்பேன்..”. அவளை மேலிருந்து கீழ் என பார்த்து வைத்தான் கார்முகிலன். அந்த கடற்கரையை ஒட்டி வீசும் காற்றின் வேகத்தில் பறந்தே விடுபவள் கூட ஒரு தோற்றம். ஆனால் பேச்சை பாரேன்! என்று பற்களை கடித்தான்.

“என்ன கார்கி இன்னும் யோசிக்கிறீங்க? ஒரு பொண்ணை வாசல்ல நிக்க வெச்சு கெஞ்ச வைக்கிறிங்க? பாக்கவே பாவமா இருக்கு..நீ உள்ள வா” என்று நித்யாவின் கையிலிருந்த பெட்டியை பெற்றுக்கொண்டாள் லீலா. மூச்சு முட்டுவது போல உணர்வு வர

“அடிப்பாவிங்களா” என்ற அலறலுடன் கண் விழித்தான் கார்முகிலன்.அவன் அலறியதில் தூங்கிக் கொண்டிருந்தவனை கன்னத்தில் கைவைத்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்த மூவருமே கேள்வியுடன் பார்த்தனர்.

ஏற்கனவே கனவில் அரண்டவன் தன்னை சுற்றி கதிரவன்,பிரபஞ்சன், பிரசன்னலீலா மூவருமே அமர்திருப்பதை பார்த்து பயந்து போயி எழுந்தான்.

“டேய் என்னங்கடா, நான் டிக்கேட் வாங்கிட்டு போயிட்ட மாதிரி சுத்தி உக்காந்து இருக்கீங்க?”

“நீ அரைலூசு. நீதான்டா கனவுல உளறிட்டு இருந்த?” என்று அவன் முதுகில் அறைந்தான் பிரபா.

“என்னது? எவ்வளவு நேரமாடா இப்படி ஃப்ரீ ஷோ பார்த்துட்டு இருக்கீங்க”

“அரைமணி நேரம் இருக்கும் மச்சான்..”-கதிர்.

“என்னது? சின்ன கனவு மாதிரி இருந்துச்சே..” என்று வாய்விட்டே சொன்னவன்,

“மச்சான் இன்னைக்கு ஒரு விஷயம் நடந்துச்சுடா” என்றபடி மற்ற இருவரையும் பார்த்தான். பொதுவாக ஒவ்வொரு தினமும் தங்களின் அனுபவங்களை பகிர்வது அவர்களின் பழக்கம்.. கடந்த இரு நாட்கள் மட்டும் அது விதிவிலக்கானது,லீலாவின் வருகையினால்.

கதிரவனும், பிரபஞ்சனும் அதையே எண்ணிட, “ வாடா அப்படியே ஒரு வால்க் போகலாம்” என்றான் பிரபா. லீலாவிடம் என்ன சொல்வது? என்று அவர்கள் பார்க்க, அவளுக்குமே அவர்களின் தனிமையில் தொந்தரவாக இருக்க தோணவில்லை.

“நான் டீவி பார்க்க போறேன்.. நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க” என்றாள். சட்டென முகம் தெளிந்த கார்கி,

“ரொம்ப தேங்க்ஸ் லீலா..” என்று முதல் ஆளாக துள்ளி குதித்தான். மற்ற இருவரையுமே அதே சந்தோஷம் தொற்றிக்கொண்டது.

நித்யாவைப் பற்றி சொல்லி முடித்திருந்தான் கார்முகிலன். பிரபஞ்சன் நண்பனின் செய்கையை ரசித்து சிரிக்க, கதிரோ அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்.

“என்னடா விளையாட்டு இது?”

“டேய்.. எவனோ ஒருத்தன் வாங்கவேண்டிய திட்டை நான் எதுக்கு வாங்கனும்? அந்த கோபத்துல தான் சொன்னேன்.. மத்தபடி  நானாவது பேருகூட தெரியாத ஒருத்தியை காதலிக்கிறதாவது..”

“காதலிக்கிற எண்ணம் இல்லன்னா அந்த எண்ணத்தை தூண்டுற மாதிரி எதுவுமே பண்ணிருக்க கூடாது.. உன்னால அந்த பொண்ணு டிஸ்டர்ப் ஆகியிருந்தால் என்ன பண்ணுவ?”

“என்னமோ உன்னால எந்த பொண்ணும் டிஸ்டர்ப் ஆகாத மாதிரி பேசுற? ருத்ரா உன்னையே நெனைச்சிட்டு இருக்கான்னு உனக்கு தெரியாது??” துளைக்கும் பார்வையுடன் கேட்டான் கார்முகிலன்.

“டேய் கார்கி” என்று பிரபா அவன் தோளை அழுத்த,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.