(Reading time: 9 - 17 minutes)

“நீ சும்மா இரு பிரபா.. இவன் இப்படி இருக்குறவரை நாம கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு அவனுக்கு தெரியாதா மச்சான்? லீலாமேல கருணை, யாருன்னே பேரு கூட தெரியாத பொண்ணு மேல அக்கறை வரும்.. ஆனா கண்ணுமுன்னாடியே வந்துட்டு போறவளை பார்க்க கசந்து போயிரும்? அப்படிதானே?” சட்டென கார்முகிலனை அணைத்துக் கொண்டான் கதிரவன். அவனுக்கு உணர்த்துவது போல மென்மையாய்,

“உன் மனசும் எனக்கு தெரியும்.. உன் கவலையும் எனக்கு புரியுது.. எனக்கு நீங்க ரெண்டு பேர் மட்டும் போதும்டா.. என் உலகம் இவ்வளோதான்.. ப்ளீஸ்” என்றான். அவனை அணைக்காதே என்று மூளை சொல்வதை கேட்காமல் கார்முகிலனின் கரங்கள் கதிரை இறுக்கிக் கொள்ள பிரபஞ்சனும் அவர்களோடு இணைந்து கொண்டான்.

“டேய் ரெண்டு பேரும் சட்டைய கிழிச்சுகிட்டு சண்டைய போட போறிங்கனு பார்த்தா ஸ்னேகம் மாதிரி கட்டிப்புடி வைத்தியம் பண்ணி சமாதானம் ஆகிட்டீங்க.. லவ் யூ மச்சான்” என்று இருவரையும் பிரபஞ்சன் அணைக்க,அவர்களின் பேச்சு விளங்காமல் போனாலும் மூவரும் நின்றிருந்த நிலையை பார்த்து பெருமூச்சு விட்டாள் பிரசன்னலீலா. அவள் இதழ்களோ சோகம் நிறைந்த புன்னகையொன்றை வெளிப்படுத்தின. அந்த சோகத்தின் காரணம் என்னவோ?

லவ் யூ..ஐ லவ் யூ..ஐ லவ் யூ” கார்முகிலனின் குரலே எதிரொலிப்பது போல உணர்ந்தாள் நித்யா. நேற்று அவன் அப்படி சொல்லிவிட்டு சென்றதும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றவள் அவனை திட்ட எண்ணி பைக்கை தேட அவனோ காற்றோடு காற்றென கண் மறைந்தான்.

“திமிர் பிடிச்சவன்.. உன்னை பார்க்கமலா போயிருவேன்? அப்போ காட்டுறேன் இந்த நித்யா யாருனு!” என்று சூளுரைத்துவிட்டு அவள் தன் நாளை தொடர்ந்தாள் தான்! ஆனால் அடிக்கடி அவனது முகமும் குரலும் அவளை இம்சித்தது.

“என்னை டார்ச்சர் பண்ணுறதுக்காக சந்தோஷப்படாதே.. என்னைக்கு மறுபடியும் என்னை பார்க்குறியோ..அன்னைக்கு உன் நிம்மதி எல்லாமே போயிரும்!” என்றாள். அவளது எண்ணத்தை நிறைவேற்ற விதிக்கும் என்னத்தான் ஆசையோ,இதோ அந்த சம்பவம் இன்றே நிகழப்போகிறது.

“ப்பா.. இந்த வீட்டு பாத்திரம் பண்டமெல்லாம் ஒரு பொண்ணொட கைப்படாமலே வாழ்ந்திடும்னு நினைச்சேன் பொம்மாயீ.. ஆனா நீ வந்து அதை மாத்திட்ட பாரேன்” என்று கிண்டலாக பேசிக் கொண்டே காலை உணவை லீலாவுடன் தயாரித்து கொண்டிருந்தான் பிரபஞ்சன். கதிரும் கார்கியும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

“ஹும்கும்..பாத்திரம் பண்ட்த்துக்காக சந்தோசப்படுறீங்களா? இல்ல நல்லசாப்பாடு கிடைக்கிதுனு சந்தோஷப்படுறீங்களா?” என்றாள்லீலா.

“அதென்ன நல்ல சாப்பாடுனு அழுத்தமா சொல்லுற? எங்க சமையலில் என்ன பிழை கண்டாயோ?” என்றுநெற்றிக்கண்ணை திறந்தான் பிரபஞ்சன்.

“நீங்களாம் சமையலை சுயமா கத்துட்டு இருப்பீங்க..சோ சில சீக்ரட்ஸ் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்..நான் என் அம்மாக்கிட்டசமையல் கத்துக்கிட்டேன்.. சோ அவங்களுடைய அனுபவமும் எனக்கு ஒரு டிப்ஸ்..”

“நான் சமையல் என் அம்மாக்கிட்ட தான் கத்துக்கிட்டேன்..” என்றான் பிரபஞ்சன். அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் லீலா. குடும்பத்தை பற்றி பேசினாலே ஜாக்ரதையாகிவிடுபவன் இன்று இதமான குரலில் பேசினான்.

“அப்படியா?”

“ஆமா.. தம்பி தங்கச்சிய நான்தான் அவங்களுக்கு க்லோஸ்..எனக்கு அப்படித்தான்.. சமைக்கிறது, வீட்டை சுத்தமா வெச்சுக்குறது,நிர்வாகம் பண்ணுறது எல்லாமே அவங்க்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்..” என்றான் பிரபா.

“அவங்கள மிஸ் பண்ணலயா நீங்க? பார்க்கலயா?” யோசித்தப்படியே கேட்டாள் பிரசன்னலீலா. வலது கையால் இடது பக்கமார்பை தொட்டு பேசினான் பிரபஞ்சன்..

“எல்லாரும் இந்த இருக்காங்க.. பத்திரமா.. நான் ஏன் மிஸ் பண்ண போறேன்? எல்லா பிரிவும் பிரிவல்ல பொம்மாயீ” என்று ஆழ்ந்த குரலில் அவன் சொல்ல இமைக்கவும் மறந்து அப்படியே நின்றாள் பிரசன்னலீலா. அவளுக்குள் அந்த நொடியில் ஏதோ மாற்றமொன்றுநிகழ்ந்தது. அவளையும் மீறி கண்ணீர் துளியொன்று விழிகளை விட்டு நழுவிட அவளை கேள்வியாய் பார்த்தான் பிரபஞ்சன்.

“அ..அது வீட்டு ஞாபகம்.. சரி சீக்கிரம் வேலையை முடிங்க ..இன்னைகு சீக்கிரமா ஆஃபிஸ் போகனும்னு சொன்னீங்களே?”

“ஆமா.. கதிரும் கார்கியும் கூட வராங்க.. ஒரு சின்ன இண்டெர்வியூ நடத்தனும்.. நீ தனியா இருப்பீயா?” என்று கேட்டான் பிரபா..

“எனக்கென்ன? ஜாலியா இருப்பேன்..”

“ஆ-தீ-ரா” ஆடை உற்பத்தி ஆலயம்! பிரபஞ்சன், கதிரவன், கார்முகிலன் கூட்டு முயற்சி. பிரபாவின் பொறுப்பில் அனைத்தும் நிகழ்ந்தாலும், கார்கிகும் கதிருக்கும் சமநிலையான பதவிகள் இருப்பதை அடிக்கடி உறுதிசெய்துவிடுவான் பிரபா. அதில் முக்கியமான ஒன்று நேர்முகதேர்வுகள்!

அவர்களின் நிறுவனத்திற்கு தனியொரு நற்பெயர் இருந்தது. பொதுவாக அவர்கள் வெளியிடும் புது டிசைன் ஆடைகள் ஆண்-பெண் என ஜோடியாகவே வரும். அதனால் “ஆதீரா’ கலெக்ஷன்ஸ்காக காத்திருந்து ஷாப்பிங் செய்பவர்கள் உண்டு.

ஆதீராவில் பணிபுரிவது பலரின் கனவு. அந்த கனவினை சுமந்தவளாக நேர்முக தேர்விற்காக வந்தவர்களில் ஒருத்தியாக அமர்ந்திருந்தாள் நித்யா. நடமாடும் பாட்டாசு ஒன்று தன்னை தேடி வந்திருப்பதை அறியாமல் மீட்டிங் அறையில் வெகு தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான் கார்முகிலன்.

இன்னொருபக்கம், வீட்டுத் தொலைப்பேசியின் மூலம் பிரியதர்ஷினியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ப்ரசன்னலீலா.

“நான் வந்த காரணம். வேற,, ஆனா இங்க நடக்குறது வேற.. மூணு பேரும் என்னை முழுசா நம்புறவரை நான் இங்கத்தான் இருப்பேன் குட்டிமா!” என்றாள் ஆவேசமாக!

என்ன நடக்குது? சொல்லுறேன்..டாட்டா

தொடரும்...

Episode # 05

Episode # 07

Go to Vellai pookkal ithayam engum malargave story main page

{kunena_discuss:1166}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.