(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 04 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

ன்று கடைசி பீரியட் வரை படித்து படித்து மதியிடம் சொன்னாள் காவ்யா.

"இங்க பாரு மதி, சாயங்காலம் அண்ணா, என்னை பிடிச்சிருக்கானு கேட்டா, ஒழுங்கா ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்ற. அப்புறம் அந்த ஓடி போன பொண்ணை விரும்புறீங்களான்னு  கேட்டுரு சரியா?", என்றாள் காவ்யா.

"அவளை பத்தி  எதுக்கு டி கேக்கணும்?", என்று அப்பாவியாய் கேட்டாள் கலைமதி.

"லூசு லூசு அது தெரிஞ்சா தான், உன்மேல  அவங்களுக்கு எப்ப காதல் வரும்னு கண்டு பிடிக்க முடியும்"

"நான் எப்படி காவ்யா அதை கேக்க முடியும்? எனக்கு பயமா இருக்கு டி"

"நல்லவங்க, நல்ல பேசுறாங்கன்னு  தான சொன்ன? அப்புறம்  என்ன பயம்? ஒழுங்கா கேளு"

"ம்ம்"

"உனக்கு பிடிச்சிருக்குறதையும்  சொல்லிரு. பிடிச்சிருக்கு தான?"

"பிடிச்சிருக்கு"

"மவளே ஏதாவது சொதப்புன்னேன்னு  வச்சிக்கோ, நாளைக்கு உன்னை பொலி போட்டுருவேன்"

"ரவுடி  மாதிரி பேசாத காவ்யா", என்று சிரித்தாள் கலைமதி.

அன்று சாயங்காலம் அவன் எப்ப வருவான் என்று தெரியாததால், "எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் காவ்யா. நீ கிளம்பு", என்று சொல்லி விட்டாள் மதி.

"இருந்தா அவங்க கூட காரில் கூப்பிடுவாங்க", என்று நினைத்து காவ்யாவும் கிளம்பி விட்டாள்.

மதியும் அதை யோசித்தாள் தான். ஆனால் "அவன் என்ன சொல்லுவானோ?", என்று நினைத்து அவளை அனுப்பி விட்டாள்.

எப்ப வருவான் என்று பார்த்து கொண்டிருந்தவளின் கண்ணுக்கு அவன் கார் தெரிந்தது.

கார் அருகே அவள் வரவும், முன் பக்க கதவை உள்ளே இருந்தே திறந்து விட்டான் சூர்யா.

அவனை பார்த்ததும் அவள் தலை தன்னாலே குனிந்தது.

ஏறி அமர்ந்தவள் கதவை மூடி விட்டு அவனை பார்த்தாள்.

அவள் முகத்தை பார்த்தவன் "போகலாமா?", என்று கேட்டான்.

"ஹ்ம்"

கார் கிளம்பியது.  இருவருக்குள்ளும் மவுனம் ஆட்சி செய்தது.

காலையில் வரும் போது வெளியவே பார்வையை பதித்திருந்த மதி, இப்போது வெளியே பார்ப்பதும், அவன் முகத்தை பார்ப்பதுமாக  இருந்தாள்.

"என்ன இவன்  காலைல கேட்ட கேள்வியை இப்ப கேக்காம வண்டியை ஓட்டுறான்? காலைல  கேட்ட  கேள்வியை  இப்ப  கேளுங்கன்னு  எப்படி  சொல்ல  முடியும்? கேக்கவே  மாட்டிக்கானே", என்று  நினைத்து  அவனை  அடிக்கடி  திரும்பி  பார்த்தாள்  கலைமதி.

"என்ன  மேடம்  அடிக்கடி  நம்ம  பக்கம்  பார்வையை  திருப்புறாங்க?", என்று  நினைத்தவனுக்கு  அப்போது  தான்  காலையில்  தான்  கேட்ட  கேள்வி  நினைவில்  வந்தது.

"அதுக்கு  பதில்  சொல்ல  தான்  இப்படி  துடிக்கிறாளா? பிடிக்கும்னு  சொல்றதுக்கு  இப்படி   பாத்துட்டு வாராளா? இல்லை பிடிக்கலைனு சொல்லிருவாளோ?", என்ற படியே அவள் முகத்தை பார்த்தான்.

அதில் பிடிக்காத மாதிரி எந்த அறி குறியும் தெரியாததால் நிம்மதியாக மூச்சு விட்டான் சூர்யா.

அவளுடைய தவிப்பு தாங்காமல் "என்ன ஆச்சு கலை? எதாவது கேட்கணுமா?", என்று கேட்டு மேலும் அவளை கடுப்பேத்தினான்.

"சும்மா இருந்தவளை பிடிக்குமா பிடிக்காதான்னு கேள்வி கேட்டு சொறிஞ்சு விட்டுட்டு இப்ப நல்ல பிள்ளை மாதிரி என்ன ஆச்சுன்னு கேக்குறதை பாரு?", என்று நினைத்து கொண்டு "இல்லையே", என்றாள்.

"அதான  இவளாவது தைரியமா நீங்க கேட்ட கேள்விக்கு பதிலை கேக்கலைன்னு கேக்குறதாவது", என்று நினைத்து கொண்டு "இல்லை இங்க அடி கடி திரும்பி பாத்தியா? அதான் அப்படி நினைச்சிட்டேன்", என்றான்.

"இதை எல்லாம் நல்லா கேளு. கேட்ட கேள்வியை மறந்துரு", என்று நினைத்து கொண்டு "இல்லை கார் வேகமா போற மாதிரி இருந்தது அதான்", என்று சமாளித்தாள்.

"நம்ம பொண்டாட்டி விவரம் தான் டா", என்று நினைத்து கொண்டு "அதுவா அம்மா அப்பா எல்லாரும் ஊருக்கு போறாங்க. அதான் சீக்கிரம் போலாம்னு", என்று அவனும் அவளுக்கு சமமாக பதில் சொன்னான்.

அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் கலைமதி.

"என்ன ஆச்சு? இப்படி முழிக்கிற?", என்று கேட்டான் சூர்யா.

"எல்லாரும்னா எங்க அப்பாவும் போறாங்களா?"

"ஆமா, இது என்ன கேள்வி? நேத்து அம்மா உன்கிட்ட சொல்லிருப்பாங்கன்னு நினைச்சேன்"

"அத்தை, என்கிட்டே சொல்லலையே. எப்ப வருவாங்க போயிட்டு"

"ஆமா நீ எதுக்கு இவ்வளவு அதிர்ச்சியாகுற?"

"இல்லை எல்லாரும் போய்ட்டா எப்படி வீட்ல தனியா இருக்குறது?"

"என்கூட இருக்க பய படுறாளோ?", என்று நினைத்து "நான் உன்னை என்ன செய்ய போறேன்? எதுக்கு பயம்?", என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.