(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 01 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

“தாய்மை வாழ்கென தூய

  செந்தமிழ்

ஆரிராரோ ஆராரோ

தங்க கை வளை வைர கை வளை

   ஆரிராரோ ஆராரோ “

சுமையும்,பழமையும் நிறைந்த அழகான ஊர் நாயகனை பிரியாள்..

அந்த பசுமை கண்களுக்கு நன்கு விருந்தளிப்பது போல இருந்தது அந்த இளங்காலை பொழுது...

திண்ணை வைத்து பழமை மாறாது கட்டப்பட்டிருந்தது அந்த பெரிய வீடு.ஓட்டுவீட்டுடன் இணைந்து கட்டப்பட்ட மாடி  வீடு அது..

அந்த வீட்டின் அனைத்து பக்கங்களும்  பசுமையால் சூழப்பட்டிருந்தது.

அதற்கு அருகே அழகாய் அடக்கமாய் இருந்தது ஒரு ஓட்டு வீடு இருந்தது.அதன் இருபுறமும் பன்னீர் ரோஜா செடிகள் அலங்கரித்து இருந்தன...

ஐந்து வயது மதிக்க தக்க அந்த சிறுவன் ஓடி வந்தான்.வந்தவன் அந்த சிறிய வீட்டுக்குள் ஓடினான்..

“பெரியம்மா...,பெரியம்மா..”என்று அவன் அழைக்க வெளியில் வந்தால் அவள்.

“என்னடா கௌதம்..,என்னாச்சு..”என்று அவள் கேட்க

“அது அம்மாவ அப்பா ஹாஸ்பிடல் கூட்டிடு போறாராம்..,அதான் பெரியம்மா உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன்..”என்று அவன் கூற அவனுக்கான பாலை அடுப்பில் ஏற்றியவாரே மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அனைத்துப் பொருள்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் அவள்.

அவளது பின்னாடியே அவள் எடுத்து வைப்பதை பார்த்துக் கொண்டே இருந்த கௌதம்,”பெரியம்மா,பெரியம்மா..”என்று அவன் அவளை அழைக்க

“என்னடா..”என்று அவள் கேட்க

“எனக்கு தங்கச்சிபாப்பா வருமா,தம்பிபாப்பா வருமா...”என்று அவன் அவளை கேட்க

“என்னோட கௌதம் குட்டிக்கு எந்த பாப்பா வேணும்..”என்று அவள் கேட்க

“எனக்கு ஆனந்தோட பாப்பா மாதிரி தான் வேணும்,குட்டியா தங்கச்சி பாப்பா..”என்று அவன் கூற

“கௌதம் குட்டி ஆனந்தோட பாப்பா மாதிரி  இல்லாம உனக்கு புடிச்ச மாதிரி உனக்கு பாப்பா வரும்..”என்று அவனுக்கு பதில் அளித்துக் கொண்டே பாலை அவனுக்கு கொடுத்துக் குடிக்க சொன்னால் அவள்.

அவன் பாலைக் குடித்ததும் கதவை சாத்திவிட்டு கௌதமையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவள் வெளியில் எங்கோ கிளம்பி செல்வதை திண்ணையில் அமர்ந்து இருந்துப் பார்த்த சந்தனபாண்டியன்,”அன்னம்..,எங்கடா போற..”என்று அவர் கேட்க

“அதுவா அண்ணா,நம்ப தேவிய ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சாம்..,கௌதம் வந்து சொன்னான் அதான் கிளம்பிட்டேன்..”என்று கௌதமை அணைத்தவாரே கூறினால் அன்னம் என்று எல்லாராலும் அழைக்கப்படும் அன்னலட்சுமி.

தனது அண்ணன் கண்டிப்பாக கோபப் படுவார் என்று அவளுக்கு தெரியும்..இருந்தும்அவர் கேட்ட பின் சொல்லாமல் இருக்க முடியாது இல்லையா...

அதற்குள் அவரது மனைவியும்,அவரது அன்னையும் வெளியில் வந்திருந்தனர்.

அவர்களும் அதையே கேள்வியை முன் வைக்க தனது அண்ணனுக்கு கூறிய அதே பதிலை கூறினால் அவள்.

“சரி அண்ணா ,நான் போயிட்டு வரேன்..” என்றுக் கூறிக் கிளம்பியவளின் இன்னொரு பக்க கையை ஓடிவந்து பிடித்தான் ஒரு சிறுவன்.அவனுக்கும் கௌதம் வயது இருக்கும்...

“அத்தை எங்க போற..,நானும் வருவேன்..” என்று அவன் கௌதமை முறைத்துப் பார்த்தவாறே கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் அவனை முறைக்க பார்த்த சந்தனப்பாண்டியன்,

”மல்லி அவனை உள்ள கூட்டிப் போ..”என்று தனது மனைவியிடம் கூறினார் அவர்,

அவர் கூறியதைப் புரிந்துக் கொண்ட அவன் தனது அத்தையின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டான்.

அவன் தனது கைகளில் தரும் அழுத்தத்தை புரிந்துக் கொண்ட அன்னம்,”அண்ணா வேந்தனை நான் அழைச்சிட்டுப் போறேன்..” என்றுக் கூற  தந்து தங்கைக் கேட்டு மறுக்க முடியாதவராய் அவர் தலை அசைக்க அவன் தனது தந்தையின் ஒப்புதலை பெற்றதும் அத்தையைப் பார்த்து சிரித்தான்.

தனது அன்னையிடமும்,அண்ணியிடமும் விடைப் பெற்றுக் கொண்டு அந்த சிறுவர்களை அழைத்துக் கொண்டு சென்றால் அன்னம்.

அவள் போவதை பார்த்த அவளது அன்னை மரகதம் ஒரு பெருமூச்சை வெளியிட்டு “என்னோட பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேடா..,வாழ வேண்டிய வயசுல,என்னோட பொண்ணுக்கு மட்டும் ஆண்டவன் எதுக்குடா இப்படி தலையெழுத்த எழுதினான்...”என்று அவர் அழ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.