(Reading time: 13 - 25 minutes)

கேட்டின் உள்ளே வரும்பொழுதே தனது அன்னை மரகதம் புலம்புவது அன்னத்தின் காதில் நன்கு விழுந்தது..

“என் பொண்ணை கோவில் சிலையா வளர்த்தனே இப்படி போறவ,வரவ எல்லாம் என் பொண்ணுக்கு தானம் தருமம் பண்றதுக்கா..,அவ கேக்குறதுக்கு முன்னாடி எல்லாம் வாங்கி தந்தியே என் ராசா சாமிகண்ணய்யா இப்படி வாழ்க்கை முழுக்க அவ ஏங்கி ஏங்கி வாழவா...”என்று அவர் புலம்பிக் கொண்டிருந்தார்.

தனது தாய் புலம்பியதை கேட்டவளுக்கு இதயம் வலிக்க தான் செய்தது..ஆனால் அவளது இந்த நிலைமை யாராலும்  மாற்ற முடியாத நிலை...

அவர் புலம்புவதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த அண்ணனை பார்த்த அவளுக்கு அவர் சொல்லாமலே அவளுக்கு தெரிந்தது அவருக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று...

இருந்தும் அவளால் ஒன்றும் செய்ய  முடியாது...

அமைதியாக தன் தாய் புலம்புவதையும் பொருட்படுத்தாமல் அவர்களை கடந்து சென்றால் அன்னம்.போகும் தன் தங்கையையே வெறுமையுடன் பார்த்தார் சந்தனபாண்டியன்.

அவரால் அதுமட்டுமே செய்ய முடிந்தது வேறு எதுவும் செய்ய முடியவில்லை...

வேந்தன் தன் வீட்டிற்கு வந்து விட,அன்னம் மட்டும் தன் மாளிகைக்குள் வந்தால்,வந்தவள்

கௌதமை படுக்க வைத்துவிட்டு அவனது அருகில் அவளும் வந்து படுத்துக்கொண்டாள்.

இதுநாள்வரை அவள் உறங்கும் அந்த தலையணை அவளது கஷ்டத்தால் சிந்திய  கண்ணீரை தான் தாங்கி இருந்தது..,ஆனால் இன்று அவள் சிந்திய கண்ணீர் ஆனந்த கண்ணீராய் இருந்தது..

அவளுக்கு என்று ஒரு மகள் இன்று இருக்கிறாள்..,முழுவதும் அவளது பொறுப்பாய் அவள் வளர போகிறாள் அதை நினைத்தப் பொழுதே அவளுக்கு தாய்மை உணர்வு அவளை விட அதிகமாக அவளை மகிழவைத்தது..

எந்த ஒரு பெண்ணிற்கும் தாய்மை பத்துமாதம் குழந்தையை பெற்றால் மட்டும் வருவது இல்லை,அது பெண்களுக்காய் இறைவன் கொடுத்த வரம்..,அதற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லை...

Kathal kathalitha kathaliyai kathalikkum

தாய்மை பெண்ணிற்கு மட்டுமாய் கிடைத்த அணிகலன்..

ஒரு பெண் குழந்தை ஒரு பொம்மையிடம் காட்டும்  அன்பும்,பரிவும் கூட அவளுக்கு பிறப்பிலே வந்த தாய்மை உணர்வால் தான்..

தேவியையும்,குழந்தையையும் வீடிற்கு அழைத்து வந்திருந்தனர்.குழந்தை பசியாறும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரமும் குழந்தை அன்னத்திடம் தான் இருந்தது..,அவளுள் இருந்த தாய்மை அனைத்தும் அந்த குழந்தையிடம் காண்பித்தால் அன்னம்...

நாட்கள் செல்ல குழந்தைக்கு பெயர் சூட்டும் நாலும் வந்தது.கதிரேசன்,தேவி இருவரும் அன்னத்தையே பெயரை தேர்ந்தெடுக்க சொன்னார்கள்.

அவளும் தனது மகளுக்கு அழகான பெயரை சூட்ட நினைத்தால்,தன் வாழ்க்கைக்கு இனிமையை தர போவதும் மட்டும் இல்லாமல்,இரவாய் இருந்த தனது வாழ்கைக்கு நிலவாய் அவள் வந்ததினால் அவளுக்கு தேன்நிலா என்ற பெயரை தேர்ந்தெடுத்தால் அன்னம்.

அவளுக்கு தெரியவில்லை நிலவிற்கு என்றும் சூரியன் தான் வெளிச்சம் தருகிறான்.அவன் தரும் வெளிச்சம் தான் அந்த நிலவை பிரகாசிக்க வைக்கிறது.ஆனால் இந்த நிலவிற்கு சூரியனாய் இருப்பவன் என்றும் அமாவாசையை பரிசாக  தர போகிறான் என்று..

“என் வாழ்வின் இன்பமாய்

 நீ வந்ததால்

தேன் என்று பெயரிட்டேன்

 அப்பொழுது தெரியவில்லை

எனக்கு உன் வாழ்வின்

 சுவையே கசப்பு என்று

என் வாழ்வின் பௌர்ணமியாய்

  நீ வந்தாய் என்று

நிலா என்று பெயரிட்டேன்

  உன் வாழ்வே அமாவாசையாக

போகபோவது தெரியாமல்...”

Kathal kathalitha kathaliyai kathalikkum

தொடரும்!

Episode 02

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.