(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 02 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

என் ஆழ்மனதின்

        ஆழ்கடலில்

அலைபாயும் எண்ணங்களில்

      அழியாத நினைவுகளில்

அமரமாய் என்றும் நீயே

     எனது மதியே....

அன்னம் தேர்ந்தெடுத்த பெயர் அனைவருக்கும்  பிடித்திருந்தது.அதனையே குழந்தைக்கு வைத்தனர்.

தேன்நிலா  பிறந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தன.அவளை முழுமையாக பார்த்துக் கொண்டது அன்னம் மட்டும் தான்.குழந்தையின் பசியை ஆற்றுவது மட்டுமே தேவியின் பொறுப்பு மற்ற அனைத்தும் அன்னம் செய்துவிடுவாள்.

தேன்நிலா பிறந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தன.அன்னம் இப்பொழுது தனது வீட்டிற்கு தூக்கி செல்ல ஆரம்பித்திருந்தாள்.

அவள் முதல் நாள் தேன்நிலாவை தூக்கி வந்த பொழுது வீட்டில் இருந்த அவரது உறவுகள் எதும்  அந்த பிஞ்சு குழந்தையை நிமிர்ந்து பார்க்கவில்லை.

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அவளது அன்னை மரகதம் அந்த குழந்தையை வாஞ்சையுடன் பார்க்கவில்லை.அவரது கண்ணுக்கு அந்த குழந்தை தனது பெண்ணின் இயலாமையை இந்த உலகுக்கு காட்டும் பொருளாக தான் இருந்தது.

Kathal kathalitha kathaliyai kathalikkum

அதனால் அவரால் அந்த குழந்தையை கொஞ்ச முடியவில்லை.அவளது அண்ணியும் குழந்தையை கண்டுகொள்ளவில்லை.

ஏனென்றால் அவள் அண்ணி மட்டும் அல்ல அவளது நெருங்கிய தோழியும் கூட,அதனால் தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள்.

அவளது தோழியின் வாழ்கையை கேள்விகுறியாக மாற்றிவிட்டு அந்த இடத்தில் இருக்கும் தேவியும்,அவளது கணவனும் வாழும் வாழ்கைக்கு அத்தாச்சியானது அல்லவா..

அவளுக்கு கதிரவனை தனது தோழியின் கணவன் என்று கூட நினைக்க முடியவில்லை..

மல்லியால் கதிரவனை தேவியின் கணவனாக மட்டும் தான் அவளால் பார்க்க மட்டும் தான் முடிந்தது.

தனது வீட்டின் முன் இருந்த திண்ணையில் தனது அன்பு மகளை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் அன்னம்.அவள் இதை எதிர்பார்த்து தான் வந்திருந்தால்,மல்லிக்கு பிடிக்க வில்லை என்றாலும் குழந்தையை அவள் வீட்டிற்கு உள்ளே தூக்கி வந்ததால் உள்ளே சென்று வந்தவள் கைகளில் தேங்காய் எண்ணெயும்,சர்க்கரையும் இருந்தது.

அதை பார்த்தவளது கண்களில் மட்டும் அல்ல மனதிலும் ஒரு நிம்மதி.குழந்தையின் அருகில் வந்தவள் சிறுசொட்டு எண்ணெயை தேன்நிலாவின் உச்சந்தலையில்  வைத்தவள்,சர்க்கரையை விரலால் தொட்டு தேன்நிலாவின் வாயில் வைத்தால் மல்லி.(ஏன் வைக்கிறாங்கனு எனக்கு தெரியாது பிரண்ட்ஸ்,அதனால கேட்க கூடாது...)

இது கிராமத்தில்(எங்க ஊர் பக்கம் இது ஒரு வழக்கம்..)செய்யும் ஒரு வழக்கம்,பிறந்த குழந்தையை உறவினர்கள் வீட்டிற்கு முதல் முறை அழைத்து செல்லும் பொழுது இதை செய்வார்கள்.

இனிப்பை  ருசித்ததும் தேன்நிலா நாக்கை குழைத்துக் கொண்டிருந்தால் (அது  தனி ஒரு அழகுதாங்க ..)

“ஆளை கடத்தி போகும்

 உன் கன்னக்குழியின் சிரிப்பில்

விரும்பி மாட்டி கொண்டேன்

  நான் திரும்பி போகமாட்டேன்..”

தனது மருமகள் செய்தது பிடிக்கவில்லை என்றாலும் தனது மகள் மனது கஷ்டப்படும்  என்று மகரதமும் எதுவும் கூறவில்லை..

மல்லி வைத்ததும் தனது தோழிக்காக மட்டும் தான்..(இப்பவே அவங்க மருமகள இனிப்பு கொடுத்து வரேவேற்றுடாங்க நம்ப மல்லி..)

ஆனால் தேன்நிலாவை யாரும் தூக்கவில்லை.விளையாடிக் கொண்டிருந்த வேந்தன் தனது அத்தையை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

இப்பொழுது எல்லாம் அன்னம் குழந்தையுடன் இருப்பதால் முக்கால்வாசி நேரம் கதிரவன் வீட்டில்தான் இருந்ததால் வேந்தன் தனது அத்தையை பார்க்கும் நேரம் குறைந்திருந்தது.

அதான் தனது அத்தையை பார்த்தவுடன் வீட்டிற்கு ஓடிவந்தான்.

வந்தவனது கண்களில் பட்டது தனது அத்தையின் கைகளில் கொழுகொழுவென கைகால்களை உதைத்துக் கொண்டிருந்த தேன்நிலா தான்.

“வாடா வேந்தா..,இப்பலாம் இந்த அத்தையை கண்டுக்கவே மாட்டங்குற..”என்று அன்னம் கேட்க

“என்னோட பேரன் எல்லாம் உன்னை தேடுறான்,ஆனா என்னோட மவளுக்கு தான் அண்ணன் பையனோட கூட இருக்க முடியாத அளவு நிறைய பெற கவனிக்குற வேலை இருக்கே..”என்று மரகதம் நொடித்துக் கொள்ள..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.