(Reading time: 15 - 30 minutes)

 ஆனால் அவள் அவளது அன்னை வீட்டிற்கு வந்த பிறகும் அவளது அக்கா தேவியை பார்த்துக் கொள்ளும் அளவோ,இல்லை தேன்நிலாவை பார்த்துக் கொள்ளும் அளவும் தன்னையும் தனது மகளையும் பார்த்துக் கொள்ளவில்லை என்ற எண்ணம் அவளுக்கு தனது தமக்கையின் மேல் கோபத்தை வரவைக்காமல் தேவி மேலும்,அவளது மகளது மீதும்  வந்தது.

அவளுக்கு தோன்றவில்லை தேவி செய்த செயலை தான் தன் தமக்கைக்கு செய்வோமா என்று...

வேந்தனுக்கு தனது சின்ன அத்தை வந்ததில் இருந்து ஒரே ஒரு எண்ணம் தான் அவனது மூளையை குழப்பிக் கொண்டிருந்தது.தனது சின்ன அத்தையின் பாப்பாவை மட்டும் கொஞ்சும் தனது குடும்பம் தனது பெரிய அத்தையின் பாப்பாவை மட்டும் வீட்டிற்குள் கூட அனுமதிக்கவில்லை என்று...

ஆனால் அவனுக்கு வேல்விழியுடன் இருப்பதை விட தேன்நிலாவுடன் விளையாடுவதுதான் பிடிக்கும்.

அன்னம் எதையும் கண்டுகொள்ளவில்லை அவளது எண்ணங்கள்,நினைவுகள் அனைத்திலும் அவளது மகள் தேன்நிலா மட்டும் தான் இருந்தது.

“பலநாள் கனவே ஒருநாள் நினைவே

ஏக்கங்கள் தீர்த்தாயே..”

தேன்நிலாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து பார்த்து பூரித்துபோனால் அன்னம். தாய்மையே  தனக்கு மறுக்கப் பட்டது என்று நினைத்திருந்த வேலையில் குருடனுக்கு பார்வை கிடைத்த நிலையாய்,பசித்தவனுக்கு அன்னம் கிடைத்த நிலையாய் அவளது நிலை இருந்தது.

“யாரும் தீண்டிட மணங்களில்

   மனதை தீண்டினாய்..

யாரும் பார்த்திடா சிரிப்பினை

    என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும்

 அமைதி இல்லை என்பேன்..”

அவளது உலகம் முழுவதும் தேன்நிலா மட்டுமே இருந்தாள்.தேன்நிலாவின் “ம்மா..”என்ற  ஒரு அழைப்பு அவளுக்கு உலகத்தின் அனைத்து சந்தோசத்தையும் கொடுத்தது.

நாட்கள் நகர தேன்நிலாவின் முதல் பிறந்தநாளும் வந்தது அவளது முதல் பிறந்தநாளை நன்கு கொண்டாடினர் கதிரேசன் குடும்பத்தினர்.

அன்று தேவதையாக மிளிர்ந்தால் அவள்.அளவாக  தைக்கப்பட்ட பட்டுபாவாடை சட்டையில், தத்தி தத்தி நடக்கும் தனது அன்ன நடையில் அவளது அழகில் அனைவரும் தொலைந்துபோயினர்.அவள் கொஞ்சம் பேசவும் ஆரம்பித்திருந்தாள்.

அதனால் தனது மழலை மொழியில் அனைவரையும் கட்டிப்போட்டால் தேன்நிலா.

தேன்நிலாவிற்கு இப்பொழுது இரண்டரை வயதினை தாண்டி இருந்தது. இப்பொழுது அவள் நன்கு பேச ஆரம்பித்திருந்தாள்.அவள் அன்னத்தை “அம்மா..”என்றும்,தேவியை “தேவிம்மா” என்றும்  அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

அன்னம் வீட்டில் தேன்நிலா நாய்குட்டியுடன்  விளையாடிக் கொண்டிருக்க பள்ளி முடிந்து வந்த கௌதம் தனது தங்கையை பார்க்க அன்னம் வீட்டிற்கு வந்தான்.

தனது தங்கையை தூக்கியவன் ,“தேனுக்குட்டி என்ன பண்றீங்க,நாய்குட்டியுடன் விளையாடிகிட்டு இருக்கீங்கள..”என்று அவளது இரண்டு கன்னங்களிலும் அவன் முத்தமிட்டான்.

“விடுடா..,கௌதம் விடுடா..நாய்...நாய்குட்டி ஓடிபோதுடா”என்று அவனை தனது பிஞ்சு கைகளால் அடித்தால் அவள்,ஓடும் நாய்க்குட்டியை பார்த்துக்கொண்டே....

அங்கு அமர்ந்திருந்த அன்னம் அவர்களது அருகில் வந்தவர்,அவர்க்ளது உயரத்திற்கு குனிந்து

“தேனுக்குட்டி அம்மா சொன்னா கேட்பல..”என்று அன்னம் கேட்க தலையாட்டினால் தேன்நிலா.

“அப்ப என்னோட பொண்ணு இனிமே கௌதம பேர் சொல்லி கூப்பிட கூடாது.பாப்பாவோட கௌதம் பெரியவன் இல்ல..”என்று அன்னம் கூறவும்

“அப்பறம் எப்டி நா கூப்பிட..”என்று தேன்நிலா கேட்க

“அண்ணானு கூப்பிடனும்..”என்று அன்னம் கூற

“அப்ப நீ இனி உன்ன அண்ணானு கூப்பிடுறேன்..,நீ போய் என்னோட நாய்குட்டிய புடிச்சிட்டு வா..”என்று தனது அண்ணனிடம் கூறினால் தேன்நிலா.

அவனும் தனது  தங்கை சொன்னதை கேட்டுக்கொண்டு அந்த நாயக்குட்டியை தேடி போனான்

அன்னம் தேன்நிலாவை அமரவைத்து விட்டு கௌதமுக்கு சாப்பிட சாப்பாடு போட சென்றாள்.

அப்பொழுது அங்கே வந்தான் வேந்தன்`அவனை பார்த்த அன்னம் “வேந்தா சாப்பிடறியா..,அத்தை போட்டுட்டு வந்துடுறேன்..”என்றாள் அன்னம்.

அவனும் சம்மதமாக தலையசைக்க அன்னம் சாப்பாடு போட்டுவர சென்றார்.அவனது கண்களில்  தன்  அண்ணன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த தேன்நிலா தான் அவனது கண்களில்  தெரிந்தாள்.

அவளது அருகில் அமர்ந்தவன்,”நிலா என்ன பாக்குற அங்க..”என்றுக் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.