(Reading time: 15 - 30 minutes)

மதி என்று அவனை அழைக்க வந்தவள் தனது அன்னை சொன்ன அறிவுரை நியாபகம் வர,”ம...,அண்ணா(அடிப்பாவி.....) ..”என்று அவள் அழைக்க

அவளது மதி என்ற மழலை அழைப்பு இல்லாததால் முகம்கும்பியவன்,”நிலா என்னை எதுக்கு அண்ணானு கூப்பிடுற..”என்று அவன் கேட்க

தனது மழலை குரலில் சற்று முன்பு நடந்ததை வேந்தனிடம் கூறினாள் தேன்நிலா.

“அதா நான் உன்ன அண்ணானு கூப்பிடேன்..”என்றாள் நிலா.

“நீ கௌதம் கூப்பிடு,என்ன மச்சானு தான் கூப்பிடனும்..”என்று கூறினான் வேந்தன்.

“ஏ..ஏன்..நான் உன்ன அப்புடி கூப்பிடனும்...”என்றுக் கேட்டால் தேன்நிலா.

“ஏனா நான் உன்னோட மாமா பையன் நீ என்னை அப்படி தான் கூப்பிடனும்..,அத்தை தான் சொல்லுச்சி..”என்றான் வேந்தன்.

“அப்படியா அம்மா தான் சொன்னாங்கள ,அப்ப...அப்ப... நான் உன்னை அப்படியே கூப்பிடுற....”என்றாள் தேன்நிலா.

“மச்சான்..,மதிமச்சான்..”என்று தேன்நிலா அவனை அழைக்க அவளது மழலை அழைப்பு அவனுக்கு பிடித்திருந்தது.அவனுக்கு அது ஒருவித மகிழ்ச்சியை தந்தது.

(டேய் நீ கூப்பிட சொன்னானு தான் கூப்பிட வச்சேன்..,பின்னாடி இவ இப்படி கூப்பிடுறது புடிக்காம என்னை எதாவது சொன்ன,மவனே கொன்னுடுவேன்..)

அதன்பிறகு அவள் மதியை மச்சான் என்று தான் அழைக்க ஆரம்பித்திருந்தால் தேன்நிலா.

நாட்கள் போக வருடங்கள் கூட ஆக,வேந்தனும்,கௌதமும் ஆறாம்வகுப்பில் அடி எடுத்து வைக்க,தேன்நிலா தனது பள்ளிபடிப்பில் காலடி எடுத்துவைத்தாள்.

இடைவரை நீண்ட முடியும்,துருதுரு கண்களும் அவளது குறும்புகளும் அந்த தெரு மட்டும் அல்ல ,அந்த ஊரே அறிந்திருந்தது.

அவளுடன் சின்ன குழந்தைகள் அனைவரும் இணைந்து மாலையானால் அந்த தெருவையே ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

கண்ணாமூச்சி விளையாடுறேன், கப்பைஸ் (ஒளிந்து) விளையாடுறேனு எல்லார் வீட்டுக்குள்ளையும் நுழைந்து ரகளை பண்ணிவிடுவார்கள்.உறவுகள் அதற்காக பேசும் பேச்சும் பெரியதாக தெரியாது.

மாலை நேரங்களில் ஒலிக்கும் குழந்தைகளின் சிரிப்பொலியும்,அவர்களுக்கு இடையே ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளும்,அதற்கு பஞ்சாயத்து பேசும் அந்த குழுவின்  தலைவனும்,இந்த சின்ன பிள்ளைகளின் ஒலிகள் தாங்கள்  பேசும் ஊர் கதையை கெடுக்கும் கடுப்பில் அவர்களை வசைபாடும் வயதான பாட்டிகளின் திண்ணை கூட்டமும் ,இரவு விழுந்த நிலவு வெளிச்சமும்.திண்ணை நோக்கி பாயும் இரவின் தென்றலும் இன்றும் நாம் இழக்கும் கிராமத்திற்கே ஊறிய மணங்கள்....

வேந்தன் நிலாவிடம் சேர்ந்து விளையாடுவது இந்த இடைப்பட்ட வருடங்களில் குறைந்திருந்தது.தனது தந்தை சந்தனப்பாண்டியனின் அடியினாலும்,எச்சரிக்கையினாலும் நிலாவுடன் விளையாடுவதை அவன்  நிறுத்தியிருந்தான்.அவன் நிலாவுடன் விளையாடுவதை ஒரு முறை பார்த்தவருக்கு கோபம் வந்து நிலாவுடன் விளையாட கூடாது பேசக்கூடாது என்று அவர் அடித்து அவனுக்கு கட்டளை விதிக்க தன் தந்தை சொன்னதில் ஒரு விஷயத்தை  மட்டுமே அவனால் செய்ய முடிந்தது.

அவனால் நிலாவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.மச்சான் மச்சான் என்று தன்னை ஒட்டி திரிபவளை அவனால் எவ்வாறு ஒதுக்க முடியும்.

அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை அவளை தனது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்க தானே திட்டம் தீட்டுவோம் என்று....

காதலி காதலிக்கபடுவளா....

தொடரும்!

Episode # 01

Episode # 03

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.