(Reading time: 15 - 30 minutes)

இப்பொழுது அவனுக்கு நிலா மேலும் கோபம் வந்தது.இந்த பாப்பா என்ன என்னை பார்த்தாலும் சிரிக்குற,அவனை பார்த்தாலும் சிரிக்குற..,அவன் என் பாப்பாக்கு முத்தம் கொடுக்குறான் என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் வேந்தன்.

(அடபாவி..,இவ்வளவு போசசிவ்னஸ்...வேணாண்டா வேந்தா..)

நேராக தனது அத்தையிடம் சென்றான் வேந்தன்.அவன் அருகில் வந்து நின்றதை பார்த்த அன்னம் “என்னடா வேந்தா..,பாப்பாகூட இருக்கனுதான நான் இங்க வேலை பார்க்குறேன்..,போ போய் பாப்பாவா பார்த்துக்கோ...”என்றாள்

“அத்த கௌதம் வந்துட்டான்,அவ அவன் பாப்பானு சொல்லிட்டான்,என்னை பாப்பாவ பார்த்துக்க கூடாதுனு சொல்லிட்டான்..”என்று வேந்தன் பாவமாக முகத்தை வைத்துக் கூற

“அவன் அப்படியா சொன்னான்..,நான் வந்து கேக்குறேன்..”என்றாள் அன்னம்.

“அவன் அப்படி சொன்னவுடனே அடிச்சிருப்பேன்..,நீதான அவனை அடிக்க கூடாதுனு சொல்லிட்ட..அதான் நான் அவனை அடிக்கலை ..”என்றான் வேந்தன்.

“அப்படியாடா செல்லம்...,என் செல்லகுட்டி நான் சொன்னதுக்காக அடிக்கலையா..,என் மருமகன் நல்ல பையன்...”என்று கூறி அவனது  கன்னத்தை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தால் அன்னம்.

“அத்தை..பாப்பா என்னை எப்படி கூப்பிடும்..”என்று கேட்டான் வேந்தன்.

“பாப்பா  உன்னை மச்சானு கூப்பிடும்டா..”என்று கூறினால் அன்னம்.

“அத்தை அந்த கௌதம் பாப்பா கூட இருக்குறான்..நீங்க வந்து அவனை போக சொல்லுங்க நான் பாப்பாவ பார்த்துக்குறேன்..”(அடேய்,உன்ன வச்சிக்கிட்டு நான் என்னப்பண்ண போறேனோ...)

“அப்படியெல்லாம் பண்ண கூடாது வேந்தா,அவன் பாப்பாக்கு அண்ணன்டா..”என்று கூறிய அன்னம் அவனை அழைத்துக் கொண்டு தேன்நிலாவும்,கௌதமும் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

“கௌதம்,எப்ப வந்த..,அம்மா என்ன செய்யுறா..,பாப்பாவ தூக்கிட்டு வர சொன்னால..” என்று கேட்ட அன்னத்திற்கு தெரியும் தேவி அன்னமாய் குழந்தையை கொண்டு விடும் வரை அவள் தூக்கி வர சொல்லமட்டால் என்று.

“இல்ல பெரியம்மா.,பாப்பாவ பக்க வந்தேன்..”என்றான் கௌதம்.

டப்பாவில் போட்டிருந்த தின்பண்டங்களை எடுத்து இரண்டு தட்டில் வைத்து தனது இருபிள்ளைக்கும் தந்தால் அன்னம்.

“கௌதம் வேந்தனை பாப்பாவ தொடக்கூடாதுனு நீ சொன்னியா..”என்று அன்னம் கேட்க

வேந்தனை முறைக்க பார்த்தான் கௌதம்.அவனோ அவனுக்கு பழிப்பு காட்டி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

“இல்லை...பெரியம்மா.அது....”என்று  கௌதம் எதுவோ கூற வர

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது,வேந்தன் உன்னோட மாமா பையன் தான,உனக்கு பாப்பா எப்படி புடிக்குமோ,அப்படி தான அவனுக்கும் புடிக்கும்..,இன்னிமே இப்படி பண்ணக்கூடாது,

உன்னை மாதிரி  அவனும் பாப்பாகூட விளையாடுவான்,விளையாடகூடாதுனு சொல்லக்கூடாது..” என்று அவனுக்கு புத்தி கூறினால் அன்னம்.

சிறியவர்களுக்கு பெரியவர்கள் சொல்லி தரும் எண்ணங்கள் தான் அவர்கள் வளர்ந்த பிறகு  அவர்கள் செயல்களாக வெளிவரும்.எல்லாவித கஷ்டங்களையும் அவர்கள் ஒரே விதத்தில் பார்த்து அதை எதிர்த்து நிற்க்கும் தைய்ரியத்தை அவர்களது வளர்ப்பு தான் தருகிறது.

அன்னையின் வளர்ப்பும் தந்தையின் கண்டிப்பும் ஒருவரது வாழ்கையை செம்மைப்படுத்த இறைவன் கொடுத்த வரங்கள்.அந்த வரங்கள் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை சொர்க்கமாகவும்,நகரமாகவும் மாற்றுகின்றன.

தனது பெரியம்மா கூறியதை கேட்டவன் அதற்குமேல் எதுவும் கூறாமல் சரி என்பதுபோல் தலையாட்டினான் கௌதம்.அவன் தலையாட்டிய உடன் தேன்நிலாவின் அருகினில் அமர்ந்துவிட்டான் வேந்தன்.கௌதமை பார்த்த அவனது கண்களில் கௌதமின் இயலாமையை நினைத்து ஒரு வித திருப்தி தோன்றியது.

(இவனால வச்சிக்கிட்டு நான் எப்படி கதை எழுதுறது,இவனுங்க பண்ற சேட்டை தாங்க முடியலடா சாமி..)

அத்தையின் பேச்சை தட்டாத வேந்தனும்,பெரியம்மாவின் பேச்சை தட்டாத கௌதமும்   தேன்நிலாவுடன் இணைந்து விளையாட அன்னம் வழிசெய்தாள்.

நாட்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தன.அன்னத்திற்கு தனலட்சுமி என்ற தங்கையும் இருந்தால் அவளுக்கும் குழந்தை பிறந்திருந்தது.தனது குழந்தைக்கு அவள் வேல்விழி என்று பெயர் வைத்திருந்தாள்.

அவள் தனது அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள்.அவளது குழந்தை பிறந்த பொழுது போய் அன்னம் பார்க்கவில்லை.

அது ஒன்றும் தனத்தை பாதிக்கவில்லை,அவளுக்கு தெரியும் அன்னம் தன்னை பார்க்க வந்தால் அவளது வீட்டில் இருப்பவர்கள் எதாவது சொல்லுவார்கள்,அவளது புகுந்த வீட்டு சொந்தத்தை சேர்ந்தவர்களும் எதாவது சொல்லலாம்..,அதான் அவள் தன்னை வந்து தனது தமக்கை பார்க்க வரகூடாது என்று வேண்டிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.