(Reading time: 13 - 25 minutes)

தேவி கண் முழித்துவிட்டால் என்று செவிலியர் சொல்ல உள்ளே சென்றனர் அனைவரும்.

படுக்கையில் படுத்திருந்தவள் எழுந்துக் கொள்ள முயல தனது மனைவியின் முயற்சியை புரிந்துக் கொண்ட கதிரேசன் அவளது அருகில் சென்று அவளை தாங்கி சாய்தந்தவாறு அமரவைத்தார்.

தனது கைகளில் இருந்த குழந்தையை தனது மருமகளது கைகளில் கொடுத்தார் சாந்தா.

தனது மகளினை கைகளில் வாங்கியவளது முகத்தில் தாய்மையின் பூரிப்பில் சந்தோசம் நிரம்பி வழிந்தது.

Kathal kathalitha kathaliyai kathalikkum

தனது மனைவியை  தனது இடுப்போடு அணைத்துக் கொண்டார் கதிரேசன்..,அவரால் அப்பொழுது அதை மட்டும் தான் செய்ய முடிந்தது.

தனது குழந்தையின் பசியை தேவி தீர்க்க கௌதமையும்,வேந்தனையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார் கதிரேசன்.

அனைவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வரும் பொழுது அவரது மகள் தனது குட்டிக் கால்களை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த கௌதமும்,வேந்தனும் ஆளுக்கு ஒருபுறம் நின்றுக் கொண்டனர்.அவர்களுக்குள் இப்பொழுதே அவள் யாருக்கு அதிக உரிமை என்ற பனிபோர் ஆரம்பித்திருந்தது.

(இந்த மாமா மச்சான் சண்டை மட்டும் முடியவே முடியாது போல..,அதுவும் இப்பவே வா.....)

சிறிது நேரம் அமைதியில் கழிய அன்னம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு,தனது மகளுக்கு ஒருமுத்ததைக் கொடுத்து விட்டு கிளம்ப ரெடியாக அதைப் பார்த்த கதிரேசன் தனது மனைவியிடம் கண்களால் எதுவோ பேச அதை புரிந்துக் கொண்ட தேவியும் தனது மகளை கைகளில் அள்ளினாள்.

“அக்கா..”என்று அவள் அழைக்க

“என்ன தேவி..” என்று  அன்னம் கேட்க

தேவியோ பதில் சொல்லாமல் குழந்தையை நீட்ட புரியாமல் அவளை பார்த்த அன்னத்திற்கு அவள் சொல்ல வருவது புரிவது போல் இருந்தது.

அவளது தயக்கத்தை உணர்ந்த கதிரேசன்,”அன்னம் வாங்கிக்க இவ இனிமே உன்னோட பொண்ணு..”என்று சொல்ல அன்னத்திற்கு  பேச்சே வரவில்லை.

“அக்கா இவ இனிமே உங்க பொறுப்பு இவளோட பசிய போக்குறது   மட்டும் தான்

என்னோட பொறுப்பு மத்தப்படி  இவளை முழுசா வளர்க்க போறது நீங்க தான்..”என்று தேவி கூற

அவள் கூறியதை கேட்ட அன்னத்தின் கண்களில் நீர் தான் வழிந்தது

“அக்கா தயங்காம என் பொண்ண  இல்ல உங்க பொண்ண வாங்கிக்கீங்க..,கௌதம் பிறந்தப்பவே நாங்க முடிவு பண்ணிட்டோம் அடுத்த குழந்தையை உங்க கிட்ட கொடுத்துடனும்னு..”என்று தேவி கூற

சிறிதும் தயங்காமல் அந்த பிஞ்சை தனது கைகளில் தாங்கிக் கொண்டாள் அன்னம்.

உடன்பிறந்த சகோதரி கூட செய்ய தயங்கும் ஒரு செயலை தேவி செய்கிறாள் அப்பொழுது அவள் தன் மீது  எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பால் அவளது குழந்தையை நான் நன்றாக வளர்க்க வேண்டும்..,அவளை எந்த துன்பமும் தீண்ட விட கூடாது என்று நினைத்துக்  கொண்டால் அன்னம்.

அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை அவளது அனைத்து துன்பங்களுக்கும் தான் தான் காரண கர்த்தாவாக  இருக்க போகிறோம் என்று...

சாந்தா தன் மருமகள்களது  ஒற்றுமையை ஊர் முழுவதும் கூறி பெருமை பேசிக் கொண்டிருந்தார்.

அன்னம் தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்த உடனே தேவியை தனது கணவனுக்கு மணமுடித்தது மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்கைக்கு தான் இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நினைத்தவர் தன் தந்தை தனக்கு என்று ஒதுக்கி தந்த வயல்வெளிகளை பார்த்துக் கொண்டு தனது அண்ணன் வீட்டிற்கு பக்கதிலேயே சிறு வீடு கட்டிக் கொண்டு குடியேறிவிட்டார்.

சந்தனப்பாண்டியனும்,கதிரேசனும் ஒரு காலத்தில் சிறந்த நண்பர்களாக இருந்தவர்கள் தான், தனது தங்கை அன்னத்தை விட்டு விட்டு தேவியை  தனது நண்பன் மணந்தது  அவருக்கு வருத்தத்தை தந்தது என்றால் தன் தங்கை இப்படி  தனியே வந்து தங்க தன் நண்பன் அனுமதித்தது அவருக்கு கதிரேசன் மேல் இருந்த கோபத்தை இன்னும் அதிகரித்தது.

தனது தங்கையை இப்படி தனிமரமாக நிறுத்திவிட்டானே என்ற எண்ணமே அவருக்கு  கதிரேசன் மேல் இருந்த நட்பை குழிதோண்டி புதைத்தது.

தனது தங்கை இப்படி தனியே வந்து தங்குவதற்கு காரணம் தேவி தான் என்று நினைத்தார் சந்தனபாண்டியன்.

Kathal kathalitha kathaliyai kathalikkum

அதனால் தேவி கௌதமை வயிற்றில் சுமந்திருந்த பொழுது அன்னம் அவளுக்கு பணிவிடைகளை செய்ய அதை பார்த்தவர் தன் தங்கையிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இதுவரை அவள் தேவியையும் அவளது குழந்தையை பார்த்துக் கொள்வதையும் விடவில்லை.

அதனால் அதை அப்படியே விடுவிட்டார் அவர்.தனது தங்கைக்கு அதன் முலம் சந்தோஷம் கிடைத்தால் அவள் செய்யட்டும் என்று விட்டுவிட்டார் அவர்.

அன்னம் மருத்துவமனையிலிருந்து வந்தபொழுது சாந்தா பரப்பிய செய்தி ஊர் எல்லாம் பரவி சந்தனபாண்டியனையும்,அவரது அன்னையையும் அடைந்திருந்தது.

(அது  தெரியாம இருந்தாதாங்க அதிசயம்..,இப்படி செய்தியே கரெக்ட்டா டெலிவரி பண்றதுல வாட்ஸ்அப் விட நம்ப ஊர் பாட்டிங்க செம பாஸ்ட்..)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.