(Reading time: 13 - 26 minutes)

சிரிப்புடன் காரை எடுத்தவன், காரை ஓட்ட ஆரம்பித்தான்.

வீட்டருகே இருந்த பார்க் முன்னாடி காரை நிறுத்தியவன் "இறங்கு கலை", என்றான்.

"வீட்டுக்கு போகலையா அத்தான்?"

"மணி எட்டு தான ஆகுது? ஒன்பது  வரைக்கும் பார்க் இருக்கும். உனக்கு தான் ரொம்ப படிக்க வேண்டியது இல்லையே. கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்"

அரை மனதுடன் சரி என்றாள் மதி.

"எதுக்கு கலை, என்கூட வரது பிடிக்கலையா? உன் கூட பேசலாம்னு நினைச்சேன்"

"அப்படி எல்லாம் இல்லை அத்தான். நீங்க இங்க நிப்பாட்டின உடனே எதோ பேச போறீங்கன்னு தான் நினைச்சேன். அதை நம்ம வீட்டு மொட்டை மாடில பேசுனா என்னனு தோணுச்சு. அதனால தான் யோசிச்சேன்"

"நல்ல ஐடியா தான். ஆனா எப்படி நான் பேச போறேன்னு யோசிச்ச?"

"பின்ன இந்த வயசில் நம்ம பார்க் வந்து விளையாடவா போறோம்"

"சரி தான். ஆனா மொட்டை மாடில பேசணும்னு நினைச்ச தான கலை? அதை என்கிட்ட சொல்லலாம்ல? ஏன் மனசுக்குள்ளே வச்சிருக்க?"

"நீங்க எதாவது நினைப்பீங்களோனு தயக்கமா இருந்தது"

"இது தான் வேண்டாம்னு சொன்னேன். நீ என்கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லலாம். கேக்கலாம் சரியா?"

"ம்ம்"

"சரி வா. நம்ம வீட்டுக்கே போகலாம்", என்று காரை கிளப்பி விட்டான்.

வீட்டுக்கு போனதும் அவன் காரை உள்ளே விட, கேட்டை திறந்து வைத்தவள் அவன் காரை உள்ளே பார்க் செய்யும் போது, கேட்டை பூட்டை  வைத்து பூட்டி விட்டு உள்ளே சென்றாள்.

அவனும் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றான்.

தன்னுடைய அறையில் போய் நின்றவள் தயக்கமாய் அவனை பார்த்தாள்.

"பேசணும்னு தான் சொன்னேன். உடனே பேசணும்னு ஒன்னும் இல்லை. நீ டிரஸ் மாத்திட்டு வா", என்றான் சூர்யா.

அவனை பார்த்து சிரித்து விட்டு தன்னுடைய சுடிதாரை எடுத்தாள் கலைமதி.

"இந்த சுடிதார் மாத்துறதுக்கு நீ மாத்தாமலே இருக்கலாம் கலை. நயிட்டி எதாவது போட மாட்டியா? ஆனா உன்கிட்டே இருக்கிறதை பாத்தேனே", என்றான் சூர்யா.

"என்ன இதை பத்தி பேசுறான்?", என்று நினைத்து கொண்டு "அது அது..", என்று இழுத்தாள் மதி.

அவள் தயக்கத்தை ஊகித்தவன் "ஏன் கலை? என்னை பாத்தா உனக்கு தப்பானவனா தெரியுதா? எனக்கு பயந்துட்டு தான் சுடிதார் போடுறியா?", என்று வறண்ட குரலில் கேட்டான். 

"சித்திக்கு நான் நைட்டி போட்டா பிடிக்காது", என்று வேகமாக ஆரம்பித்தவள் குரல் கம்ம "நயிட்டி போட்டா.. போட்டா.... எவனை மயக்க போட்டுருக்கேன்னு கேப்பாங்க. அதுல இருந்து வீட்டு ஆள் முன்னாடி போட மாட்டேன். ஹாஸ்டலை மட்டும் தான்", என்று சொன்னாள்.

அவள் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் "அத்தை இவ்வளவு மோசமா பேசுவாங்கன்னு எனக்கு தெரியாது கலை. ஆனா இது உன் வீடு. யாரை பத்தியும் யோசிக்க வேண்டாம். உனக்கு பிடிச்சதை செய்யலாம். ஒரு வேளை என்னை நினைச்சு தயங்குனா வேண்டாம்", என்றான்.

"அப்படி எல்லாம் இல்லை. நயிட்டியே போடுறேன்", என்று முகம் சிவக்க சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். 

சிறு சிரிப்பு சிரித்து விட்டு வெளியே வந்தான்.

அவள் குளித்து முடித்து வந்ததும் உள்ளே போனான் சூர்யா.

"ஐயோ குளிச்சிட்டு துண்டோடு வருவான். அதுக்குள்ள ஓடிறனும்", என்று நினைத்து மொட்டை மாடிக்கு சென்று அவனுக்காக காத்திருந்தாள் கலைமதி.

சிறிது நேரம் களைத்து அவனுடைய காலடி ஓசை கேட்டது. திரும்பி பார்த்தவள் அதிர்ந்தே போனாள்.

அங்கே முக்கா பேண்ட்டும், உள் பனியனும் அணிந்து நடந்து வந்தான் சூர்யா.

கவர்ச்சியாக அவள் கண்களுக்கு தெரிந்தான் சூர்யா.

பெண்கள் மட்டும் அரை குறையாக உடலை காட்டினாள் மட்டும் தான் கவர்ச்சி வருமா? ஆண்களும் அப்படி இருந்தால் பெண்கள் மனதிலும் சலனம் வர தான் செய்யும்.

"இவன் ஒரு சட்டை போட்டுட்டு வந்தா நல்லா இருந்திருக்கும்", என்று நினைத்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

அந்த இருளில் அவள் முக சிவப்பு அவன் கண்களுக்கு தெரியவே இல்லை.

தித்திப்பு தொடரும்......

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1169}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.