(Reading time: 10 - 19 minutes)

எனக்கென்னமோ மனசுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு நீ பரத்தை ரொம்ப சாதாரணமா எடை போடுறே ? அவன் துரோகத்தை தாங்கமாட்டான். ஜாக்கிரதை பரத்தோட பழைய கம்மெனி ஜியெம் அவனை ஏமாத்திட்டாருன்னு கேள்விப்பட்டதும், அவனோட பண்ணைவீட்டுலே வைச்சி உரிச்சி எடுத்துட்டான் இப்போ அவர் குடும்பத்தோட களி திண்ணுகிட்டு இருக்கிறாரு. அவன் வஞ்சம் வைச்சா தாங்கமாட்டோம் சத்யா எதற்கும் பரத் விஷயத்திலே கொஞ்சம் ஜாக்கிரதையா இரு....

கூட்டாளியின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் சத்யா. 

பரத்தை நான் பார்த்துக்கிறேன் இன்னைக்கு சாயங்காலம் நான் நிக்கோலஸ்ஸை சந்திக்க ஏற்பாடு செய் என்று பணித்துவிட்டு வேறாரு அறைக்கு நகர்ந்தான்.

இத்தனை நேரம் சத்யா பேசியதையெல்லாம் மறைமுகமாக பதிவுசெய்த சந்திரன் அதை பத்திரப்படுத்தினான். உண்மையான நண்பனுக்கே இவன் இத்தனை துரோகம் செய்கிறான் என்றால் நாளைக்கு நம்மை கொல்லவும் தயங்கமாட்டான். இவனோட நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமா கண்காணிச்சு நாளைக்கு ஏதாவது பெரிய சிக்கல் வந்தா சத்யாவை பரத்திடம் மாட்டிவைக்க தான் தப்பிக்க ஒரு ருசுவா இந்த ரெக்கார்டிங் இருக்கும் என்பது அவன் எண்ணம் இதையெல்லாம் அறியாமல் சத்யா பரத்திடம் அந்தமான் இறங்கியதைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தான்

யார் போன்லே ?

பிரியன் தான் கொண்டு வந்த சிரஞ்சிகளில் மருந்தை இன்ஜெக்ட் செய்து விட்டு, மேலும் இரண்டு குப்பிகளையும் மறுநாள் டிரக்கிங் போக தேவையானவற்றையும் ஒவ்வொருவருக்கும் பேக் செய்து கொண்டு இருந்தான் போனில் பேசிவிட்டு வந்த பரத் முகத்தின் மலர்ச்சியைக் கண்டு கேள்வியெழுப்பினான்

என் நண்பன் சத்யா,,,,, இராமேஸ்வரத்தில் நம்முடைய செயற்கை பவளத்திட்டுக்கள் எத்தனை செண்டிமீட்டர்கள் வளர்ந்திருக்கிறது என்றும், இப்போது உள்ள நிலைமை கூடவே அவனின் ஆராய்ச்சிக்கு நான் உதவி செய்வதற்கு நன்றி என பேசிக்கொண்டே இருந்தான். அவன் வேலையும் முடியப்போகுதாம் அடுத்தாக ஆஸ்திரேலியா அல்லது மன்னார் வளைகுடா பகுதிகளில் செல்லலாம் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்துவிட்டு அடுத்த பத்து நாட்களுக்குள் வந்துவிடுவதாக சொல்லியிருக்கிறான் அதுவரையில் பிசினஸை போட்டு இருக்க முடியுமா அல்லது வேறு யாரையாவது உதவிக்கு அனுப்ப வேண்டுமா என்றெல்லாம் கேள்வியெழுப்பினான். எனக்குத்தான் உன் உதவி இருக்கிறதே பிரியன் வேறென்ன வேண்டும். 

என்மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி ஸார். இதோ நாளைக்கு டிரக்கிங் தேவையான அனைத்தையும் தயார் செய்துவிட்டேன் யார் யாருக்கு என்ன தந்து விடுகிறோம் என்று ஒரு குறிப்பு எடுத்துவிட்டால் வேலை முடிந்தது. செயற்கை மணல் திட்டுக்கள் அமைக்க எந்த இடம் வசதிப்படும் என்பதை சத்யா குறிப்பிட்டு இருக்கிறாரா ? 

ம்...போர்ட் பிளேயர் அங்கேதான் நாம் தங்கப்போகிறோம் மணல் திட்டுக்கள் அமைக்கும் இடம் ராஸ்தீவு

ராஸ் தீவு முன்னொரு காலத்தில் அந்தமானின் தலைமையகமாக இருந்தது நிலநடுக்கத்தால் சிதிலமடைந்து இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அங்கேவா நாம் செயற்கை மணற் திட்டுக்களை அமைக்கப்போகிறோம்.

ஒவ்வொரு அழிவும் மற்றொரு ஆரம்பம் தானே பிரியன் இயற்கை அங்கே மணல் திட்டுக்கள் அமைக்க நமக்கு தேவையான சீதோஷ்ண நிலையை உருவாக்கிக்கொடுத்து இருக்கிறது. குறிப்புகள் அவரவர்களின் பொருட்களை காலையில் போர்ட் பிளேயரில் இறங்கியதும் கொடுத்துவிடுங்கள். நாம் டிரக்கிங் ஆரம்பிப்பதற்குள் ராஸ் தீவுதனை ஒரு பார்வையிட்டு வந்துவிடலாம். அப்போதுதான் வேலையில் நேரத் தாமதம் இருக்காது. அதற்கு மேல் பேச ஏதும் தேவையில்லை என்பதைப்போல, பரத் நகர்ந்தான். 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

த்மினி கண்விழித்து பக்கத்து படுக்கையைப் பார்த்தாள் உத்ராவை அங்கு காணவில்லை, எங்கே போயிருப்பாள் ? முகம் கழுவி இலேசான ஒப்பனையுடன் வெளியே வர அடுத்த தளத்தில் இருந்து சில பெண்களுடன் உத்ரா இறங்கிவந்து கொண்டு இருந்தாள்.

என்ன உத்ரா இத்தனை சீக்கிரம் எங்கே போயிட்டே ?

மேல் படிந்த கையை இலேசாக அகற்றியபடியே,

என் குடும்பக் கஷ்டத்திற்காகத்தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். அதில் விட்டு வேறெதிலும் கவனம் செலுத்திடக் கூடாது இல்லையா ? வாங்கிய தொகைக்கு கொஞ்சமேனும் வேலை செய்யவேண்டுமே என்றுதான் பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தேன்.

உத்ரா பத்மினியினைத் தவிர்ப்பது பத்மினிக்கும் புரிந்துதான் போயிருந்தது. அதற்கு காரணமும் அவள் அறியாமல் இல்லை நேற்று பரத்தும் அவளும் இருந்த நிலை, மேல்தளத்தில் தன்னைத் தேடி வந்த உத்ரா பரத்தையும் தன்னையும் அப்படியொரு கோணத்தில் பார்த்ததில் நிலைகுலைந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து தான் இருந்தாள். சாதாரண பழக்கத்தை கூட உத்ரா இப்படித் தவறாக எண்ணிக்கொண்டாளே என்று வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மேற்கொண்டு பேசத் துவங்கினாள். நட்பு பாராட்ட உத்ரா தயாராக இல்லை என்பதை அவளின் ஒவ்வொரு செய்கையும் காட்டிக்கொண்டு இருந்தது

போர்ட் பிளேயரில் இறங்கும் வரையில் பத்மினி உத்ராவிற்கும் இடையே ஒரு கண்ணாமூச்சு ஆட்டம் நடந்துகொண்டு இருந்தது.

போர்ட் பிளேயரில் தங்கும் விடுதியில் பத்மினியிடம் தான் தங்கப்போவதில்லை என்பதை உத்ரா அறிவித்ததும் தங்களின் நட்பில் ஏற்பட்ட விரிசலை முழுமையாய் உணர்ந்தாள் பத்மினி !?

தொடரும்...

Episode # 08

Episode # 10

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.