(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 08 - லதா சரவணன்

kadhal ilavarasi

ந்த இரவு வெகு நீண்டு போய் இருந்தது , பரத் சொன்னதைப் போலவே, பிரியனை அறிமுகப்படுத்தினான் அந்த குழுவிற்கு நான்கு தலைமைகள் என்று நிர்மாணிக்கப்பட்டது. பிரியன், உத்ரா, பத்மினி, அந்த தலைமைப் பொறுப்பில் பரத்தும் ஒருவன், நாளை மறுநாள் அந்தமான் தீவுகளில் இறங்கப்போகிறோம். நம்முடைய குழுக்களுக்கு நம்முடைய செயல்பாடுகளை தெளிவுபடுத்தத்தான் இன்னைக்கு இந்த மீட்டிங். பிளாஸ்டிக்கின் கழிவுகள், நீர் மாசுக் கட்டுப்பாடு, வரப்பிரசாதமாய் அமைந்த மரங்களை சுயநலத்திற்காக வெட்டுவது, வாகனங்களின் புகை, வீட்டுக்கு வீடு ஏசி அதனால ஏற்படும் வெப்பத்தையும் இவை அத்தனையும் இயற்கைதான் தாங்கியாகணும் இதெல்லாம் கண்ணுக்கு தெரிந்து நடக்கிற பிரச்சனைகள்

பவளப்பாறைகளை சேதப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை ஒரு வகை நட்சத்திர மீன்கள் அவைகளை அழிப்பதுதான் நமது முக்கிய நோக்கம். நமது வளங்களை நாமே தெரியாமல் அழித்துக் கொண்டு இருக்கிறோம். இளநீரின் பயன்கள் அறிந்திருப்போம் ஆனால் ஸ்டைலுக்காக கோக்கும் பெப்ஸியும் குடிக்க நம்மை பழக்கிவிட்டார்களே, சுண்ணாம்பிற்காக அநேகம் பவளப்பாறைகளை வெட்டி அவற்றை அரைத்து உபயோகிக்கிறார்கள். காலையில் நாம் பல்தேய்க்கும் பிரஷ்ஷில் இருந்து நாம் உடுக்கும் உடை உண்ணும் உணவு, படுக்கும் அறை என அனைத்துமே இப்போது வியாபார நோக்கோடு மாறி வருகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாம நம்மோட இயற்கையைக் கொள்ளையடிக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு, அதிலே ஒண்ணுதான் இந்த பவளப்பாறைகள் அழிப்பு.

ஒருவகையில் இயற்கை நம்மை நம்பாததைப் போல, சென்ற வருடம் மன்னார் வளைகுடா பகுதிகளில் இருள் சூழந்த ஆழ்கடலின் அடியில் ஒளிரும் பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பவளங்கள் தனக்குத் தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை, சூரிய ஒளியின் உதவியால் ஆல்காக்கள் தங்கள் பச்சையத்தின் உதவியால் தான் பவளங்களுக்குத் தேவையான குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. ஆழ்கடலில் சூரிய ஒளி படமுடியாத இடங்களில் வளர்ந்து வரும் ஒளிரும் பவளப்பாறைகள் தனக்குத் தேவையான உணவை தாமே தயாரித்துக் தன்னைத்தானே உயிர்ப்பித்து கொள்வது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.

தி கிரேட் பேரியர் ரீப் பவளப் பாறைகளை ப்ளூ ரிங் ஆக்டோபஸ் போன்ற நட்சத்திர வகை மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. சுற்றுலாப் பயணிகள், மீன்பிடிக்கப் பயன்படும் தடைசெய்யப்பட்ட வலைகள், சமூக விரோதமாக வெட்டியெடுக்கப்படும் முறைகளை தடைசெய்த அரசு இப்போது அடுத்த கட்ட முயற்சியாக கடலுக்குள்ளேயே தனக்கே வாழ்விடமாக இருக்கும் பவளத்திற்கு வில்லனாக முளைத்திருக்கும் நட்சத்திர மீன்களை கொள்வதற்கான வழிமுறைகளை ஆஸ்திரேலியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மரைன் சயின்ஸ்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

புளிக்காடியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் நாம் வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தும் இவற்றின் அமிலம் நட்சத்திர மீன்களை கொல்ல பயன்படுகிறது. அந்த நிறுவனம் புளிக்காடியை சிரம் போன்ற திரவ நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த நட்சத்திர மீன்களின் உடல்களில் மருந்தை செலுத்திவிட்டால் அந்த கொடிய விஷமுள்ள மீன்களை நாம் அழிக்கலாம். ப்ளூ ரிங் ஆக்டோபஸ் உலகிலேயே ஆபத்தான நச்சுத்தன்மையுள்ள மீனின் வகையைச் சேர்ந்தது. தன் விஷத்தன்மையின் மூலம் ஒரே நேரத்தில் 26 பேர்களை சாகடிக்கும் மஞ்சள் நிறத்தில் கருப்பும் நீலமும் கலந்த திட்டுக்களை உடையதால் இவை பவளப்பாறைகளின் மேல் படர்ந்திருக்கும் போது அதைப் போலவே கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். அங்குதான் நமது சாமர்த்தியம் உள்ளது. நட்சத்திர மீன்களின் உடல் முழுவதும் தண்ணீர் என்பதால் புளிக்காடியின் அமிலத்தன்மையை அவற்றால் தாங்க முடியாது. நாம் பவளப்பாறைகளைக் காப்பாற்றலாம். பிரியனின் அழகான உச்சரிப்பும் தெளிவாக புரிய வைத்த விதமும் அற்புதமாய் இருந்தது. அடுத்தடுத்த பேச்சுகளில் குழுவினருடன் எப்படி பயணிப்பது எந்த அளவிற்கு அமிலத்தைப் பயன்படுத்துவது இவைபோன்ற விஷயங்கள் எல்லாம் பேசி அலசப்பட்டதும், சிறிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் பரத். ஐந்தே பேர் கொண்ட மீட்டிங் என்பதால் பரத்திடம் இருந்து சற்று தள்ளிப் போக முடியாதபடி உத்ரா அருகிலேயே இருக்க நேர்ந்தது. அப்படியே அவள் பத்மினியிடம் பேச சென்றாலும், பரத் ஏதாவது கேள்வியெழுப்பி உத்ராவை தன் பக்கத்திலேயே நிறுத்திவைத்தும் கொண்டான்.

உணவை ருசிக்கையில் அதன் தயாரிப்புவிதம் நேர்த்தி மற்றும் சென்ற முறை இதே போல் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு மற்றொரு தீவிற்கு சென்றது என அவன் பேசிக்கொண்டே இருக்கையில் உத்ராவிற்கும் நேரம் போனதே தெரியவில்லை, இயல்பிலேயே அதிகம் பேசாத பிரியன் தன் உணவுத் தட்டுடன் மேலாளருடன் கலந்து கொள்ள பத்மினி தனித்து விடப்பட்டாள். எல்லை மீறிவிட்ட பொறுமையுடன் உத்ரா நான் அறைக்குச் செல்கிறேன் நீ அப்புறமாக வா என்று சொல்ல,

பரத் உத்ராவின் பேச்சும் தடைபட்டது. அப்போ நானும் வர்றேன் ஸார் நாளை மதியம் நாம் அந்தமான் தீவுகளில் இறங்கப்போகிறோம் இல்லையா ?! அதனால் நான் மற்றவர்களிடம் இன்றைக்கு பேசிய விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று விடைபெற்றுக் கொள்ள பரத் தலையசைத்தாலும், பத்மினியை பின்தொடர்ந்து சென்ற உத்ராவின் கைகளைப் பற்றினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.