பரத்தின் பார்வை வெகு கூர்மையாய் ஒருமுறை உத்ராவிடம் சென்று பின் பத்மினியிடம் மீண்டது. மிஸ்.பத்மினி அவர்களுக்குள் பேச எத்தனையோ இருக்கும் நாம் ஏன் தடையாய் வாருங்களேன் மூன்றாவது தளத்தில் இருந்து கடலைப் பார்த்தால் நன்றாக இருக்கும் அங்கேயே நைட் டின்னர் ஏற்பாடு செய்திருக்கிறேன் பிரியனைப் போல சுவாரஸ்யமாய் இல்லையென்றாலும் போராடிக்காமல் பேசுவேன் போகலாமா ? அல்லது என்னுடன் வருவதற்கு உங்களுக்கும் ஆட்சேபணையா அல்லது முதலில் மறுத்துவிட்டு வேறு யாருடனாவது ? அதாவது உத்ராவைப் போல....
எனக்கென்ன ஆட்சேபணை வாருங்கள் ? தோழியைப் பார்த்து கண்ணடித்துவிட்டு பரத்துடன் செல்ல அவன் பத்மினியின் இடையைப் பற்றி உத்ராவின் பக்கம் பார்வையைத் திருப்பாமலேயே சென்றான். உத்ரா அந்தப்பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள் பரத் பெண்கள் விஷயத்தில் அத்தனை நல்லவன் இல்லை. சென்ற முறை இவரால் ஒரு பெண் இறந்து போயிருக்கிறாள் நீங்கள் வயதுபெண் விளக்கமாய் சொல்லத் தேவையிருக்காது. மதியம் பரத் உங்களுடன் அதிகம் பேசிக்கொண்டு இருந்தபோதே உங்களை எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் இப்போது உங்களைச் சந்திக்கவே வந்தேன். பரத்திடம் நீங்களும் சற்று தள்ளியே இருங்கள் ஆனால் நான் எதையும் சொன்னேன் என்று தெரியவேண்டாம் இன்னமும் என்மேல் நம்பிக்கை இல்லையெனில் இறந்த போன அந்தபெண்ணைப் பற்றியத் தகவல்களை நாளை தருகிறேன். என்று பரத் அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பிவிட்டான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
பரத்தின் நடவடிக்கைகள் தெரிந்தபோதும் அவனால் ஒரு பெண் இறந்திருக்க முடியுமா ஒருவேளை அவள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாய் இருந்திருக்கலாம் இவனின் காதல் நாடகத்தில் தன்னையும் அறியாமல் இழந்திட்ட மானத்திற்காக இறந்திருப்பாளோ ? கடவுளே அப்படியானால் மதியம் எனக்கு வலை விரித்ததைப் போல நான் சிக்கவில்லை என்றதும் பத்மினியை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டானா ? இது ஏதும் அறியாமல் அந்தப் பெண் காதல் அதுயிதுன்னு பேத்திக்கொண்டு இருக்கிறாளே என்ற பயத்தில் பத்மினியை அவனிடம் இருந்து காப்பாற்ற நினைத்து மூன்றாவது தளத்திற்கு ஓடினாள் உத்ரா. ஆனால் அங்கே பத்மினியின் கை வளையத்திற்குள் பரத்தைக் கண்டதும் அளவுக்கு மிஞ்சிய அறுவெறுப்பை அந்தக் காட்சி ஏற்படுத்த சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு இறங்கி வந்துவிட்டாள் உத்ரா.
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.