(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 03 - அஸ்ரிதா ஸ்ரீ

Partha muthal naale

நம்ம அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு நடுவுல நமக்கு அன்பானவங்களுக்கு அப்போப்போ ஆனந்த அதிர்ச்சி குடுத்து சந்தோஷ படுத்தி பாத்தோம் என்றால் நம்ம வாழ்க்கை இன்னும் அழகாகும்.அது ஒரு எதிர்பாராத வருகையா இருக்கலாம்.ஒரு குட்டி கிப்ட் ஆ இருக்கலாம். ஆசையா செய்யுற சமையலா இருக்கலாம். பூவா இருக்கலாம். புடிச்ச புக் ஆ இருக்கலாம். எதுவா வேணும் நாளும் இருக்கலாம்.குடுத்து பாருங்க கண்டிப்பா சந்தோஷம் கிடைக்கும்.அந்த சந்தோஷம் குடுக்குற பொருள் ல ஒளிஞ்சு இருக்கல.குடுக்குறவங்க மனசுலயும் வாங்குறவங்க மனசுலயும் ஒளிஞ்சு இருக்கும்.

னவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் சஹிஷா உன் மொபைல் அடிக்குது என்று அவளிடம் கூறினான் அவளின் அலுவலக நண்பன் பிரதீப்.

பிரேக் டைம் ல காபி கூட சேர்ந்து குடிக்க முடியாது என்று அவள் தோழி சவி அலுத்து கொண்டாள்.

இரு டி யாருனு பாத்துட்டு வரேன் 2 மின்ஸ்.

தீப்(theif) திரையில் மின்னியது .சிரித்தவாறே ஹெலோ என்றாள்

சஹீஈஈஈ

ஏன் ஏன் என்னாச்சு ச்சு

போ

என்ன போ

காமெடி பண்ணாத ஹைபி(hibiscus short form).

இப்போ என்னதான் வேணும் இதோட 1 மணி நேரத்துல 14 கால் பண்ணியாச்சு.

 எனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டேன் 4 நாளைக்கு முன்னாடியே.

இதோட நாலாயிரம் தடவ நீங்க கேட்டுட்டீங்க சரண் என்று சிரித்தாள்.

ப்ளீஸ் சஹி ஒரு தடவை மீட் பண்ணிக்கலாம்.ஜஸ்ட் 30 மின்ஸ்.

நோ வே சரண்.

இதெல்லாம் அநியாயம் நமக்கு எங்கேஜ்மெண்ட் ஆக போகுது.நீ நேர்ல பாக்க கூட விட மாட்டிக்குற.

எங்கேஜ்மெண்ட் முடியட்டும் அது வரைக்கும் நோ மீட்டிங்.

போ டி என்று வைத்து விட்டான்.

சஹிக்கு சிரிப்பு தான் வந்தது. அவளுக்கு தெரியும் இன்னும் கொஞ்ச நேரம் கூட அவனின் கோபம் இருக்காதென்று.

அவளுக்கும் அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது.பெண்ணுக்கே உண்டான உணர்வான வெக்கம் வேறு தடுத்தது.தனக்குள்ளே சிரித்து கொண்டு வந்தவளை பார்த்து லூசா டி நீ தனியா சிரிக்குற என்று அவள் தோழி சவி கேட்டாள். இவள் இப்படி தான் இருக்கா 4 டேஸ் ஆ என்று மது பதில் அளித்தாள்.

ஹேய் நியூஸ் தெரியுமா. லாஸ்ட் ரிலீஸ் சக்ஸஸ் செலெப்ரஷன் திஸ் டைம் அட் ஒ எம் ஆர் ரிசார்ட் ல. வாவ் என்று நண்பர்கள் அந்த டாபிக் பத்தி பேச ஆரம்பித்தனர். நல்ல வேலை நம்மள கண்டுக்கல. இப்படி நோட்டீஸ் பண்ற அளவுக்கா தெரியுது என்று தன் உணர்வுகளை கட்டுக்குள் அடக்கி வேலையை கவனிக்க சென்றாள்.

6 மணி ஆகுது. கால் கட் பண்ணி 2 ஹௌர்ஸ் ஆச்சு. ரெம்ப கோவம் போல. ச்சே அவரு பாக்கணும்னு தான கேட்டாரு. பேசாம சரி சொல்லிருக்கலாம்.நம்மளே கூப்பிடுவோம் சமாதானம் பண்ணுவோம்.முடிஞ்சா வர சொல்லுவோம் என்று சிந்தித்த வாறே டயல் செய்தாள்.

 எங்கே 3 முறை அழைத்தாகி விட்டது. சரண் ரெம்ப கோவிச்சுகிட்டாரோ.சரி ஒரு மெசேஜ் அனுப்புவோம் நு அனுப்பினாள்.ம்ம்ஹ்ம் பதில் இல்லை.மனதிற்கு என்னவோ போல் இருந்தது. கை பையை எடுத்து கிளம்பி விட்டாள்.

ஹே சஹி டைம் 6.30 தான அதுக்குள்ள கிளம்பிட்ட என்றவாறு அவளின் ரூம் மேட் லக்ஷ்மி வந்தாள்.

இல்லப்பா மெயில் பண்ணிட்டேன் ஹெல்த் இஸ்சு அதான் ரூம் போறேன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 என்ன டி என்னாச்சு

ஒன்னும் இல்ல டியர் லைட்டா ஹெட் ஏக்.

தனியா போய்டுவியா இல்லை நாணும் வரட்டுமா.

ஹோய் ஒன்னும் இல்ல நான் அப்படியே மெதுவா நடந்து போய்டுவேன். நத்திங் சீரியஸ் என்று சஹி புன்னகைத்தாள்.

சரி பாத்து போ சாப்பிட்டு தூங்கு நான் வரதுக்கு 10 ஆகும் பை சஹி பை பை லச்சு.

அலுவலகம் விட்டு வெளியே வந்தவள் கொஞ்ச நேரம் கோவில் போயிட்டு போவோம்னு பக்கத்தில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தாள்.அவன் கோவம் தன்னை இவ்ளோ பாதிக்குது.எதுவுமே ஓட மாட்டிக்குது.இன்னொரு டைம் ட்ரை பன்னுவோம் என்று டயல் செய்தாள்.

ஹெலோ சரண்

மறு முனையில் மௌனம்

ப்ளீஸ் சரண் பேசுங்க என்னவோ போல இருக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.