(Reading time: 6 - 12 minutes)

மௌனம்

சரி இப்போ நான் மீட் பண்ணலாம்னு சொன்னா பேசுவீங்க தான

மாட்டேன் சஹி

 என்னது மாட்டிங்களா பின்ன?

 ம்ம்ம்ம் பேச மாட்டேன் இப்படி உன் முன்னாடி வந்து நிப்பேன் இல்லனா இப்படி பக்கத்துல உக்காருவேன் என்று அவள் எதிரில் அருகில் அமர்ந்தான் அவளது சரண்.

ஹே சரண்ண்ன் .

 ம்ம்ம் உன் சரணே தான்.. இப்படி கண்களை விரித்தே வைத்திருந்தால் என்ன செய்ய நான்.

 நீங்களா நிஜமாவே

ஹா ஹா ஹைபி பாக்கணும் போல இருந்தது.உங்கிட்ட கேட்டு நீ ரூல்ஸ் போட்டு நான் பீல் பண்ணி இதெல்லாம் தேவையான்னு யோசிச்சேன்.கிளம்பிட்டேன் இப்போ உன் கண்ணுக்குள்ளே நிக்குறேனு அவள் கண்களை பாத்து சிரித்தான்.

எனக்கு எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணணு தெரில. உங்கள வர வேண்டாம்னு சொல்லிட்டு ரெம்ப பீல் பண்ணுனேன்.அதன் உடனே கிளம்பிட்டேன்.மனசுக்கு என்னவோ போல இருந்தது.நீங்க கால் வேற எடுக்கலையா ரெம்பவே கோவம் போலன்னு நினச்சேன்.அதான் இங்கே வந்தேன் சரண்.

சரவணன் சொல்லவே முடியாத பரவசத்தில் இருந்தான். தன் மௌனம் கோவம் தன்னவளை இவ்ளோ பாதிக்குதா?

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?

ஹைபி தாம்பரமும் சிறுசேரியும் கூப்பிடற டிஸ்டன்ஸ் லயா இருக்கு. பைக்ல வர வேண்டாமா அதான் கால் எடுக்கல.சரி வா பர்ஸ்ட் டைம் மீட் பண்றோம் அதுவும் கோவில் ல சாமியெல்லாம் வைட்டிங்.

 சின்னதாக முறுவலித்தவள் வாங்க போய் சாமி கும்பிடுவோம்.

கடவுளே உனக்கு நன்றி.எனக்காக பிறந்த என் சரணை என் கண்ணு முன்னாடி காட்டுனதுக்கு.இப்போ உன் முன்னாடி சேர்ந்து நிக்குற மாதிரி காலம் பூராம் எல்லா விஷயத்துலயும் சேர்ந்தே இருக்கனும்.

சாமி இன்னைக்கு எவ்ளோ சந்தோசமா என் சஹி பக்கத்துல நிக்குறேனோ அதே மாதிரி அவளுக்கு எப்போவும் துணையா இதே சந்தோஷத்தோட நிக்கணும்.

ம்ம்ம் போலாமா சரண்.

போலாமே எங்க ஹைபி.

ம்ம்ம்ம்ம்ம் ஹாஸ்டெலுக்கு ஹா ஹா ஹா..

சரி சஹி சாப்பிட்டு தூங்கு.ஹாப்பி ட்ரீம்ஸ். பாத்து போய்ட்டு வாங்க சரண்.

சரவணன் அவனது வீட்டிற்குள் நுழையவும் சஹி கால் பண்ணவும் சரியாக இருந்தது.

வந்துட்டேன் சஹி .

சரி சரண் சாப்பிடுங்க பை.

 என்ன டா உன் ஆள பாத்துட்டியா.

.ம்ம்ம் பாத்துட்டேன் குமார்.

என்ன சொன்னாங்க சிஸ்டர்.

அவளுக்கும் மூட் அவுட் தான் வேண்டாம்னு சொல்லிட்டு கோவில் ல பீல் பன்னிட்டு இருந்தா நான் போனதும் சப்ரைஸ் ஆகிட்டா.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வெரி குட் வெரி குட்

என்ன வெரி குட் சாப்பாடு எடுத்து வை டா.

டேய் சிஸ்டர் கூட சாப்பிட்டு வரலையா.

எங்க ஹாஸ்டல் ல சீக்கரம் போனும் அது இதுனு சொல்லிட்டா.இப்போ தான மீட் பன்னிருக்கோம் எடுத்த உடனே எல்லாமே பண்ண முடியாதுல. என்ன ஏத்துக்க அவளுக்கு மனசளவுல தயக்கம் இல்லை.பட் அவளுக்கு பேசுறது பழகுறதுக்கெல்லாம் டைம் குடுக்குறதுல தப்பில்லையே மச்சி.

மாமா பின்னிட்ட போ..நண்பேன்டா

பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே

தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம் தொலைந்தது உண்மையே

லவ் யு சரண் குட் நைட் என்று சரவணனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு உறங்க சென்றாள்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1208} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.