(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 02 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai

 

னடா

அலைபேசியில் வந்திருந்த செய்தியை படித்த விபாகரன் கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் இருந்தான். அவன் முன்னே மட்டும் சாத்விக் இருந்திருந்தால் அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரிந்திருக்காது. இப்படி ஒரு திருமண அறிவிப்பை எப்படி அவன் கொடுக்கலாம்..  அப்படியென்றால் யாதவியின் நிலை.. அவனை நம்பி தானே அவள் சென்றாள். இப்போது அவள் எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. ஆனால் இவனோ இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்று அறிவிப்பு கொடுக்கிறான்.

தான் மட்டும் முன்பு போல் இருந்திருந்தால் நேருக்கு நேராக நின்று சாத்விக்கின் சட்டையை பிடித்து “யாதவி எங்கே?” என்று  கேள்விக் கேட்டிருப்பான். ஆனால் இப்போது சாத்விக்கை போலவே இவனின் ஒவ்வொரு செய்கையையும் ஊடகங்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் வியாபார விஷயமாக இவன் இருப்பது வேறொரு நாட்டில், அதேபோல் படப்பிடிப்பு விஷயமாக சாத்விக் இருப்பது வேறொரு நாடு.. ஆனால் யாதவி, அவள் தான் எங்கே இருக்கிறாள்? என்று தெரியவில்லை. சாத்விக்கின் திருமண அறிவிப்பு யாதவியை வெளியே கொண்டு வருமா? சிந்தித்தப்படி அவன் அமர்ந்திருந்த போது அவனது அலைபேசி ஒலி எழுப்பியது. யார் அழைத்தது என்று பார்த்தவன், அதில் தெரிந்த பெயரை பார்த்து அழைப்பை ஏற்றிருந்தான்.

“விபாகரன் சார்..”

“சொல்லுங்க பாலாஜி.. நான் தான் பேசறேன்..”

“சார் இன்னைக்கு தமிழ்நாட்டுல லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னு தெரியுமா?”

“இப்போ அதை தான் படிச்சிட்டு இருந்தேன்.. சாத்விக்கிற்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது அதானே..”

“ஆமாம் சார்.. சாத்விக்கோட கல்யாண செய்தி யாதவியை வெளிய கொண்டு வரலாம் இல்ல.. நாம இன்னும் சாத்விக்கை நல்லா வாட்ச் பண்ணனும் சார்..”

“நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன் பாலாஜி.. ஆனா இந்த நியூஸ் பார்த்துட்டு யாதவி சாத்விக்கை சந்திப்பான்னு எனக்கு தோணல.. எனக்கென்னமோ நீங்க இந்த வழியை விட்டுட்டு வேற ஏதாவது வழி யோசிச்சு சீக்கிரம் யாதவியை கண்டுப்பிடிக்கணும்.. இதுவரை நான் சாத்விக்கை ஃபாலோ செய்ய சொன்னதுக்கு காரணம் ஒருவேளை சாத்விக் அவங்க அப்பாக்கு தெரியாம யாதவியை மறைச்சு வச்சிருப்பானோன்னு தான்.. ஆனா இப்போ சாத்விக்கோட கல்யாண செய்தி அப்படி இல்லையோன்னு தான் நினைக்க வைக்குது.. சாத்விக்கோட கல்யாண விஷயம் பகிரங்கமா பேப்பர்ல, நியூஸ்லல்லாம் வந்திருக்குன்னா அதுல அவனுக்கு சம்மதம் இல்லாமையா இருக்கும்.. அதனால நீங்க யாதவியை கண்டுப்பிடிக்க வேற வழி யோசிங்க்க..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சார் யாதவி காணாம போய் 5 வருஷம் ஆகுது.. அவங்க சாத்விக் வீட்டுக்கு போன வரைக்கும் ஓகே.. ஆனா அதுக்கு பிறகு அவங்க எங்க போனாங்கன்னு தெரிஞ்சிக்க எவ்வளவோ முயற்சி செஞ்சாச்சு.. ஆனா இதுவரை எந்த க்ளூவும் கிடைக்கல.. இப்போதைக்கு சாத்விக்கையோ இல்ல சாத்விக் வீட்ல இருக்க யாதவியோட அப்பாவையோ யாதவி தொடர்பு கொள்ள வாய்ப்பு இருக்குன்னு தான் அவங்களை தொடர்ந்து வாட்ச் பண்றோம்.. மத்தப்படி வேற எல்லா வழியிலும் யாதவியை கண்டுப்பிடிக்கிற முயற்சியில் தோல்வி தான் கிடைச்சிருக்கு சார்..”

“இப்படி சொன்னா எப்படி பாலாஜி.. இந்த 5 வருஷமா அவங்களை சந்திக்க வரலன்னா அதுல அவளுக்கு இஷ்டம் இல்லன்னு தானே அர்த்தம்.. அப்படி இருக்கவ இனி எப்படி வருவா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாலாஜி.. நாட்கள் மாதங்களாகி, மாதம் வருஷங்களாவும் ஆகிடுச்சு.. இதுவரைக்கும் யாதவி எங்க இருக்கான்னு தெரியலன்னா, அப்போ அவ நல்லப்படியா இருப்பாங்கிற நம்பிக்கையே குறைஞ்சு போச்சு..”

“சார் அப்படி நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இல்ல.. யாதவி இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியாம இருக்கலாம்.. ஆனா அவங்களுக்கு நீங்க பயப்பட்ற அளவுக்கு விபரீதமா நடக்கல.. அப்படி ஏதாவதுன்னா நாங்க விசாரிச்ச வரைக்கும் எனக்கு தெரிய வந்திருக்கும்..”

“நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன் பாலாஜி.. இன்னும் ஒரு வாரத்தில் இங்க என்னோட வேலை முடிஞ்சுடும்.. அப்புறம் என்னோட புது ப்ராஜக்ட் விஷயமா நான் கொஞ்ச நாள் சென்னைல தான் இருக்கப் போறேன்.. அப்போ நேர்ல பார்த்து யாதவியை கண்டுப்பிடிக்க என்ன செய்யலாம்னு ஏதாச்சும் வழி யோசிப்போம்.. அதுவரைக்கும் நீங்களும் ஏதாவது முயற்சி செய்ங்க..” என்று பேசி அலைபேசி அழைப்பை துண்டித்த விபாகரன் இப்போது கவலையில் ஆழ்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.