(Reading time: 8 - 15 minutes)

டிடெடிக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்துபவன் தான் பாலாஜி.. யாதவியை தேடி கண்டுப்பிடிக்கும் பொறுப்பை விபாகரன் அவரிடம் தான் ஒப்படைத்து இருந்தான். இதுவரை அவன் சொல்வது போல் யாதவிக்கு ஏதாவது அசாம்பாவிதம் நடந்திருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் யாதவியின் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று புத்தி சொன்னாலும் காதல் கொண்ட மனது அதை கேட்க மறுக்கிறது.

18 வயது கூட முடியாத பக்குவில்லாத வயதில் காதல் என்று ஒருவனை தேடிச் சென்றாள். ஆனால் அவன் கொடுத்ததோ ஏமாற்றம்.. அந்த ஏமாற்றத்தை அப்போது அவள் மனம் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கும்? திரும்ப வீட்டுக்கு கூட வரவில்லையென்றால் அந்த மனம் ஏமாற்றத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி பாதிப்படைந்த மனதோடு இருந்த அவளது நலத்திற்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? இருந்தாலும் யாதவிக்கு ஏதும் ஆகியிருக்காது என்று நம்பிக்கை தான்  இதுவரை அவனை கொஞ்சம் நிம்மதியாக வைத்துள்ளது.

இருந்தும் நம்பிச் சென்றவன் ஏமாற்றுக் காரன் என்று தெரிந்ததும், வீட்டுக்கு வராமல் ஏன் இப்படி எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கிறாள். அப்படிப்பட்டவள் இந்த திருமண அறிவிப்பை பார்த்து வரமாட்டாள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அதேபோல் தன் தந்தையை பார்க்க யாதவி வருவாள் என்ற நம்பிக்கை எப்போதுமே அவனுக்கு இருந்ததில்லை. முதலில் தன் தந்தை சாத்விக்கோடு இருக்கிறார் என்பதே அவளுக்கு தெரிந்திருக்காது. அப்படியே தந்தை எங்கே இருக்கிறார் என்று தெரிந்தாலும், அவரை காண ஓடி வருவதற்கு அவர் ஒன்றும் பாசமான பொறுப்பான தந்தை அல்லவே.. அவர் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால், யாதவிக்கு ஏன் இந்த நிலைமை..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தன் மகள் காணாமல் போனதற்கு காரணம் சாத்விக் தான் என்று தெரியாமலேயே அவனுடன் இருக்கிறார் அவர்.. அப்படியே தெரிந்தால் மட்டும் என்ன செய்வார்? என் மகள் காணாமல் போனதற்கு நஷ்டஈடு வேண்டுமென்று கேட்டு தனக்கு லாபத்தை தேடிக் கொள்ளும் பாசக்கார தந்தை தானே அவர்.. அப்படியிருக்க அவரை யாதவி எப்படி தொடர்புக் கொள்ள முயற்சிப்பாள். ஆனால் அவளை எப்படி கண்டுபிடிப்பது? ஒன்றும் புரியாத நிலை தான் விபாகரனுக்கு என்றால், சாத்விக்கும் அதே நிலையில் தான் இருக்கிறான்.

அவளை தொலைத்த அந்த நாள்.. அவள் மனதை கஷ்டப்படுத்திய அந்த நாள்.. அவள் திரும்ப வீட்டுக்கு தான் செல்வாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ எங்கு சென்றாள் என்று தான் தெரியவில்லை. ஒருவேளை ஒரே உறவான அவள் தந்தையை சந்திக்க அவள் முயற்சி செய்யலாம் என்ற நம்பிக்கையில் தான் அவன் பன்னிரை தன்னுடனே வைத்திருக்கிறான். ஆனாலும் இத்தனை நாளாக அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

ஆரம்பத்தில் அவனும் மறைமுகமாக டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலம் யாதவியை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தான். ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்று எந்த தகவலும் இல்லை. ஆனால் தன்னால் தான் யாதவிக்கு இப்படி ஒரு நிலை என்று தெரிந்த போது அவனால் அவள் எப்படியோ போகட்டும் என்று அமைதியாக இருக்க முடியவில்லை. அவளுக்கு ஏதாவது விபரீதமாக நடந்துவிட்டதோ என்று மனதில் எப்போதும் பயம் சூழ்ந்துள்ளது நிஜம்.. அதுமட்டுமில்லாமல் அவள் மேல் காதல் கொண்ட மனது அவளின் நலத்தை அறியாமல், அவனுக்கென ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. ஏனெனில் அவனது வாழ்க்கையே அவள் தானே.. அதை புரிய வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை அவன் தவறவிட்டிருந்தான். மறுபடியும் தன் மனதை யாதவிக்கு புரிய வைக்கும் வாய்ப்பு அமையுமா? யாதவியை திரும்ப பார்க்க முடியுமா? என்று சாத்விக் ஏங்கிக் கொண்டிருந்தான்.

ப்ரண்ட்ஸ் முதல் அத்தியாயத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அத்தியாயத்திலும் விபாகரன், சாத்விக்கை தான் பார்த்திருப்பீங்க.. இந்த கதையிலும் நிறைய காதாப்பாத்திரங்கள் உண்டு. அடுத்த அத்தியாயத்திலிருந்து அவங்களையெல்லாம் பார்ப்போம்.. இன்னும் அதிக பக்கங்கள் கொடுக்கவும் முயற்சிக்கிறேன்.. உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. நன்றி.                                                 

மையல் தொடரும்..

Episode # 01

Episode # 03

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.